உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 10, 2010

உங்கள் கணவரை வசியப்படுத்தி வாழ்வில் வசந்தம் வீச மூன்றுமந்திரங்கள்

பலமான திருமண வாழ்விற்கு வேண்டிய மூன்று மந்திரங்கள் இது பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் தலையணை மந்திரம் அல்ல இது உங்கள் கணவரை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு அடிமையாக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை கடைப்பிடிப்பது ஒன்றும் கடினமல்ல.


1. உற்சாகமூட்டுதல் (Appreciation) 2. மரியாதை.( Respect ) 3. அன்பு (Love ) இந்த மூன்றை மட்டும் மனைவியிடம் இருந்து எல்லா கணவரும் எதிர் பார்ப்பது.


எப்போதுமே மனைவிக்கு ஹிரோவாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் அவன். எந்த ஒரு காரியத்திற்காகவும் அவனை சந்தோஷமில்லாதவனாக, அதிருப்பதியுள்ளவனாக ஆக்கும் போது அவன் வாழ்வில் தோல்வியடைந்தவனாக உணர்கிறான். அநேக பெண்கள் உணர்வதில்லை, இன்றைய உலகில் ஆண்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் & அவர்களுக்கு எந்த அளவிற்கு அன்பு தேவைப்பிடுகிறது என்று.மனைவியிடம் இருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகள் (Appreciation) மரியாதை.( Respect ). அன்பு (Love ) கிடைப்பதற்கு பதிலாக எரிச்சல், எதிர்ப்பு, கோபம் கிடைத்தால் எப்படி உணர்வான்.

உற்சாகமூட்டுதல் (Appreciation)

வேலையில் இருந்து வீடு திரும்பும் கணவரைப் பார்த்ததும் என்னங்க காலையில் குப்பை கேனை வாசலில் வைத்து விட்டு போங்கள் என்று சொன்னேன் வைக்கம போய்யிட்டிங்க ஒரு வார்த்தையாவது போண் பண்ணியாது சொல்லிருக்கலாம். ஒண்ணும் செய்யல...இந்த குழந்தைகளை காலை முதல் நானே கவனிச்சு கிட்டுயிருக்கேன். இன்னும் ஒரு நிமிசம் கூட என்னால பார்க்க முடியாது என்று உங்கள் சிடு சிடு முகத்தை காண்பித்தால் பதிலுக்கு உங்கள் கணவர் உடனே என்னடி நீ இன்னும் டின்னர் செய்து முடிக்கலயா ? என்னடி அந்த டிரஸ்சை துவைத்து அயன் பண்ணிவை நாளைக்கு சிக்கிரமா ஒரு மிட்டிங்குக்கு போட்டு போகனுமுனு சொன்னேன் இன்னும் பண்ணல......இந்த கரண்ட் பில் கட்டிருணு சொன்னேன் ஒன்னும் கூட பண்ணல ... நாள் முழுவதும் என்னடி அப்படி பண்ணிகிளிக்குற என்ற வார்த்தைகள் தான் அவரிடம் இருந்து வரும்...நீங்கள் உங்கள் கணவரைப் எப்படி நடத்துகிறீர்களோ அப்படித்தான் நீங்களும் உங்கள் கணவரால் நடத்த படுவீர்கள். நீங்கள் அவரை கிங்காக(KING) நடத்தினால் அவரும் உங்களை குயினாக(QUEEN) நடத்துவார்.இதற்கு பதிலாக இப்படி பண்ணினால் என்ன நடக்குமென்று என்று நினைத்து பாருங்கள். வேலையிலிருந்து களைப்புடன் வரும் கணவரைப் பார்த்தவுடன் சிறிது சிரித்த முகத்துடன் என்னங்க வரும் வழியிலேயே காய்கறியெல்லாம் வாங்கிட்டிங்களா ரொம்ப நன்றிங்க என்று சொல்லி அவர் கையில் உள்ள பையை வாங்கி வைத்துவிட்டு அல்லது என்னங்க போண்ல பேசும் போது கொஞ்சம டையர்டாக இருக்கு என்று சொன்னேன் அதற்க்காக நீங்கள் வரும் போது டிபன் எல்லாம் வாங்கி வந்துட்டிங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க யூ ஆர் கிரேட் என்று சொல்லி பாருங்க...உங்கள் சிரித்த முகம்...நீங்க சொன்ன அந்த கிரேட் வார்த்தை அவருள் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது பாருங்கள். அதுபோல இதெல்லாம் அவர் செய்யகூடிய வேலைகள் அவர்தான் செய்யவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றுங்கள். அது போல அவர் பண்ணியதை பாரட்டுங்ககள் அதற்கு பதிலாக செய்யாததை பட்டியல் போட்டு குறை கூறாதீர்கள்.பலவித காரணங்களால் மட்டுமே நீங்கள் ஹவுஸ் வொய்ப்பாக இருக்கிறீர்கள் இதற்காக கணவரை மட்டுமே எப்போதும் குறை கூறக்கூடாது சுடு சொற்க்களை அள்ளி வீசக்கூடாது. இது போன்ற செயல்களை ஹவுஸ் வொய்ப்பாக இருக்கும் வீட்டில் கண்கூடாக பார்க்கலாம். இது மிக பெறும் தவறு .நம்முடைய இயலாமைக்கு எல்லாம் கணவரா காரண கர்த்தா?

நீங்கள் ஹவுஸ் வொய்ப்பாக இருப்பதினால் உங்கள் நேரம் எல்லாம் ஒவர் புக்காகி இருக்கலாம் எப்போதும். ஆனால் உங்களுக்ககவும் உங்கள் கணவருக்காகவும் நீங்கள் 20 நிமிடம் ஒதுக்கி நீங்கள் இருவரும் தினமும் பேசிப்பாருங்கள். அதன் பிறகு உங்கள் முந்தானைய விட்டு விலக மாட்டார்..மரியாதை.( Respect )

நீங்கள் உங்கள் கணவரை நினைத்து கர்வமாக இருங்கள் அல்லது இருப்பதாக காட்டிக் கொள்ளுங்கள். இந்த அவசரமான் உலகில் வெளி உலகில் வேலை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. உங்கள் கணவர் எந்த வேலை பார்ப்பவராக் இருக்கட்டும். அவருக்கு கிழேயுள்ளவர்கள் எப்படி அவர்காலை வாரிவிட்டு அவர் இடத்துக்கு வரலாம் என்று நினப்பார்கள்.. மேலிருப்பவர்களோ அவரின் வேலைகளையெல்லாம் அவர் மேல் சுமத்தி எளிதாக முன்னேறாலாம் என்று நினைப்பார்கள்.கஸ்டமர்களுக்கோ காரியம் நடக்கவில்லை என்றால் அவர்களும் கத்திவிட்டு செல்வார்கள். இவ்வளவையும் சமாளித்து நொந்து நூளாகி வருவார்கள். அவர்கள் வெளி உலகில் கிங்காக தோற்றமளித்தாலும் உண்மையில் அடிமையாகத்தான் உணர்வார்கள் எனவே அவர்களை நாம் மதித்து அவர்களை வீட்டின் கிங்காக மாற்றிவிடுங்கள்.( பெண்களே நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது எனக்கும் புரியும். இந்த பதிவின் நோக்கம் ஆண்களை எப்படி உங்களுக்கு அடிமையாக்குவது என்பதுதான்) மணவாழ்க்கையின் வெற்றி என்பது விட்டு கொடுத்து வாங்குவது என்றுதான் எல்லோரும கூறிவருகிறார்கள். வாழ்க்கை என்பது டிவிஷன் ஆப் லேபர் அல்ல 50/50 என்பதற்கு. எனது கருத்து இதற்கு சிறிதும் மாறுபட்டது. ஒவ்வொரு சைடும் கொடு...கொடு......கொடு.... 100% முழு மனதுடன்.மரியாதை என்பது அன்புக்கு அடித்தளம்..அந்த அன்பை சிறியளவில் ஆரம்பியுங்கள் அது தீ போல உங்களை சுற்றி படரும். உங்கள் கணவர் வரும் போது நீங்கள் போணீல் இருந்தால் அது மிக முக்கிய உரையாடலாக இல்லாத பட்சத்தில் அப்புறம் கால் பண்ணுவதாக சொல்லி கணவரை முதலில் கவனியுங்கள். அதைவிட்டு விட்டு போணில் இருந்தவாறு கணவருக்கு கட்டளையிடுவது மரியாதையல்ல. ஒரு சிம்பிள் ரூல் நீங்கள் உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினக்கிறீர்களோ அதே சுய மரியாதையோடு அவரை நடத்துங்கள். உங்களுக்கு பிடித்த பாஸை , நண்பரை, நடிகரை நீங்கள் எப்படி மரியாதையோடு நட்போடு நடத்துவீர்களோ அது போல நடத்துங்கள்அன்பு(காதல்) (Love )

லவ் என்பது சிறிய வார்த்தை. எல்லோரும் விரும்புவது அந்த மூன்று எழுத்து வார்த்தைய மட்டும்தான். பெண்கள் எப்போதுமே அந்த வார்த்தைகளை கேட்க விரும்புவார்கள். ஆண்களூக்கும் அந்த வார்தைகள் பிடிக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இனிமேலும் அதை மறக்காமல் யூஸ் பண்ணுங்கள் அது மட்டுமில்லாமல் அதை செயலிலும் காட்டுங்கள்.

இந்த மூன்று மந்திரங்களை யூஸ் பண்ணி பாருங்கள்.. உங்கள் வாழ்வில் என்றும் வசந்தம்தான்..உங்கள் கணவரும் உங்களுக்கு வசிகபட்டு உங்கள் முந்தானையையே சுற்றி சுற்றி வருவார்கள். எந்த நயன் தாரா போன்ற அழகிகள் வந்தாலும் அவர்கள் உங்களை விட்டு அகலமாட்டார்கள். இதைப் படிப்பவர்கள் பிரபு தேவா மனைவியிடம் கொடுத்து படிக்க சொல்லலாம்

2 comments :

 1. பாஸ்..உருப்படியான பதிவு..நல்ல சைகாலஜிகள் கருத்துக்கள். ரெண்டுபேருமே கொஞ்சம் ஈகோ வை கழட்டி வச்சுட்டால் நீங்க சொல்ற எல்லாமே வாழ்க்கையில் பாலோ பண்ணமுடியும்..பட்..இப்போலாம் அந்த ஈகோ அதிகமாகி போயி தான் மனஅழுத்தம் தாங்காமல் எத்தனையோ குடும்பம் விவகாரத்துக்கு கோர்ட் படி ஏறுது..good presentation bass !

  ReplyDelete
 2. // 1. உற்சாகமூட்டுதல் (Appreciation) 2. மரியாதை.( Respect ) 3. அன்பு (Love ) இந்த மூன்றை மட்டும் மனைவியிடம் இருந்து எல்லா கணவரும் எதிர் பார்ப்பது.
  //

  ethirpaarpathu..ok..
  but..ethirpaarpathai vaangi sattai payil pottukittu...kandukaamal vaaalum husband's ku ningal edhavadhu eluthungal.. hehe..
  (romba yosika vachitomo?? hehe)  evlo(appr. respect..anbu) koduthaalum... ok.... it is your duty to give all these three endu... ninaikkum aan varkathinarum ullanar indha ulahathille... hehe..

  adhunaalaa...evlo thaaan pen these three(appr. respect..anbu) koduthaalum...they just dont reciprocate...and that is when all the prob starts...

  Because... these pengal..stops giving all three at one point..when the guy doesn't reciprocate these three... hehe


  that is what is happening in most of the scenarios...
  just because.. men don't reciprocate these three ...when a wife gives all these three... wife feels that she isn't appreciated..and there starts all..

  If they knew to reciprocate then they(pengal) feeel rewarded.. and peace remains..


  Note: I dont know how to put these in proper words...as u word it..
  Please feel free to change or reword it in your style, as it looks and sounds better in your way of narrating.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog