Saturday, December 2, 2023

 தண்ணீரில் தள்ளாடுகிறதா சென்னை?

 




தண்ணீர் அதை மழை தண்ணியாக இருந்தாலும் டாஸ்மாக தண்ணியாக இருந்தாலும் சென்னை தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது.


ஒரு காலத்தில் நான் தமிழகத்தில் வசித்த போது  சென்னையில் மழைக்காலத்தில்  குடிசை வாழ் மக்கள் வாழும் பகுதிகள் பாதிக்கப்பட்டன. கடுமையான புயலின் போது நகரத்தின் தாழ்வான சில பகுதிகளும் குடிசை வாழ் மற்றும் கூவம் நதிக்கரையோரம் மக்கள் வாழும் பகுதிகள் மட்டும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் மூலம் அறிந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போது சென்னையில்  பரவாலான  இடங்களில் மழைக்காலத்தில் கடுமையான நீர்த்தேக்கத்திற்கும், வெள்ளத்திற்கும் ஆளாகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் முக்கியமாகச் சிட்டி ப்ளானிங்க் துறையில் சரியான திட்டமிடுதலும் அரசின் சட்ட திட்டங்கள் சரியான முறையில் வடிவமைக்கபாடாமலும் அப்படியே சட்டங்கள் இயற்றினாலும் அதைப் புரிந்து கொண்டு நடை முறைப்படுத்தாமல் இருந்ததும் மற்றும் சுயநலவாதிகளின் தவறான செயல்களையும் சொல்லலாம்


மோசமான நகர்ப்புற திட்டமிடல்: சமீபத்திய ஆண்டுகளில் நகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது, இது சரியாகத் திட்டமிடப்படாத புதிய பகுதிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
எங்கே வீடு கட்டலாம் எப்படிக் கட்டலாம் எத்தனை வீடுகளை  அலுவலங்களை கட்டலாம் எவ்வளவு உயரம் கட்டலாம் என்ற சரியான திட்டமிடுதல்  அவசியம்... ஆனால் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எல்லா இடங்களிலும் வீடுகள் அலுவலங்களை கட்டிவிட்டார்கள் அது நீர் நிலை இருந்த பகுதியானாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதன் மேலேய்யே கட்டி விட்டார்கள் இதற்கு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை கூறாமல் பொது மக்களையும்  குறை சொல்லாம் அவர்களும் இதற்குக் காரணம் மானவர்களே  

நகரின் இயற்கையான நீர்வழிகள் பல கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் செல்லும் இடத்தின் அளவு குறைந்துள்ளதுடன், வாய்க்கால்களைப் பராமரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் பெய்யும் கனமழையைச் சமாளிக்க முடியாமல் நகரின் வடிகால் அமைப்பு உள்ளது. ஏனென்றால், வடிகால்களில் அடிக்கடி குப்பைகள் மற்றும் வண்டல் மண் அடைக்கப்பட்டு, விழும் நீரின் அளவைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

 இந்த காரணிகளின் விளைவாக, கடந்த ஆண்டுகளில் சென்னை பல பெரிய வெள்ளத்தைச் சந்தித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது, நகரம் பல அடி நீரில் மூழ்கியது. இந்த வெள்ளம் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குப் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது, மேலும் அது பல உயிர்களைக் கொன்றது.
 



இதற்கு யார் காரணம் என்று கேட்டால் அரசியல் கட்சிகள் மாற்றுக் கட்சிகள் மீதும்  மற்றும் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மீதும் அதிகாரிகள் மக்கள் மீதும் மக்கள் அரசியல் தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டிக் கொண்டு ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறார்களே ஒழிய அதை உடைத்து வெளிவர தங்களின் அறிவைப் பயன்படுத்துவதில்லை

 ஒட்டு மொத்த சமுகத்தையே இதற்குக் குறை சொல்லாம்.. ஆனால்   சங்கிகள் அப்படிச் சொல்லாமல் இதற்கு முந்தைய அரசுகள் மட்டும்தான் காரணம் போலக் கதறிக் கொண்டு இருக்கிறார். இவர்களிடம் ஆட்சி இருந்தால் தமிழகத்தை தேனாறும் பாலாறும் ஓடும் மாநிலமாக மாற்றிவிடுவதுவது போல ஒரு பேச்சு பேசுகிறார்கள் இவர்கள் ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லாம் பிரச்சனைகளை இல்லாதது மாதிரி தமிழகத்தில் மட்டும்தான் பிரச்சனைகள் இருக்கிறது மாதிரி  குரங்குகள் போலக் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள்

இதற்கு முந்தைய அரசுகள் எப்படிச் செயல்பட்டு இருந்தாலும்  இந்த மழைக்கால பிரச்சனிகளை சமாளிக்க ஆளும் அரசு முடிந்த நடவடிக்கைகளை எடுத்துத்தான் வருகிறது என்பது கவனிக்க தக்கது. உடனேயே  பிரச்சனை முழுவதையும் தீர்த்து விட முடியாது என்பது மூளை உள்ளவர்கள் எல்லோரும் நங்கு அறிவார்கள்

