Wednesday, October 5, 2011





ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் காலமானார்

இயந்திர உலகில் நிரந்தர தூக்கத்தை தேடி ஸ்டீவ் ஜாப் பயணம்....





நியூயார்க், ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வது வயதில் காலமானார். புற்றுநோய் என்கிற கொடிய நோய் எவருக்கும் உயிர்ப் பிச்சை கொடுக்காது. இந்த புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் ஏப்.1., 1976ல் உருவாக்கினர். அதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர். இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்குவது. இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.இவர் புதன்கிழமை இறந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து கம்பெனியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் என்று தெரிவித்துள்ளது.




Steve said "Being the richest man in the cemetery doesn't matter to me … Going to bed at night saying we've done something wonderful … that's what matters to me."– Wall Street Journal 1993








இயந்திர உலகில் நிரந்தர தூக்கத்தை தேடி ஸ்டீவ் ஜாப் பயணம்....
05 Oct 2011

6 comments:

  1. உண்மையில் மிகப் பெரிய இழப்புதான்
    அதுவும் இத்தனை குறைந்த வயதில்..
    பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்த சந்தோஷத்தோடு
    அவர் ஆன்மா சாந்தியடையட்டும் த.ம 1

    ReplyDelete
  2. நல்லவற்றை செய்த திருப்தியில்....

    என் ஆழ்ந்த அஞ்சலிகள்.....

    ReplyDelete
  3. college drop out!!!
    really great man....

    ReplyDelete
  4. பேரும் புகழும் சொத்தும் சுகமும் காலன் முன் நிற்பதில்லை என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை ஒரு உதாரணம். மனதை பாதித்த மரணம்.

    ReplyDelete
  5. என் ஆழ்ந்த அஞ்சலிகள்.....

    அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

    Er.கணேசன் / கோயம்புத்தூர்

    ReplyDelete
  6. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

    கணேசன்/கோயம்புத்தூர்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.