Monday, December 18, 2023

 சுகர் பேஷண்ட் சாப்பிட அரிசி சேர்க்காத ஆரோக்கியமான இட்லி செய்யும் முறை

 

avargal unamigal




சுவையான இட்லி அதுவும் அரிசி சேர்க்காமல் செய்தால் ,  சுகர் பேஷண்ட்டுகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்தானே?

என் வீட்டில் நான் செய்து சாப்பிடும் இந்த இட்லியை நான் உங்களுக்குச்  சொல்லித் தருகிறேன் மிக எளிது. உடலுக்கு மிகவும் நல்லதும் கூட...

இந்த  ரெசிப்பிக்கு  தேவையான பொருட்கள்:

1 கப் உளுத்தம் பருப்பு

1 கப் மூங்தால் ( தோல் நீக்கிய பாசிப்பருப்பு) பருப்பு

1/4 ஸ்பூன் வெந்தயம்

சுவைக்கு  ஏற்ப  உப்பு

செய்முறை:

உளுத்தம்பருப்பு மற்றும் பாசிப் பருப்பை  நன்றாகக் கழுவிக் குறைந்தது  4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

அதன் பின்  உப்பு சேர்த்து ஒரு மென்மையான பேஸ்டாக அரைத்து எடுக்கவும்.

அரைத்து  எடுத்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து 8 மணி நேரம்  புளிக்க வைக்கவும். குளிர்ந்த காலங்களில் இதற்கு அதிக நேரம் தேவைப்படலாம்.  இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு இது  பிரச்சனை இல்லை . ஆனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் ஒவனை ப்ரீ ஹீட் செய்து அதில் வைக்கலாம்.

8 மணி நேரம் கழித்துப்  புளித்த மாவு  நமக்கு இட்லி செய்யத் தயாராக இருக்கும்.

அதன் பின் இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 20 நிமிடங்கள்  ஆவியில் வேகவைக்கவும்.

அது வெந்த பின் அதை முழுமையாக ஆறவிட்ட பின் எடுக்கவும் இல்லையென்றால் தட்டிலே ஒட்டிக் கொள்ளும்.

அதன் பின் உங்களுக்குப் பிடித்த சட்னியுடனோ  அல்லது  இட்லிப் பொடியுடனோ மற்றும் சாம்பாருடனோ சாப்பிடுங்கள்


டிப்ஸ் :

எங்கள் வீட்டில்  மாவு அரைக்கும் போது  நான் பொதுவாக மேலே குறிப்பிட்ட அளவீட்டை விட இருமடங்காக ஊறவைப்பேன். காரணம் முதல் நாள் இட்லியும் மறுநாள் தோசையும் செய்வேன் .தோசைகள் மிக  சாஃப்ட்டாக வரும்

 வேகவைத்த இட்லிகளை அகற்றும் முன் அது நன்கு ஆறிய பிறகு எடுக்கவும்

 ஒருமுறை வேக வைத்தால், நாள் முழுவதும் மென்மையாக இருக்கும்.

இட்லி செய்த பிறகு, மீதமுள்ள மாவை ப்ரிஜ்ஜில்  வைக்கவும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்
"ஹோம் குக்கிங்க் ஸ்பெஷலிஸ்ட்" ஹீஹீஹீ

1 comments:

  1. சூப்பர் செய்முறை, மதுரை.

    நானும் செய்வதுண்டு. பாசிப்பருப்பும் பச்சைப்பயறும் (தோல் ஃபைபர்) சேர்த்தும் செய்வேன். ப்ரோட்டின் இட்லி!!! இப்ப மகனும் நம்ம குருப்புலா!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.