Tuesday, September 25, 2012



மதுரைக்கார கணவர்கள் மிக பாசக்கார கணவர்கள் ( வயதுக்கு வந்த பெண்களும் படிக்கலாம்)


 
ஒரு சென்னை பெண் ,ஒரு கோயம்புத்தூர் பெண், ஒரு மதுரைப் பெண் மதிய உணவு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்

அப்போது சென்னை பெண் சொன்னாள், "நான் என் கணவரிடம் , இனிமேல்  என்னால் வீட்டை சுத்தம் செய்ய முடியாது. வீடு சுத்தமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் நீங்கள்தான் சுத்தம் செய்ய வேண்டுமென்று சொன்னேன். முதல் நாள் ஒன்றும் பார்க்கவில்லை, இரண்டாவது நாளும்  ஒன்றும் பார்க்கவில்லை மூன்றாவது நாள் வீடு கண்ணாடி போல பளபளவென்று  ஜொலித்ததை பார்த்தேன் என்று சொன்னாள்.

அடுத்தாக கோயம்புத்தூர் பெண் சொன்னாள், 'நான் என் கணவரிடம் , இனிமேல் துணியை என்னால் துவைக்க  முடியாது.  சுத்தமான துணி  வேண்டுமென்று  விரும்பினால் நீங்கள்தான் துவைத்து கொள்ள வேண்டுமென்று சொன்னேன். முதல் நாள் ஒன்றும் பார்க்கவில்லை இரண்டாவது நாளும்  ஒன்றும் பார்க்கவில்லை மூன்றாவது நாள் துணிகள் துவைத்து சுருக்கம் ஏதுமில்லாமல் அயர்ன் செய்து வைக்கப்பட்டிருந்தது என்றாள்

இறுதியாக மதுரைப் பெண் சொன்னாள், 'நான் என் கணவரிடம்  இனிமேல் என்னாள் சமைக்க முடியாது . ஆனால்  சாப்பாடு  வேண்டுமென்று விரும்பினால் நீங்கள்தான் சமைத்து கொள்ள வேண்டும் அல்லது உங்கள் அம்மாவிடம் சொல்லி சமைத்து சாப்பிட்டு கொள்ள வேண்டுமென்று சொன்னேன். முதல் நாள் ஒன்றும் பார்க்கவில்லை இரண்டாவது நாளும் ஒன்றும் பார்க்கவில்லை மூன்றாவது நாள்தான் என் கண்ணை சிறிதளவு திறந்து பார்க்க முடிந்தது என்றாள்.


மதுரைக்கார பயபுள்ளைங்க மிக நல்ல பாசக்கார பயபுள்ளைங்க.....ஆனா வயிற்றுக்கு சோதனை வந்தா இப்படிதான் செல்லமா ஏதாவது பண்ணிபுடுங்க.....


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
(படித்ததை ரசித்ததை என் வழியில் உங்களுக்கு ரசிக்க தருபவன் )
25 Sep 2012

15 comments:

  1. அட அட எம்புட்டு பாசம்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புரியுது நம்ம பாசம் ஆனா இந்த பொண்ணுகளூகு புரியலையே நண்பா

      Delete
  2. ஆஹா..மதுரை ஆண்மக்களின் புகழை,திறனை.
    வானளாவ உயர்த்திவிட்டீர்களே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. யாருக்கு தெரியும் உள்ள வடிவேலு கோவை சரளா கூத்து நடந்தாலும் நடக்கும் .

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்படியெல்லாம் சகோ வீட்டில் நடப்பதை வெளி உலகத்திற்கு சொல்லலாமா?

      Delete
  4. அவியங்களாவது மூணாம் நாள் கண்திறந்து பார்த்தாங்க!
    மதுரைகாரர் எப்போ எந்திரிச்சி நடந்தார்?!

    ReplyDelete
    Replies
    1. மதுரைகாரர் எப்பவுமே இனிமேல் நடக்க முடியாது

      Delete
  5. முதல் வரவுக்கு நன்றி.

    பிடியுங்க விருந்தை! பத்மாவின் தாமரை மதுரை [மாப்பிள்ளை பட்டபாடில்]

    ReplyDelete
  6. கெத்த காட்டிட்டிங்க போங்க

    ReplyDelete
    Replies
    1. நண்பா வெளியே கெத்தா காண்பித்தாலும் உள்ளே எலும்பெல்லாம நொருங்கிடுச்சுப்பா?

      Delete
  7. Replies
    1. சசிகலா சரியாத்தான் உண்மையை சொன்னாங்க அடிக்கிறது பெண்கள்தான் ஆண்கள் இல்லையென்று அதை நீங்களும் வழிமொழிந்து உண்மையை ஒத்துகொண்டதற்கு நன்றி. இந்த பதிவின் மூலம் அடிப்பது பெண்கள்தான் என்று பெண்கள் மூலமாக இறுதி செய்யப்பட்டுள்ளது....ஹீ.ஹீ.ஹீ மிகவும் நன்றி

      இப்படிக்கு பெண்களிடம் அடிவாங்கும் அப்பாவி ஆணகள்

      Delete
  8. @சசிகலா, சந்திரவம்சம்,தமிழ்செல்வி


    வீட்லதான் வடிவேல் மாதிரி வாங்கிகட்டிகிட்டு கொஞ்சம் மாத்தி யோசிச்சு ஏதோ எழுதினா அது படிச்சுட்டு போகாமா இங்க வந்தும் வீட்டுகாரம்மா விட்ட இடத்தில் இருந்து நீங்களும் இந்த அப்பாவி மனிதனை வூடுகட்டி விரட்டி விரட்டி அடிக்கிரீங்களே இது நியாமா....ஹும்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  9. நான் ஏதோ நிஜத்தைத் தான் எழுதிட்டீங்கன்னு நினைச்சேன், பின்னூட்டத்தில் சில சகோதரிகள் சொன்னதப் பார்த்தப் புறம்தான் உண்மை விளங்குச்சு!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.