Wednesday, October 10, 2012






"அந்த நாட்களில்" மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ( ஆண்களுக்கு அட்வைஸ் )


"அந்த நாட்களில்"  பெண்களின் ஹார்மோனில் மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களின் மனநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு சிடுசிடுவென இருப்பார்களாம். ( அட யார்ரா இவன் எங்க பொண்டாட்டியெல்லாம் எப்பவுமே சிடுசிடுவெனதான் இருப்பார்கள் என்று சொல்லுபவர்கள் எல்லாம் ஒரு ஒரமாக ஒதுங்கி கொள்ளுங்கள் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் மக்காஸ் அந்த கடவுளே வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது )அந்த நேரத்தில் ஆண்கள் ( கணவன், காதலன், தோழர்கள் ) தங்கள் வாயை திறந்து ஏதாவது பேசி வாங்கி கட்டி கொள்வது என்பது அநேக இடத்தில் நடப்பதுதான். சில நேரங்களில் வாங்கி கட்டி கொள்வதுமட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய சம்பவங்களும் ஏற்படும். அதனால் அந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி நான் படித்ததை உங்களுக்கு இங்கு அட்வைஸாக தருகிறேன்.


நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அல்லது அவர்களை பார்த்ததும்

என்ன டின்னர் இன்று ரெடி பண்ணியிருகிறாய் என்று கேட்டால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இன்று டின்னர் ரெடி பண்ண நான் உதவுகிறேன் என்று சொன்னால் அது  பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இன்று எந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என்று கேட்டால் அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)

அடுத்தாக

.....நீ அந்த வீணாப்போன நைட்டியை போட்டு இருக்கிறாயா என்று சொன்னால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இந்த ரெட்கலர் நைட்டி நன்றாக இருக்கிறது உனக்கு என்று சொன்னால் அது  பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் டையர்டாக இருக்கும்போது மிக அழகாக இருக்கிறாய் என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)



இந்த இதை சாப்பிட்டு தொலை  என்று சொன்னால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில் இந்தா இந்த ஆப்பிளை சாப்பிடு  என்று சொன்னால் அது  பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இந்தா  (ஒயின் அருந்து இது இந்த கால பெண்களுக்கு மட்டும்) சூடான ஹார்லிக்ஸ் அருந்து என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)

இன்று முழுவதும் சும்மா டிவியே பார்த்திட்டு இருந்தாயா என்று கேட்டால் அது மிக ஆபத்து (DANGEROUS)
அதற்கு பதில்  நீ ஒன்றும் அதிகம் வேலை செய்யவில்லையே என்று கேட்டால் அது  பாதுகாப்பு (SAFER):
ஆனால் அதற்கு பதில் டார்லிங்க் இந்த ஷோபாவில் உட்கார்ந்து நீ டிவி பார்ப்பதே தனி அழகு லவ் யூடா கண்ணா இருக்கிறாய் என்று சொன்னால்அது மிகமிக பாதுகாப்பு(SAFEST)


மக்களே நான் முன்றாவதாக சொல்லி இருக்கும் மிகமிக பாதுகாப்பு(SAFEST) ரூலை நீங்கள் எப்போதும் கடைபிடித்தால் உங்கள் உயிருக்கு பயப்படத் தேவையில்லை அது மட்டுமல்லாமல் உங்கள் துணைவியின் அன்பு என்றும் உங்களுக்கு கிட்டும்.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


 


 

 

10 Oct 2012

14 comments:

  1. நீங்கள் சொல்லிச் செல்வதைப்போல்
    மூன்றாவதே முதன்மையானது
    பயனுள்ள பதிவை சுவாரஸ்யமாகத் தருவதில்
    உங்கள் நிகர் நீங்கள் தான்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்ததை புரிந்து பாராட்டி கருத்து தெரிவித்தற்கு மிகவும் நன்றி

      Delete
  2. பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கிய விதம் அருமையப்பா. இதையே நாமளும் கடைப்பிடிச்சுட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies

    1. அப்ப இது வரை நீங்க கடைபிடிக்கலையா அப்ப நீங்க் ரொம்ப தைரியமான ஆளுதான் நண்பரே

      Delete
  3. மஞ்சள், பச்சை நிறங்கள் படிக்க மிகவும் சிரமமாக இருக்கின்றன. [தலைப்புக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்கின்றன!! இருக்கட்டும்......... இருக்கட்டும்........... ]

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னபடி கலரை மாற்றிவிட்டேன். தலைப்புகள் ஒரு மாதிரியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சரக்குகள் எப்போதும் நன்றதாகவே இருக்கும்.

      Delete
  4. மதுரைத்தமிழன் அவர்களுக்கு நல்ல அனுபவமுன்னு நினைக்கிறேன்,
    வாழ்த்துக்கள் நண்பரே!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் இல்லையென்றால் வாழ்க்கையில் மிக கஷ்டப்பட வேண்டும். அதனால்தான் அனுபவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்காக இதை பதிவாக இட்டேன்

      Delete
  5. கவலைக்கு மருந்து ஆறுதல் தான்.
    அதைச் சரியான நேரத்தில்
    சரியான படி எந்த கணவர்களும் போடடு விடுவதில்லை
    என்பது மனைவிகளின் கணிப்பு.

    நீங்களாவது சொல்லிக் கொடுக்கிறீர்களே...
    நன்றி “உண்மைகள்“

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆகி கொஞ்சம் அவரும் வரை எல்லா கணவர்களும் கவலைக்கான மருந்தை போட்ட்டு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதுவேதான் தினசரி நடவடிக்கை என்றால் அவர்கள் அதை பற்றி கவலைப்படுபதை குறைத்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை

      Delete
  6. இந்தப் பதிவு என் டேஷ் போர்டில் வரவில்லையே! எச்சரிக்கைப் பதிவு சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நிறைய பதிவர்களின் பதிவுகள் கடந்த சில நாட்களில் எனது டாஷ் போடிலும் வரவில்லை நண்பரே

      Delete
  7. கேட்டு நடந்து கொண்டால் கணவர்களுக்கு நல்லது!!!

    ReplyDelete
  8. என்னங்க ஒரு வேளை அவர்கள் கேட்டு நடக்கவில்லை என்றால் பூரி கட்டையை எடுத்து விடுவீர்களோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.