சென்னையில் புத்தக கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. அங்கு சென்று
என்ன புக் வாங்குவது யார் எழுதியதை வாங்குவது என்ன விலையில் வாங்குவது என்று பலருக்கும்
குழப்பமாக இருக்கும். அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அங்கு பரபரப்பாக விற்பனையாகும்
புத்தங்களின் லிஸ்ட்டை இங்கு வெளியிட்டுள்ளேன் அதை வாங்கி படித்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
ஒரு வேளை இந்த
புத்தகங்கள் விற்று தீர்ந்துவிட்டால் 25 டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு
இந்த அனைத்து புத்தகங்களும் அனுப்பபடும்.
உங்களுக்கு நேரம்
இருந்தால் எந்த புக் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லிச் செல்லுங்களேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அருமை!
ReplyDeleteவரவிற்கும் ரசிப்பிற்கும் நன்றி கவிப்ரியன்
Deleteகணேஷ் சார், உங்களுக்குப் போட்டியாக wrapper வடிவமைப்பில் மதுரைத் தமிழன் அசத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு புத்தக வடிவமைப்பிற்கு ஆர்டர் குவியப் போகிறது.
ReplyDeleteகலக்கல்!
"பூரிக்கட்டை தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி" என்ற நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
கணேஷ் சார் கூட என்னை ஒப்பிடாதீர்கள் அவர் புரோபஷனல் கிராபிக்ஸ் ஆர்டிஸ்ட் நான் பொழுது போக்கிற்காக கிராபிக்ஸ் மிக்ஸ் பண்ணுபவன். சுய ஆர்வத்தால் மனதிற்கு வந்தபடி மிக்ஸ் செய்பவன். அவ்வளவுதாங்க
Deleteவழக்கமாக எல்லோரையும் கலாய்த்து இறுதியில் என்னையும் கலாய்த்து பதிவு போடுவேன் அது எப்படியோ அவசரத்தில் மிஸ் ஆகிவிட்டது நேரம் இருந்தால் பூரிக்கட்டையில் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி என்று போடுகிறேன்
நண்பர் முரளி! அட அட நாங்க சொல்ல நினைச்சத நீங்க சொல்லிட்டீங்களே!!! அதாங்க தமிழனை ஒரு புத்தகம் போடுங்க..."பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்க தமிழனின் ஐடியாஸ்" என்ற தலைப்பில் என்று எழுத நினைத்ததை......
Deleteஹஹ்ஹஹ்ஹ் கலக்கல் புத்தகங்கள்! தமிழா நீங்கள் எழுதுபவர்களுக்கு ஐடியா / தலைப்பு கொடுத்துவிட்டீர்கள். புத்தகங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
Deleteஹை ஆவலுடன் காத்திருக்கின்றோம் தங்களின் புத்தகம் "பூரிக்கட்டையில் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி"
Deleteதினமும் தவறாமல் அடி வாங்கி கொண்டிருக்கும் என்னிடம் அடிவாங்காமல் இருப்பது எப்படி என்று கேட்டால் என்ன சொல்லுவது அதற்கு பதிலாக அடிவாங்கினாலும் அடி வாங்காமல் இரூப்பது போல இருந்து சிரிப்பது எப்படி என்று கேட்டால் அதற்கு பக்கம் பக்கமாக எழுதலாம்
Deleteஅய்யா உங்க லொள்ளுக் ஒரு அளவில்லையாய்யா..?
ReplyDeleteஆனாலும் உங்கள் குறும்பு ரசிக்கும்படிதான் இருக்கிறது - அவ்வளவும் உண்மை என்பதால்.
(ஆமா.. இதுல காமெடிய எங்க இருக்கு?- எல்லாமே சீரியஸால்ல இருக்கு?)
அய்யா இது காமெடிதான் ஆனால் அதை சீரியஸ் பதிவு என சொல்லி என்னை ஊர்பக்கம் வரவிடாம பண்ணிடாதீங்க..... நான் அப்பாவிங்க
Deleteஉங்கள் கற்பனை வளம் அப்பப்பா என சொல்ல வைக்கிறது.
ReplyDeleteஉங்கள் புத்தகம் விரைவில் வெளி வர வாழ்த்துகள்.
உங்களின் ரசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி.
Deleteபுத்தகம் சிக்கிரம் வெளி வர வேண்டுமென்றால் நான் பெட்டிற்கு அடியில் இருந்து வெளிவரவேண்டும் ஆனால் அது இப்போ முடியாது போல இருக்கு...காரணம் மனைவி பூரிக்கட்டையை கையில் வைத்து இருக்கிறாள் ஹீஹீ
என் சிறுகதைத் தொகுப்பு மணிமேகலை பிரசுரம் ‘ வாழ்வின் விளிம்பில்’ ப்ரிந்துரை செய்யப் படவில்லையே.
ReplyDeleteவாழ்வின் விளிம்பில் என்ற உங்கள் புத்தகம் தடை செய்யப்பட்டு இருக்கிறது ஆனால் முதுமையில் இளமை , என்ற உங்கள் புத்தகம் வெளிவந்து இருக்கிறது
Deleteஇந்த மாதிரியெல்லாம் கூட இனி புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ஹாஹாஹா! அருமை ! ரசித்தேன்! நன்றி!
ReplyDeleteரசிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.. ஆமாம் நீங்கள் புத்தகம் எப்பொழுது வெளியிட போகிறீர்கள்?
Deleteஉங்களை மாதிரி மறைந்து கொண்டு எழுதுவதும் புத்தகங்களாக வெளி வரும் என்றால்....
ReplyDeleteஇந்நேரம் உண்மையிலேயே இப்படியான புத்தகங்கள் வெளி வந்து சக்கைப் போடு போட்டிருக்கும்.
ஆமா..... இந்தியா சுதந்திரம் வாங்கி விட்டது தானே....
காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தாருங்க ஆனா அவர் செய்த தப்பு என்னவென்றால் அப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை காங்கிரஸ்கார்களிடம் கொடுத்து விட்டாருங்க அதனால் இந்திய மக்கள் இன்னும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லைங்க
Deleteபதிவு அருமை தமிழரே.
ReplyDeleteநான்.... “மதுரைத் தமிழனை எப்படி கலாய்ப்பது“ என்ற தலைப்பி்ல் புத்தகத்தைத் தேடுகிறேன்.
கிடைக்குமா அங்கே....?
அந்த புத்தகத்தை நானே எழுத முடியாதுங்க
Deletelast book tat பூரி மேட்டர்!!! ஐ லைக் it மா:)))
ReplyDeleteபாவம் மது....
DeleteAmmavidam mattum pammuvathaka therigirathu
ReplyDeleteஅட நீங்க நம்ம தளத்திற்கு புதுசு போல அதனாலதான் இப்படி சொல்லி இருக்கீங்க. பழைய பதிவகளை தோண்டி படிங்க.
என்னை பொருத்தவரை என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே போடுகிறேன். எனக்கு இந்த தலைவரை கட்சியை பிடிக்கும் பிடிக்காது என்பது எல்லாம் கிடையாதுங்க. அதனால எல்லோறையும் கலாய்த்து பதிவுகள் இடுவேன் அவ்வளவுதாங்க்
ஆஹா,சூப்பர் கற்பனை.
ReplyDeleteஎனக்கு அந்த ஓல்ட்மேன் கோல்ட் மேன் புத்தகத்தை உங்கள் செலவில் அனுப்பி வைக்கவும். அந்த புத்தகத்தின் காப்பிகள் அனைத்தையும் நீங்களே வாங்கி விட்டீர்களாம்.
அந்த புக்கை நீங்கள் அட்டைபடத்திற்காகதானே வாங்க ஆசைப்படுகிறீர்கள்.....ஆமாம் வீட்டில் அனுமதி வாங்கீட்டீங்களா?
Deleteப.சி. புத்தகத் தலைப்புதான் தவறா (பாஜார் இல்லை பஜார்) அல்லது உள்ளடக்கமும் ப.சி.விளக்கம் போல் தப்பும் தவறுமாக இருக்குமா? கணவர் விஜய்க்க்கும் (அவர் பெற்றோர்க்கும்) அமலாவுக்கும் பயங்கர கசமுசா என்று ஓடிக்கொண்டிருக்கும்போது, அமலாவின் படத்தைப்போட்டுக் குறளை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டீர்களே!. அனுஷ்கா ஷெட்டிக்குத் திருமணமாகி குழந்தை இருப்பதாக உலவும் நேரத்தில், அனுஷ்காவை விடக் குழந்தையான பெண்ணே தலைவரின் காதலியாக நடிக்கும்போது...எல்லாம் மச்சம்யா. ஸ்டாலின் புத்தகத்தைக் கானல் நீர்போன்று வடிவமைத்தது அருமை. அமலா புக் டிசைன் தான் அருமை
ReplyDelete