உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, June 6, 2016

மனைவியை சந்தோஷப்படுத்த ஒரு நல்ல செய்திமனைவியை சந்தோஷப்படுத்த ஒரு நல்ல செய்தி

போலீஸ் ஆபிஸர் : ஒரு நல்ல போலீஸ் ஆபிஸர் கெட்டவங்களை எல்லாம் பிடிச்சு ஜெயிலில் போட்டாலும் அவர் வீட்டிற்கு போனால் மனைவியால் ஹவுஸ் அரஸ்ட் பண்ணப்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாதுதானேபேராசிரியர் : அவர் என்னதான் ஆராய்ச்சி படிப்பு எல்லாம் படித்து முடித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு லெக்சர் கொடுத்தாலும் அவர் வீட்டிற்கு வந்தால் மனைவியின் லெக்சரை தினமும் கேட்டால்தான் சாப்பாடுகிடைக்கும்

முதலாளி(CEO:) ஒரு பெரிய கம்பெனியின் CEO:வாக இருந்து அவருக்கு கிழ் ஆயிரத்திற்கும் மேல் வேலைக்காரர்கள் வேலை செய்து வந்தாலும் தன் வீட்டிற்கு வந்த பின் தன் மனைவி சொல்படி கேட்கும் வேலைக்காரனாகவே வீட்டில் இருக்கிறார்கள்

நீதிபதி : நாட்டிற்கே நீதி வழங்கினாலும் அவர் வீட்டிற்கு வந்தால் மனைவியிடம் நீதிக்கு கெஞ்சதான் வேண்டி இருக்கிறது.

செஃப் : ஹோட்டலில் தலமை செஃப் ஆக இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு தாயாரித்து கொடுத்தாலும் தன் வீட்டிற்குள் வந்த பின் மனைவியின் தலைமையில் தான் உணவு தாயாரிக்கப்படுமே தவிர செப்ஃபின் தலமையில் அல்ல

தலைவர்(கலைஞர்) தமிழகத்திற்கே தலைவராக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பின் மனைவி(கள்) சொல் கேட்டுதான் ஆட வேண்டி இருக்கிறது..


ஆகவே பெண்களே நீங்கள் மிக சிறந்த பதவிகளை தக்க வைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. பிளாக்கர்கள் (மதுரைத் தமிழன்): என்னதான் சொந்தமாக பதிவுகள் எழுதினாலும், மனைவியிடம் காட்டிய அனுமதி பெற்ற பின்புதான் பதிவை வெளியிட முடிகிறது.

  ReplyDelete
 2. இந்த பதிவை உங்க மனைவி படிச்சா உங்களுக்கு பூரிக்கட்டை அடி கொடுக்கிறதை விட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்! அருமை!

  ReplyDelete
 3. பெண்களின் பெருமையைப் பேசும் பதிவு.

  ReplyDelete
 4. ம்.... இதை உங்கள் மனைவியிடம் காண்பித்த பிறகு தானே வெளியிட்டீர்கள். பூரிக்கட்டை பறந்திருக்குமே!

  ReplyDelete
 5. ரொம்ப காயமோ அதான் இப்படிப் போட்டு ....இனி பூரிக்கட்டை அடி இருக்காதுனு சொல்லுங்க......சகோதரி பார்த்தாங்களா ...பெருமை அடைந்திருப்பாங்களே!! விருந்து கிடைச்சிருக்குமே...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog