முன்னாடி எல்லாம் ரோபோட்னா 'எந்திரன்' படத்துல வர்ற மாதிரி "ஐ ஆம் எ மெஷின்"னு சீன் போடும். ஆனா இப்போ வந்திருக்கிற "Physical AI" ரோபோட்டுகள் எல்லாம், நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற ஒரு சுட்டிப் பையன் மாதிரி மாறிடுச்சு. இதோ, அந்த ரோபோட் 'கேங்கின்' ஜாதகம்.
1. Fourier GR-3:
முதல்ல வந்திருக்கிறவரு Fourier GR-3. இவருக்கு 'Emotion Recognition' அதாவது 'உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்குற' வித்தை அத்துப்படி.
மனைவி உங்க கூட சணடை போட்டு பூரிக்கட்டையால் அடிவாங்கி சோபால சாப்பிடாமல் படுத்து இருந்தால் இந்த ரோபோட் உங்க மூஞ்சைப் பார்த்தே மேட்டரை கண்டுபுடிச்சிரும். "என்ன பாஸ்... ரொம்ப அப்செட்டா? ஸ்ட்ராங்கா காபி வேணுமா அல்லது சூடா மட்டன் பிரியாணி வேணுமானு கேட்டு உங்க கையைப் பிடிச்சு ஆறுதல் சொல்லும்.
மேட்டர் என்னன்னா? இதைத் தான் 'முதியோர் பராமரிப்பு'க்கு (Elder care) பயன்படுத்தப் போறாங்க. பாட்டிங்க சொல்ற பழைய கதைகளை சலிக்காம கேட்டுக்கிட்டு, அவங்க கண்ணுல இருக்குற சோகத்தைப் புரிஞ்சுக்கிட்டு கூடவே இருக்குற ஒரு 'குட்டிப் பையன்' தான் இந்த GR-3.
அடுத்தது NEURA 4NE1. இதுக்கு 'Collective Learning'-னு ஒரு டெக்னாலஜி இருக்கு. அது என்னன்னா... இப்ப ஜப்பானுல இருக்குற ஒரு ரோபோட்டுக்கு 'மாவு அரைக்குறது' எப்படின்னு கத்துக் கொடுத்தா, அடுத்த செகண்ட் உலகத்துல இருக்குற எல்லா 4NE1 ரோபோட்டுக்கும் அந்த வித்தை தெரிஞ்சிரும்!
இதுல ஒரு ரோபோ கத்துக்கிட்டா உலகமே கத்துக்கும். இந்த ரோபோவைத்தான் ரீடைல் கடைகள்லயும், குடோன்கள்லயும் அறிமுகப்படுத்துப் போறாங்க இவனுங்களோட வேலை ரொம்ப ஸ்பீடா இருக்குமாம் இதை நம்மவூர் ஜவுளிக்கடையில் கொண்டு வந்தா உங்க மனைவி கேட்கிற சேலையெல்லாம் முகம் சுளிக்காமால எடுத்து காட்டிக் கொண்டே இருக்கும்
கடைசியாக . Agibot G2
மனுஷங்க கூடச் சேர்ந்து வேலை செய்யும்போது ரோபோட்டுகள் இடிச்சிருமோனு பயப்படுவோம். ஆனா இந்த Agibot G2 இருக்கானே... அவன் ஒரு 'பஞ்சு மெத்தை' ரகம்! இந்த ரோபோவுக்கு *Tactile Sensing' (தொடு உணர்வு) ரொம்ப ஜாஸ்தி. ஒரு திராட்சைப் பழத்தை நசுக்காம எடுக்கிறதுல இருந்து, உங்க கூடவே நின்னு உதவி செய்றது வரைக்கும் இவன் ரொம்ப சாஃப்ட். நீங்க தெரியாம இவன் மேல மோதிட்டா கூட, மெஷின் நிக்காம உங்களை காயப்படுத்தாம லாவகமா விலகிக்கும்.
சரி... இது என்ன செய்யும் என்று பார்த்தோம் ஆனால் இதெல்லாம் எப்படித்தான் வேலை செய்யுகிறது என்கிற சயின்ஸை 'சிம்பிளா' சொல்லுகிறேன் அத் உங்களுக்கு எளிதாக புரியும்
"மெஷினுக்கு எப்படி இவ்வளவு அறிவு வருது?"னு நீங்க யோசிக்கிறது புரியுது. அதுக்குள்ள மூணு 'கில்லாடி' விஷயங்கள் இருக்கு:
VLA Models (பார்த்தே கத்துக்கிற மூளை), நாம எப்படி ஒரு யூடியூப் வீடியோவை பார்த்து சமைக்கக் கத்துக்குறோமோ, அதே மாதிரி இந்த ரோபோட்டுகள் வீடியோக்களைப் பார்த்தே வேலைகளைக் கத்துக்குது. இதான் 'Physical AI' கோடிங் எழுதவே தேவையில்லை, ஒரு தரம் செஞ்சு காட்டினா போதும், அப்படியே காப்பி அடிச்சிரும்! எப்படி நம்ம ஸ்டாலின் மக்களுக்கு செய்கிற இலவச திட்டங்களை பாஜக அரசு கப்பி பண்ணிக் கொள்வது மாதிரிதான் இதனுடைய செயல்
Tactile Sensors (உயிருள்ள தோல்): ரோபோட்டோட உடம்பு முழுக்க சென்சார்கள் இருக்கு. இதுங்களுக்கு 'தொடு உணர்வு' இருக்கிறதுனால, பக்கத்துல மனுஷன் வர்றாரா இல்ல பொருள் இருக்கான்னு 'பீல்' பண்ணி வேலை செய்யும்.
Real-time Reasoning: "இந்தக் கப்புல சுடு தண்ணி இருக்கு... இதை மெதுவா எடுக்கணும்"னு அந்த நேரத்துல யோசிச்சு முடிவு எடுக்குற அளவுக்கு அதுங்களுக்கு 'பகுத்தறிவு' வந்துடுச்சு. பேசாமல் இதை நாம் திராவிட பகுத்தறிவு ரோபோன்னு கூட பட்டம் சூட்டலாம்
2026-ல ரோபோட்டுகள் வெறும் 'வேலைக்காரங்க' இல்ல, நம்ம உணர்வுகளைப் புரிஞ்சிக்குற 'உயிரில்லாத நண்பர்கள்'. சீக்கிரமே நம்ம ஊர் டீக்கடைங்கள்ல "மாஸ்டர்... ஒரு சிங்கிள் டீ!"னு சொன்னா, ஒரு ரோபோட் கண்ணடிச்சுக்கிட்டே டீ கொண்டு வந்தா ஆச்சரியப்படாதீங்க!
CES என்பது என்னவென்று தெரியாதவர்களுக்கு
CES என்பதன் விரிவாக்கம் Consumer Electronics Show.
"நம்ம ஊர் சித்திரைத் திருவிழா மாதிரி, டெக்னாலஜி உலகத்துக்கே ஒரு பெரிய திருவிழா தான் இந்த CES
இதுதான் உலகிலேயே நடக்கும் மிகப்பெரிய "தொழில்நுட்பத் திருவிழா". ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரத்தில் இது நடக்கும்.
CES 2026-ல் என்ன நடக்கும்?
புதிய கண்டுபிடிப்புகள்: உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் (Samsung, Sony, Google, NVIDIA போன்றவை) தாங்கள் கண்டுபிடித்த புதிய போன்கள், டிவிக்கள் மற்றும் ரோபோட்டுகளை முதன்முதலில் இங்குதான் உலகுக்குக் காட்டும்.
எதிர்காலக் கனவு: இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதை இங்கேயே பார்த்துவிடலாம். (உதாரணமாக: பறக்கும் கார்கள், தானாக வேலை செய்யும் ரோபோக்கள்).
முக்கியத்துவம்: இந்த 2026-ம் ஆண்டு கண்காட்சியில் தான், நான் இந்த பதிவில் குறிப்பிட்டது போல "Physical AI" கொண்ட ரோபோட்டுகள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றன
புதிய தொழில் நுட்பத்தை மிக எளிமையாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறேன் . உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்த பதிவை சேர் பண்ணுங்கள் இல்லையென்றால் இதில் உள்ள தகவல்களை மற்றவர்களோடு நீங்கள் கூடி சந்திக்கும் போது பகிர்ந்து மகிழுங்கள்.
நான் எழுதுவது வெறும் வார்த்தைகள் அல்ல
சமூகத்தின் காயங்கள், அரசியலின் மறுபக்கம், சினிமாவின் உண்மை முகம்,
வெளிநாட்டில் தத்தளிக்கும் மனங்களின் நிஜக் கதைகள்,
டெக் உலகின் புதிய புரட்சிகள்
எல்லாத்தையும் நேரடியாக சொல்லும் ஒரு சாமானியன்.
என் எழுத்து சில நேரம் சிரிக்க வைக்கும்,
சில நேரம் சிந்திக்க வைக்கும்,
சில நேரம் கண்ணீர் வர வைக்கும்
ஆனா ஒவ்வொரு பதிவும் உண்மைக்கு நெருக்கமானது.
நான் எழுதுறது உங்களுக்காக .... உண்மையைத் தேடுறவர்களுக்காக
அன்புடன்
மதுரைத்தமிழன்
#CES2026 #PhysicalAI #HumanoidRobots #Technology #TamilTech #FutureIsHere #Robotics #Innovation #தொழில்நுட்பம் #ரோபோட்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.