Saturday, January 10, 2026

 

அகண்ட பாரதக் கனவு... டிரம்ப் அடியில் 'மிரண்ட' பாரதம்! 

    
அகண்ட பாரதக் கனவு... டிரம்ப் அடியில் 'மிரண்ட' பாரதம்!

"அகண்ட பாரதம் அமையப் போகிறது, அண்டைய நாடுகள் எல்லாம் தாமாக வந்து இணையப் போகிறது" என்று வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வரைபடம் வரைந்து பாடம் எடுத்த அந்த சங்கி  'அரசியல் ஜோசியர்கள்'  இப்போது எங்கே? பாகிஸ்தானை மிரட்டுவோம், சீனாவை விரட்டுவோம் என்று ரீல் விட்டவர்கள், இப்போது ஜன்னல் கதவைச் சாத்திக் கொண்டு 'அமைதிப் பூங்காவாக' அமர்ந்திருக்கிறார்கள்.

பாக்தால்ஸ் எதிர்பார்த்தது #அகண்ட_பாரதம்! ஆனால், மோடி ஜி-யின் 'அசாத்திய மௌனத்தால்' இப்போது  அவர்கள் கண் முன்னே நிற்பது டிரம்ப் மிரட்டலில் திகைத்துப் போய் நிற்கும் #மிரண்ட_பாரதம்!


அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும்  பதவி ஏற்றதும், நம் ஊர் காவிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். "ஜி-யின் நெருங்கிய நண்பர் வந்துவிட்டார், இனி உலகமே நம் காலடியில்" என்றார்கள். ஆனால், வந்தவுடனேயே டிரம்ப் வைத்த 'ஆப்பு' தான் இப்போது ஹாட் டாபிக்! 


 "இந்தியா வர்த்தகத்தில் ஒரு பெரிய 'ஏமாற்றுக்காரன்' (Trade Abuser), அவர்கள் மீது இமாலய வரி (Tariff) போடுவேன்" என்று டிரம்ப் பகிரங்கமாக ஓங்கி எகிறி அடிக்கிறார்.

பாகிஸ்தானைக்  பற்றி பேசும் போது ஜீயின் கண்களில்  தீப்பொறி பறக்கும், சீனாவைப் பற்றி பேசும்  போது  ஜீ யின் ' கண்கள் சிவந்து போயிடும் .. ஆனால் ட்ரம்ப் "வரி போடுவேன்" என்று மிரட்டும்போது மட்டும் ஜி-க்கு  மட்டும்  திடீர் 'தொண்டைக்கட்டு  வந்துவிடும்?

பக்கத்து நாடுகளிடம் "வீர வசனம்" பேசும் நம் ஜி-யால், தன் நண்பர் ட்ரம்பிடம் மட்டும் ஏன் "மிஸ்டர் டிரம்ப், இது தப்பு" என்று ஒரு வார்த்தை கூடத் திருப்பிச் சொல்ல முடியவில்லை?


"அகண்ட பாரத வரைபடத்தில் நாடுகளை இணைக்கப் போகிறோம்"
என்றார்கள். ஆனால் இப்போது நடப்பது என்ன? இவர்கள் சாமானியனின் வீட்டு பட்ஜெட் பட்டியலை 'அகண்டமாக' விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று "ஜி ஒரு பட்டன் தட்டுவார், காந்தகார் நம் கைக்கு வரும்!" என்றார்கள் .  ஆனால் நிஜத்தில் இன்று ஜி ஒரு பட்ஜெட் போடுவார், சமையல் சிலிண்டர் விலையும், தக்காளி விலையும் விண்ணைத் தொடுகிறதுதாம் மிச்சம்

ஆப்கானிஸ்தானையும் பர்மாவையும் இணைக்கப் பிளான் போட்டவர்கள், இப்போது பன்னிரையும் எடப்பாடியையும் இணைக்கப் ப்ளான் போடுகிறார்கள் .
.
பட்டம் பெற்ற  இளைஞர்கள் "வேலை எங்கே?" என்று கேட்டால், "அகண்ட பாரதம் அமைந்தால் வேலை குவியும்" என்றார்கள். இப்போது அந்த இளைஞர்கள், "இந்த அகண்ட பாரத மேப்ல எந்த நாட்டுக்கு விசா இல்லாமல் வேலைக்குப் போகலாம்?" என்று கூகுளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியொரு சூழலில் பக்தால்ஸ்களின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' விளக்கம் எப்படி இருக்கிறது தெரியுமா?

"ஜி அமைதியாக இருக்கிறார் என்றால், டிரம்ப்பை வீழ்த்த ஏதோ ஒரு பெரிய 'ராஜதந்திர ஸ்கெட்ச்' போடுகிறார் என்று அர்த்தம். பங்குச்சந்தை சரிவது கூட ஒரு மாஸ்டர் பிளான் தான்!" (இப்படியே சொல்லிச் சொல்லி இன்னும் எத்தனை காலம்தான் ஓட்டுவீங்கடா??)


அன்று: "ஹௌடி மோடி!" (Howdy Modi!) என்று அமெரிக்காவில் போய் ஆரவாரம் செய்தார்கள். இன்று: "ஏன் இப்படி மோடி என்று சொந்த நாட்டில் விலைவாசியால் கதறிக் கொண்டிருக்கிறார்கள்

அண்டை நாடுகளை ஆளப்போவதாகக் கனவு கண்டவர்கள், இன்று அமெரிக்க அதிபரின் ஒரு 'ட்வீட்டுக்கு' பதில் சொல்லத் துணிவில்லாமல் மௌனம் காப்பதுதான் விஸ்வகுரு லட்சணமா? ஜீ அகண்ட பாரதத்தை அப்புறம் அமைக்கலாம் ... முதலில் இந்த 'மிரண்ட பாரதத்தை' விலைவாசி உயர்விலிருந்தும், வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்தும் காப்பாற்றுங்கள்!


படிக்காதவர்கள் படிக்க எனது முந்தைய பதிவுகளின் சிறு லிஸ்ட்

 2026-ல் ஸ்மார்ட்போன் ஜாதகம்: ஏமாறாமல் வாங்க ஒரு "மெகா" கைடு!

**சென்னை முதல் கன்னியாகுமரி வரை... தமிழக செல்போன் பயனர்களுக்கான 2026-ன் பிரத்யேக அலசல்!**

 

https://avargal-unmaigal.blogspot.com/2026/01/2026-tamilnadusmartphone.html

 

மதுரோ வேட்டை: டிரம்பின் அதிரடி vs ஒபாமாவின் ரத்த சரித்திரம்! அமெரிக்காவின் ‘ஜனநாயக’ முகமூடிகள் கிழிவது எப்போது? https://avargal-unmaigal.blogspot.com/2026/01/trumps-maduro-capture-vs-obama.html



அமெரிக்காவின் Real "விஸ்வகுருவான'  ட்ரம்பின் அதிரடி ஆட்டம்  https://avargal-unmaigal.blogspot.com/2026/01/blog-post.html



குழந்தை இல்லாத பெண்ணோட வாழ்க்கைதான் இந்த கண்ணீர் கதை...

Empty மடி... Broken Heart 💔 | 35 Age... Zero Hope 😭 | Real Story Will Make You Cry    https://avargal-unmaigal.blogspot.com/2026/01/empty-broken-heart-35-age-zero-hope.html




அன்புடன்
மதுரைத்தமிழன்

#அகண்ட_பாரதம் (Akhand Bharat),   #மிரண்ட_பாரதம் (Miranda Bharatham)  #மோடி_டிரம்ப்_அரசியல் (Modi Trump Politics) #அரசியல்_நையாண்டி (Political Satire Tamil) #விலைவாசி_உயர்வு (Inflation India) #அவர்கள்_உண்மைகள் (Avargal Unmaigal) #டிரம்ப்_வரி_விதிப்பு (Trump Tariff India)

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.