இந்த மழையின் போது தமிழக அரசு அதிகாரிகள் தொழிலாளிகள் அமைச்சர்கள் சென்னை மேயர் பலரும் தொடர்ந்து களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கின்றன அவர்கள் யாரும் வீட்டின் உள் உட்கார்ந்து செய்திகளை வெளியிடவில்லை ஆனாலும் முன்றைய  காலக் கட்டத்தைவிட இப்போது மிகச் சிறப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இருந்தாலும்  கணிசமான அளவு பிரச்சினைகள் உடனுக்குடன்  தீர்க்கப்பட்டு வருகின்றன என்பது கண் கூடாகத் தெரிகிறது.  இதன் மூலம் அவர்கள் மேலும் பல நடப்பு அனுபவங்களைக் கொண்டு வருங்காலத்தில் இன்னும் மிகச் சிறப்பாகச் செயல்படலாம்

அதற்காக அவர்களுக்குப் பாராட்டி ஊக்கம் தருவதுதான் நமது செயல் அதைவிட்டு விட்டு இப்படி முயற்சி செய்பவர்களையும் குறை கூறிக் கொண்டு இருந்தால் செய்பவர்களும் சோர்ந்து போய் இவர்களுக்கு என்ன நல்லது செய்தாலும் நன்றியுணர்வு கிடையாது என்று முடங்கியும் போகலாம்

அதனால் மக்களே உங்களுக்கு எது வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் மேலும் அதற்காக வழிகளில் இறங்க வேண்டும்


சென்னையின் வடிகால் பிரச்சனைகளைத் தீர்க்க பல விஷயங்கள் உள்ளன.  அவைகள் இவற்றில் அடங்கும்:

    வடிகால்களைத் தூர்வாருதல் மற்றும் சுத்தம் செய்தல்:  

நகரின் வடிகால்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, அவற்றை அடிக்கடி தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். இது உழைப்பு மிகுந்த பணி, ஆனால் வெள்ளத்தைத் தடுப்பது அவசியம். அதனால் இதை அடிக்கடி செய்துவர வேண்டும்

  ஆக்கிரமிப்பு அகற்றம்:  

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தாராளமாகச் செல்ல வேண்டும். இதற்கு சில கட்டிடங்களை இடிப்பது தேவைப்படலாம், ஆனால் நகரத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற திட்டமிடல்:

வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு புதிய வளர்ச்சிகள் திட்டமிடப்பட வேண்டும். உயரமான இடத்தில் கட்டிடம் கட்டுவதும், தாழ்வான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும்.


  வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்:

மழைக்காலத்தில் பெய்யும் நீரின் அளவைக் கையாள நகரின் வடிகால் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். இதற்காக புதிய வாய்க்கால்களை அமைக்கவும், ஏற்கனவே உள்ள வாய்க்கால்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, வெள்ளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெள்ள அபாயத்தைக் குறைக்க அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். வடிகால்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், குப்பை கொட்டுவதைத் தவிர்க்கவும் மக்களை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சென்னையில் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும், நகரவாசிகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் அரசு உதவ முடியும்.



ஆயிரம் குறைகள் சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஆனால்  நல்லது ஒன்றை ஒருவர் செய்யும் போது அவர்களை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும் அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் சென்னை மேயர் ப்ரியாவிற்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. அருமையாக சொன்னீர்கள். வடிகால் திட்டம் சரியாக திட்டமிட பட்டால்
    நல்லது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
    நல்ல செயல்களை பாராட்டுவோம். அது மேலும் நல்லது செய்ய ஊக்கம் தரும்.

    ReplyDelete
  2. ஏம் ஓய்... மாமாஸ் மாமீஸ் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறாங்களே...

    ReplyDelete
    Replies
    1. அவாள் என்னைக்குவோய் ஒத்துக் கொண்டிருக்கிறாள்

      Delete
  3. இங்கே உட்கார்ந்து கொண்டு சுடலையும் அவன் கோஷ்டியும் அடிக்கும் கொள்ளையை பற்றி ஒன்னும் தெரியாமல் எதையோ பிதற்ற கூடாது . தினமும் அவர்கள் யோசிப்பது எல்லாம் எப்படி கொள்ளையடிப்பது எப்படி விதவிதமாய் வேஷம் போட்டு மோடி மாதிரியே நகர்வலம் வருவது மாதிரியான செயல்கள்தான் . சென்னையில் இப்போ பீடாவாயன்கள்தான் நிரம்பி வழியறார்கள் .சீக்கிரமே சென்னை ஹிந்தி நகரமாக மாறிவிடும்
    போனவாரம்தான் சென்னைக்கு போய் விட்டு வந்தேன்

    ReplyDelete
    Replies

    1. இந்த பதிவு அவர்கள் கொள்ளை அடிக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய பதிவு அல்ல.. இது மழைநீர் தேங்கிடப்பது பற்றிய பிரச்சனை பதிவு.. நிச்சயம் இதற்காக போடப்பட்ட திட்டத்திலும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் கள்வாடி இருப்பார்கள் அதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் திட்டம் கொஞ்சம் வெற்றி அடைந்திருக்கிறது என்பதை நாம் ஒற்றுக் கொள்ளவேண்டும்

      Delete
  4. வருடம் தோறும் வரும் துயரம்.
    நன்றாக சொல்லி உள்ளீர்கள். மழை நீர் வடிகால் கட்டமைப்பு அவசியம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.