Sunday, January 18, 2026

 தப்பித்தல் எனும் மாயப் போதை!

    

தப்பித்தல் எனும் மாயப் போதை!





சிலர் போதைப் பொருளுக்கும் மதுவிற்கும் அடிமையாகிறார்கள்.
ஆனால் அதைவிட அதிகமானோர்
யாதார்த்தத்திலிருந்து தப்பிக்கிற ஆசைக்கே அடிமையாகிறார்கள்.
உண்மையை நேராகச் சந்திக்கத் துணிவு இல்லாதபோது,
மனசு ஒரு மறைவிடம் தேடுகிறது.
அது ஒரு பாட்டிலாக இருக்கலாம்
ஒரு பழக்கமாக இருக்கலாம்
அல்லது ஒரு பொய்யான நிம்மதியாக இருக்கலாம்.
தப்பிக்கத் தேடும் அந்த வழி
எதுவாக இருந்தாலும்,
அதுவும் ஒரு போதைதான்.
ஏனெனில் அது நம்மை நிஜத்திலிருந்து தள்ளி,
நம்மை நாமே மறக்க வைக்கிறது


எங்கோ நாம் படிக்கும் சில வரிகள் நம்முள் ஒரு சிந்தனையை தூண்டுகிறது  அப்படி என் மனதில் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் நீங்கள் படித்தது.


கணவன் மனைவி உறவாக இருந்தாலும், 
நண்பர்களுடனான உறவாக இருந்தாலும், 
ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலே
 நமக்கு எதிராக யாராவது பேசத் தொடங்கினால், 
உடனே நம்மை நாமே தற்காத்துக் கொள்ளவும்
நம் அகங்காரத்தை பாதுகாக்கவும் தான் முயற்சிக்கிறோம்.
 ஆனால் அவர்கள் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுமையாகக் கேட்கும் பொறுமை நமக்குக் குறைவாக இருப்பதே  பல பிரச்சனைகள் பெரிதாகி விடுவதற்கான முக்கிய காரணம்.

இன்று இரண்டு பேருக்கிடையில் நடந்த ஒரு விவாதத்தை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 
அதை கேட்டபோது என் மனதில் தோன்றிய கருத்துதான் நான் மேலே  எழுதி இருப்பது  #சனிக்கிழமை_சிந்தனை

அன்புடன்
மதுரைத்தமிழன்

#தப்பித்தல் #நிஜம்  #போதை #சனிக்கிழமை_சிந்தனை  #மதுரைத்தமிழன் #Escapism #RealityCheck  #சுயசிந்தனை #Self-reflection #உறவுகள் #Relationships #அகங்காரம் #Ego #புரிதல் #Understanding  #மனநிம்மதி #Peaceofmind #உண்மை #Truth #TamilQuotes  #TamilMotivation  #LifeLessons  #Mindfulness  #SelfAwareness #TamilPhilosophy #InstaTamil




Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.