மு.க. ஸ்டாலின்: (ஸ்கிரிப்ட் ஸ்பெஷலிஸ்ட்)
"என் அன்பு உடன்பிறப்புகளே... இந்தப் பொங்கல் பானை பொங்குறதுக்குக் காரணம் நம்ம 'திராவிட மாடல்' திட்டம்தான். பக்கத்துல இருக்கிற எடப்பாடி, ஆளுநர் ரவி மற்றும் , அண்ணாமலையும் அடுப்பை அணைக்கப் பார்க்குறாங்க. கவலைப்படாதீங்க... பானையில அரிசி இல்லைனாலும், நம்மகிட்ட 'மஞ்சள் பை' விளம்பரம் இருக்கு. கரும்பை யாரு கடிக்கிறாங்களோ இல்லையோ, நாம 'சனாதனத்தை' கடிச்சுத் துப்புவோம்! (மெதுவாக)... 'உதயநிதி, அந்தப் பொங்கல் பானை பக்கத்துல ஒரு கால்பந்தை வச்சிரு... விளையாடிக்கிட்டே பொங்கல் வைக்கிற மாதிரி ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் கெத்து காட்டணும்!'"
உதயநிதி: (தி ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர்)
"பொங்கல் என்பது ஒரு விளையாட்டுப் போட்டி மாதிரிதான். பானையை உடைக்கிறவன் யாருன்னு நமக்குத் தெரியும். சனாதனப் பொங்கலை ஒழிக்கிறதுதான் என் முதல் வேலை. அடுத்த பொங்கலுக்குள்ள தமிழ்நாட்டுல எல்லாருக்கும் 'மினிஸ்டர்' பதவி கொடுத்துட்டா, எல்லார் வீட்லயும் பொங்கல் பொங்கும்!"
எடப்பாடி பழனிசாமி: (தி ‘டெல்லி’ டிபென்டர்)
விவசாயி மகனாச் சொல்றேன் இந்தச் சேலத்துக்காரன் பொங்கல் வச்சா, அதுல கண்டிப்பா ‘கமிஷன்’... ஐயையோ, ‘கரும்பு’ இருக்கும். மக்களே ஒரு பக்கம் ஓபிஎஸ் என் பானையை உடைக்கப் பார்க்குறாரு, இன்னொரு பக்கம் அண்ணாமலை பானையில ஓட்டை போடப் பார்க்குறாரு. ஆனா இது அதிமுக பானை, இதுல ‘இரட்டை இலை’ போட்டாதான் பொங்கும். பொங்கல் பொங்குதோ இல்லையோ, 2026-ல நான் கோட்டையில பொங்கல் வைக்கிறது உறுதி!"
ஓ. பன்னீர்செல்வம்: (தி தியான மாஸ்டர்)
"பானை முன்னாடி உட்கார்ந்து தியானம் பண்றேன். பொங்கல் பொங்குற சத்தம் கேட்டா, அது டெல்லியில இருந்து வர்ற சிக்னலான்னு பார்ப்பேன். சின்னம் போச்சு, கட்சி போச்சு, இப்ப பானையும் போயிடக் கூடாதுன்னு ‘சின்னம்மா’ கிட்ட வேண்டிக்கிறேன். நீதி வெல்லும்... அதுவரைக்கும் பொங்கல் ஆறட்டும்!
விஜய்: (தி ‘பனையூர் தளபதி’ )
"நண்பா... ஒரு குட்டி ஸ்டோரி! ஒரு ஊர்ல ஒரு பெரிய பானை இருந்துச்சாம். அந்தப் பானையை ரெண்டு பழைய சிங்கங்கள் (DMK & ADMK) மாத்தி மாத்தி உருட்டி விளையாடிட்டு இருந்துச்சாம். அப்போ ஒரு 'தளபதி' வந்து, 'ஏய்... தள்ளி நில்லுங்கடா, இனிமே இது என் பானை'ன்னு ஒரு விசில் போட்டாராம்! 2026-ல வெறும் 'கட்-அவுட்' மட்டும் பொங்காது, தமிழகமே பொங்கும். என் நெஞ்சில் குடியிருக்கும்... (கண்ணடிக்கிறார்) வெயிட் பண்ணுங்க நண்பா!" 'தளபதி' வர்றார்... பொங்கல் தர்றார்!" அது வரைக்கும் தண்ணியடிச்சுட்டு குப்புற தூங்குறார்
சீமான் (தி லெமூரியா லெஜண்ட்)
"எண்டா... பொங்கல் பொங்குறப்போ ‘பொங்கலோ பொங்கல்’னு ஏன்டா கத்துறீங்க? ‘வாழ்க தமிழ்’னு சொல்லுடா! இந்தச் சர்க்கரை பொங்கல்ல வெள்ளைச் சர்க்கரை போடுறவன் தமிழனே கிடையாது! அவன் வந்தேறி! கருப்பட்டியைப் போடுடா! அன்னைக்கு நான் லெமூரியா கண்டத்துல ஒரு டைனோசரை மிரட்டி, அதோட வாயில இருந்து நெருப்பை வாங்கிப் பொங்கல் வச்சவன்டா! அந்த வீர வரலாறு தெரியுமா உங்களுக்கு? நீங்க என்னடான்னா அடுப்பு பத்த வைக்கிறதுக்குத் திராவிட மாடல் கிட்ட விறகு கேக்குறீங்க? மானம் கெட்டவனே... கரும்பை எடுடா, யுத்தத்தைத் தொடங்குடா கரும்புல கூட ஒரு ‘திராவிட’ சதி இருக்குன்னு நினைக்கிறேன். தம்பி... அந்தத் ‘தமிழ் தேசிய’ பானையை எடு!
அண்ணாமலை: (தி டேட்டா சிங்கம்)
"என்கிட்ட ஒரு 500 ஜிபி 'பொங்கல் ஊழல்' டேட்டா இருக்கு! சர்க்கரை பொங்கல்ல 'வெல்லம்' எங்கிருந்து வந்துச்சு, அந்த வெல்லம் வாங்கினதுல எத்தனை கோடி கமிஷன் போச்சுன்னு என்கிட்ட ஆடியோ இருக்கு. ஜனவரி 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு நான் ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணுவேன். அதுல ஒரு மந்திரி பொங்கலை ஊதி ஊதி சாப்பிடுற 'ஊழல்' அம்பலமாகும். 2026-ல தாமரை பொங்கும்... ஆனா அதுக்கு முன்னாடி உங்க பானையை நான் ரெய்டு பண்ணுவேன்!"
கமல்ஹாசன்: (தி ‘பிக்பாஸ்’ பொங்கல்)
"பானையின் அடிநாதம் என்பது அதன் சூனியமே. அந்தச் சூனியத்துக்குள் நாம் இடும் அரிசி என்பது ஒரு கூட்டுப்பரிணாமத் தேடல். நான் சொல்ல வருவது ‘மய்யம்’ பொங்கல். அதாவது, சர்க்கரையும் இருக்காது, உப்பும் இருக்காது... ஒரு மாதிரி மய்யமா இருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்... பொங்கலில் இருக்கும் முந்திரிக்கும், அரசியலில் இருக்கும் மந்திரிக்கும் ஒரு 'ஜியோ-பொலிட்டிக்கல்' தொடர்பு இருக்கிறது. இது வெறும் பொங்கல் அல்ல, இது ஒரு 'தக் லைஃப்' தத்துவம். புரியவில்லை என்றால் 'விக்ரம்' படத்தை இன்னொரு முறை பாருங்கள்!"
நிர்மலா சீதாராமன்: (தி ‘ஜிஎஸ்டி’ மாமி)
"பானை பொங்குறப்போ வர்ற ஆவிக்கு (Steam) 18% ஜிஎஸ்டி உண்டு. ஏன் பொங்கல் விலை ஏறுதுன்னு கேக்காதீங்க, ஏன்னா நான் பொங்கல் சாப்பிடுறதே இல்லை! உங்க வீட்ல பொங்கல் பொங்கலையா? அதுக்குக் காரணம் நீங்க கரும்பு வாங்காததுதான். டிஜிட்டல் இந்தியாவுல எதுக்கு பானை? போனை எடுத்து 'பொங்கல்'னு டைப் பண்ணிப் பாருங்க, அதுவே உங்களுக்குத் திருப்தி தரும்!"
மோடி & அமித்ஷா: (தி ‘ஸ்கேமர் ஸ்பெஷலிஸ்ட்) மோடி: (தி விசிட்டர்)
"வொணக்கம் தமிழ்நாடு! நான் இன்னைக்கு வேட்டி கட்டியிருக்கேன், துண்டு போட்டிருக்கேன். மதுரை மல்லி வச்சிருக்கேன் நான் கூட ஒரு தடவை ‘ஜல்லிக்கட்டு’ மாடு மாதிரி ஓடினேன் (அமித்ஷா மெதுவாக: ‘நோ ஜி, நீங்க ஓடல, மாட்டத் தான் ஓட வச்சீங்க’). ஆமாம்! நான் தமிழ்நாட்டை எவ்வளவு நேசிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியும் (அமித்ஷா மெதுவாக: 'ஆனா ஓட்டு மட்டும் போட மாட்டேங்கிறாங்க ஜி'). பரவாயில்லை அமித்ஷா ஜி... அடுத்த பொங்கலுக்குள்ள எல்லாப் பானையிலயும் 'காவி' பெயிண்ட் அடிச்சிடுவோம். 2026-ல தமிழ்நாட்டுப் பானையில ‘தாமரை’ மலரும்... ஐ மீன், பொங்கும்! பாரத் மாதா கி ஜே!"
அன்புமணி ராமதாஸ்: (தி ‘10.5%’ இனிப்பு)
"பானையில மேல இருக்குற 10.5% பொங்கல் வன்னியர்களுக்குத் தான் சொந்தம். இல்லன்னா நாங்க கரும்பை வச்சுப் போராட்டம் பண்ணுவோம். மது இல்லாத பொங்கல், இட ஒதுக்கீடு இருக்கிற அடுப்பு... இதுதான் பசுமைத் தாயகத்தோட பாலிசி. ஐயா சொல்லிட்டாரு, அப்புறம் நான் சொல்ல வேண்டியதில்லை!"
திருமாவளவன்: (தி ‘சனாதன’ எதிர்ப்பு)
"பானையில வெள்ளைப் பொங்கல் இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை, ஆனா அதுல ‘காவி’ சாயம் கலக்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கு. பானைக்குள்ள இருக்கிற அரிசிக்கு சமத்துவம் வேணும். சனாதன அடுப்பை அணைக்காம நாம பொங்கல் சாப்பிட மாட்டோம். பானை உடையலாம், ஆனா கொள்கை உடையாது!
ராகுல் காந்தி: (தி பாரத் ஜோடோ பொங்கல்) "நான் தமிழ்நாட்டை நேசிக்கிறேன். நான் கன்யாகுமரியில இருந்து காஷ்மீர் வரைக்கும் நடந்தேன், ஆனா எங்கயும் இவ்வளவு பெரிய கரும்பை நான் பார்த்ததே இல்லை! ஸ்டாலின் சார், எனக்கு ஒரு கப் பொங்கல் கிடைக்குமா? ஆனா அதுல வெறுப்பு இருக்கக் கூடாது, அன்பு மட்டும் தான் இருக்கணும். இது ‘அன்பு’ பொங்கல்!"
மதுரைத்தமிழன் : (தி நையாண்டி தமிழன்) " இப்படித்தான் "தலைவர்கள் எல்லாம் இனிப்பா பொங்கலை வச்சு முடிச்சுட்டு கரும்பைச் சாப்பிட்டுட்டு விட்டுப் போயிடுவாஙக. ஆனா, கடைசியில அந்தப் பானையைத் தேய்க்கிறது என்னவோ 'பொதுமக்கள்' ஆகிய நாமதான்!
2026-ல இவங்க உங்களுக்குப் பொங்கல் வைப்பாங்களா... இல்ல நாம இவங்களுக்குப் பொங்கல் வைப்போமா? பொறுத்திருந்து பார்ப்போம்!"
"தலைவர்கள் எல்லாம் பொங்கல் வைக்கிறாங்களோ இல்லையோ... கடைசியில ‘ஓட்டு’ போடுற மக்களுக்குப் பொங்கல் வச்சிராம இருந்தா சரிதான்!"
என் வலைத்தளத்திற்கு வருகை தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
படிக்காதவர்கள்
படிக்க எனது முந்தைய பதிவுகளின் சிறு லிஸ்ட்
பறிக்கப்பட்ட கூந்தல்... கருகிய வசந்தம்! ஈரான் முதல் இந்தியா வரை மதவாதம் சொல்லும் எச்சரிக்கை!
https://avargal-unmaigal.blogspot.com/2026/01/he-warning-that-religious-extremism.html
குருவுக்கே
‘தண்ணி காட்டும்’ சிஷ்யை! மணிரத்னம் ‘கிளாசிக்’... சுதா ‘மாஸ்’... கோலிவுட்டின் புதிய
‘கமர்ஷியல் சுல்தான்’
குருவின் நிழலிலிருந்து நிஜத்திற்கு: மணிரத்னம்
எனும் ‘கிளாசிக்’ சாம்ராஜ்யத்தை முந்துகிறாரா சுதா கொங்கரா?
https://avargal-unmaigal.blogspot.com/2026/01/is-sudha-kongara-surpassing-mani.html
பராசக்தி (2026): ஒரு திரைக்காவியமா? அல்லது திமுகவின் தேர்தல் அஸ்திரமா? - ஒரு முழுமையான அரசியல் ஆய்வு https://avargal-unmaigal.blogspot.com/2026/01/2026-parasakthi-2026-cinematic.html
இது வெறும் சினிமா விமர்சனம் அல்ல; அதையும் தாண்டிய கள யதார்த்தம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
#Pongal2026 #TamilNaduPolitics #PoliticalSatire #MaduraiTamizhanHumor #Stalin #VijayTVK #EPSvsOPS #Annamalai #Seeman #KamalHaasan #TNPolitics2026 #AvargalUnmaigal #HappyPongal #அரசியல்_களம் #மதுரைத்தமிழன்_வாழ்த்துகள் #பொங்கலோ_பொங்கல்2026
#தமிழர்_திருநாள் #அரசியல்_அலப்பறைகள் #சாட்டை_நையாண்டி #கோட்டை_பொங்கல் #சிரிப்பு_சர்க்கரை_பொங்கல்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.