உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 8, 2014

டேய் பெண்கள்!!!???...வாழ்த்துக்கள்
அது என்ன டேய் பெண்கள்...வாழ்த்துக்கள். என்று கேட்கீறீங்களா? அது ஒன்றுமில்லைங்க.. எதையும் சற்று மாற்றி யோசிக்கும் வழக்கமுள்ள மதுரைத்தமிழன் Woman's Day வாழ்த்தை இந்த கால தமிழ் மொழிப் பெயர்ப்பு இலக்கணப்படி மொழி பெயர்த்துள்ளான் அவ்வளவுதான்

ஏன்டா கீழ்பாக்கத்தில் உள்ளவனுக்கு எல்லாம் கூகுலில் இலவச வலைத்தள இடம் கிடைத்ததால் எது வேணும் ஆனாலும் எழுதலாம் & கிறுக்கலாம் என்று நினைத்து இந்த மதுரைத்தமிழன் கிறுக்குகிறான் என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்லுமே...இப்படி நான் எழுதவதற்கு காரணம் நீங்களும் என் மனைவியும்தான் காரணம்..என்ன ஒன்றும் புரியவில்லையா?அது ஒன்றுமில்லைங்க. நேற்று நான் நெட்டிற்கு வந்த உடன் நம் சகபதிவர்கள் வரிந்து கட்டி மகளிர்தின பதிவுகளை சும்மா சுனாமி வந்தது போல சும்மா எழுதி தள்ளியிருந்தாங்க...அதை படித்து சிரியோ சிரி என்று சிரித்தேன்.அதில் என்ன சிரிப்பு என்னவென்றால் "பொண்டாட்டிகிட்ட பூரிக்கட்டையால் அடி வாங்காதவன் எல்லாம் மகளிர் தின பதிவு & வாழ்த்துக்கள் போட்டு இருந்தாங்க"


அதையெல்லாம் படித்துட்டு இன்று காலையில் என் மனைவி தூங்கி எழுந்தவுடன் கையில் காபியை கொடுத்துவிட்டு அவளுக்கு Women's Day வாழ்த்து என்றுதான் சொன்னேன். உடனே குடிக்கும் காப்பியை அப்படியே வைத்துவிட்டு வேகமாக எழுந்து வந்தாள் நானும் அப்பாவியாக ஆஹா அவள் நம்மை அணைத்து முத்தம் தரப் போகிறாள் என்று அப்பாவியாக நினைத்தேன். அந்த நினைப்பு கூட அரைநொடிதான் நீடித்தது காரணம் அவள் கையில் ( எப்போதும் ஒழித்து வைத்திருப்பாள் ஆனால் அவள் வைத்து இருக்கிறாளா இல்லையா என்பது மட்டும் என் கண்ணுக்கு தெரியவே தெரியாது என்ன மேஜிக் பண்ணி மறைட்து வைத்திருக்கிறால் என்பது அந்த ஆண்டவனுக்கு கூட தெரியாதுங்க் )வைத்திருந்த பூரிக்கட்டையால் மொத்து மொத்து என்று அடி கிடைத்த பின் வேறு எதை நாம் நினைக்க முடியுமுங்க...நான் அடிக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒதுங்கிய நான் அங்கிருந்து தைரியமாக அவளை நோக்கி கேட்டேன் அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன் எதுக்கு என்னை இப்படி அடிக்குறாய் என்று அழுதவாரே கேட்டேன்

அதற்கு அவள் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் வூமன்ஸ் (Women's Day) டேய்தான் நம்மவிட்டுல...அப்படி இருக்கும் போது அதை மறந்து நீ என்னமோ இன்று மட்டுதான் Women's Day என்கிற மாதிரி வாழ்த்து சொல்லுற என்று கேட்கிறாள்..

இப்ப பாத்தீங்களா நான் ஏன் கீழ்பாக்க கேஸா மாறிட்டேன் என்று?எல்லாம் உங்கள் பதிவுகளை படித்ததால் வந்த வினை.... ஹும்ம்ம்ம்சரி இதுவரை நீங்கள் படித்தது என் நிலமை... என் பக்கத்துவீட்டுகாரர் நிலமை அதைவிட மோசம்..அந்த கதையை கேளுங்க..என் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டு இந்த இரவு நேரத்தில் யார் கதைவை தட்டுக்கிறார் என்று பார்த்தால் அது என் பக்கத்துவீட்டுக்காரர் . கதவை திறந்ததும் அவர் சோகமான முகத்தை பார்த்து என்னங்க என்னாச்சு என்ரு கேட்ட்டேன்.அதற்கு அவர் முதலில் ஒரு க்ளாஸ் சரக்கு தாங்க அதை குடித்துவிட்டுதான் என் சோக கதையை சொல்லுகிறேன் என்றார்.நானும் சரி என்று சொல்லி அவருக்கு சரக்கை ஊற்றி கொடுத்துவிட்டு என்னாச்சு என்று கேட்டேன்

அதற்கு அவர் இன்று Women's Day அல்லவா அதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மனைவிக்கு பூங்கொத்து ஒன்றை வாங்கி வந்து என் வீட்டு கதவை தட்டிடேன். என் மனைவி வந்து கதவை திறந்தாள். அவளுக்கு Women's Day வாழ்த்தை சொல்லி அந்த பூங்கொத்தை கொடுத்து அவளை அப்படியே தூக்கி படுக்கை அறைக்குள் தூக்கி சென்று படுக்கையில் அவளை படுக்க போட்டு அவளிடம் சொன்னனேன். இன்று Women's Day என்பதால் உன்னை மகிழ்ச்சியில் கடலில் ஆழ்த்த போகிறேன் என்று சொன்னேன்.அதை கேட்ட அவளும் மகிழ்சியாக துள்ளி குதித்து என் அருகே வந்து என் கழுத்தை பிடித்து இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு காலையில் வாங்க இதுதான் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என்று சொல்லி கதவை தாளிட்டுவிட்டாள் என்று சொல்லி அவர் கண்ணிர் விட்டு அழுதார். அப்போது என் மைண்ட் வாய்ஸ் சொல்லியது  நம்ம நிலையும் இதுதான் ஆனால் அவர் வெளியே சொல்லிவிட்டார் நாம சொல்லவில்லை என்று நினைத்து சிரித்தாவாறு இதுக்கெல்லாமா வருத்தப்படுவது சரிவிடுங்க நீங்க இங்கேயே தங்கிக்குங்க என்று சொல்லி நானும் ஒரு க்ளாஸ் சரக்கை அடித்துவிட்டு அடுத்த க்ளாஸுக்கு போவதற்கு முன்னாள் ஒரு நிமிஷம் இருங்க நான் ஒரு பதிவை போட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி இந்த பதிவை வெளியிடுகிறேன்உலகெங்கும் மகளிர்தினத்தில் இதே நிலமைதான் எல்லோருக்கும் நிகழ்கிறது போல....ஹீ.ஹீ என்ன நாம இப்படி சொல்லுறோம் மற்றவங்க சொல்லாம வேஷம் போடுறாங்க அவ்வளவுதான்

அன்புடன்
மதுரைத்தமிழன்


13 comments :

 1. ஹா... ஹா... அலப்பறை செம....

  அவர்கள் சொன்னதும் செய்ததும் சரி தான்... (மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி தான்...)

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரர்
  ஆண்கள் நிலைமை மிகவும் கவலை கிடமாக தான் உள்ளதோ! அதுவும் தங்கள் நிலைமை மற்றவர்களை விட மோசம் தான் போல! அது எப்படி கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொண்டு தைரியமா குரல் கொடுத்தாராம்! குரல் கொடுத்த தானைத் தலைவன் மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தலைப்பைப் பாத்தீர்களா! இப்படி இருந்தா பூரிக்கட்டை வராம என்ன பண்ணும்!! இதே நிலைமை நீடித்தால் அடுத்து உருட்டுக்கட்டை தான் சகோதரரே!!

  ReplyDelete
 4. //பொண்டாட்டி கிட்ட பூரிக்கட்டைல அடி வாங்குனவன் எல்லாம் மகளிர் தின பதிவு போட்டுருக்கான்// அப்படி போட்டாவது அவங்க இன்னைக்கு அடியின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம் திட்டம் போட்ருப்பாங்க போல!! அது தெரியாம அதையே நீங்களும் பாலோ பண்ணலாம். அவங்க வீடு மாதிரியா நம்ம வீடுனு யோசிக்க வேண்டாம்!!!

  ReplyDelete
 5. //நாம இப்படி சொல்றோம் மற்றவங்க சொல்லாம வேசம் போடுறாங்க அவ்ளோ தான்// நாய் வேசம் போட்டா குரைத்து தான் ஆகனும் பாஸ். கழுதைக்கு வாக்கு பட்ட உதை வாங்கி தான் ஆக வேண்டும் எனும் பழமொழி கேள்விப்பட்டிருக்கீங்களா சகோ!! அதுங்க எல்லாம் பொழைக்கிற புள்ளைங்க. ஆனா மதுரைத்தமிழனுக்கு ஆப்பு எங்க இருக்குனு தேடிதேடி உட்கார்தே பொழப்பா போகிடுச்சு. ம்ம்ம் நாம என்ன பண்றது.

  ReplyDelete
 6. "மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த" போறீங்களா?
  அது எங்கே இருக்குங்க?
  எங்க ஊர்லே மெரினா கடல் இருக்கு எலியாட்ஸ் கடல் இருக்கு!
  நானும் என் woman-கிட்டே கேட்கப்போகிறேன் என்த கடலில் ஆழ்த்தலாம் என்று.
  ஏனென்றால் முடிவெடுக்கிற உரிமை அவங்ககிட்டதானே இருக்கு!!
  ஏதோ ஒரு கடலில் போட்டு ஆழ்த்தினால் போதும்.
  ஹாப்பி விமன்ஸ் டே!!!

  ReplyDelete
 7. நீங்க என்ன இப்படி ஒரு ஏமாளியா இருக்கீங்க. பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்காம இருக்கத்தான், இந்த மாதிரி பில்ட்அப் (மகளிர் தின வாழ்த்துக்கள் பதிவு) எல்லாம்.

  இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் மகளிர் தினமான்னு கேக்கிற கேள்விக்கு, உலகமே கொண்டாடுற அந்த நாள்ல, நீயும் உன் தோழிங்க கிட்ட, என் கணவரும் மகளிர் தினத்தைப் பற்றி பதிவு எழுதியிருக்காருன்னு, பெருமையா பேசலாம் அதனால் தான் அந்த பதிவுன்னு கூசாம பொய் சொல்லத் தெரியலையே உங்களுக்கு!!!!!!!

  நீங்க இப்படி மக்கா இருக்கிறதுனால தான் தினமும் உங்க வீட்டுல, உங்களுக்கு பூரிக்கட்டையாலே விருந்து கிடைக்குது. இனிமேலாவது கொஞ்சம் சூதானமா நடந்துக்குங்க.

  ReplyDelete
 8. நல்ல காமெடி! நண்பரே! இன்றும் வைரஸ் இருப்பதாக கூறுகிறது அவசாட் ஆண்ட்டி வைரஸ்! என் ப்ரவுசர் கோளாறா? இல்லை உங்கள் தளத்தில் ஏதேனும் பாதிப்பா? சரி செய்யுங்கள்! நன்றி!

  ReplyDelete
 9. Infection Blocked
  URL: http://mypageresults.com/?dn
  Infection: URL:Mal
  Relax, your avast! just saved you from a virus. நண்பரே உங்கள் பேஜ் ஓப்பன் ஆகும் போது இப்படி செய்தி வருகிறது! சரி செய்யவும்! நன்றி!

  ReplyDelete
 10. மதுரைத்தமழன் வீட்டில் காஃபிக்கு ---->பூரிக்கட்டை !
  பக்கத்துவீட்டில் பூங்கொத்துக்கு ----->door shut !
  நீதி :வீட்டுக்கு வீடு வாசப்படி!டிசைன் தான் மாறுது.

  ReplyDelete
 11. உங்களுக்குப் பிடித்தப் பரிசு “புரிக்கட்டையால் அடி வாங்குவது தான்“ என்று
  அமெரிக்க மாமி எனக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

  அடி கொடுத்தால் “முத்தம்” கொடுத்தது போல இளிப்பீர்களாமே. அதனால் தான் மகளிர் தினத்திற்கு
  அந்தப் பரிசைக் கொடுத்தார்களாம்.

  ReplyDelete
 12. ஹாஹா வயிறு புண்ணாகிப் போச்சு! தோழி உங்கள் பதிவை வாசித்து விட்டு எனக்கு அனுப்பியிருந்தார்! கூடவே ஒரு மெயிலும்...."இங்க பாரு நான் நேத்தே சொன்னேன்ல அதே மாதிரிதான் மதுரைச் தமிழனும் போட்டுருக்காரு பதிவு! " அது வேற ஒண்ணும் இல்லீங்க! அவங்க எங்கிட்ட பேசும் போது "ஏன்ண்டா அது மார்ச் 8 ஆம் தேதி மாத்திரம் women's day ? மத்த நாள் எல்லாம் இல்லையா? எல்லா நாளும் பெண்கள் பெண்கள் தானே! அதனால அதைப் பத்தி நோ பதிவு! நோ விஷ்ஷஸ்! " அப்படினு சொல்லிட்டாங்க! தலைமையகத்திலிருந்து இப்படி வந்தப்புறம்.......???

  ஹலோ! மதுரைத் தமிழா இதுக்கு அப்புறமும் உங்களுக்கு பூரிக்கட்டை வரலைனாதான் ஆச்சரியம்! நான் நினைச்சேன் நீங்க இந்தப் பதிவ ரகசியமா போட்டுட்டு விடு ஜூட்னு எங்கியாவது ஒளின்சிருப்பீங்களோனு நினைச்சேன்! த்ரிஞ்சும் இது தேவையா உங்களுக்கு!? -கீதா!

  ReplyDelete
 13. :)))))

  எல்லா நாளும் நல்ல நாளே..... மதுரைத் தமிழனுக்கு ???

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog