Sunday, January 11, 2026

 சமூகத்தின் பிம்பங்கள்: பதிப்பகம் முதல் அரசியல் வரை - ஒரு சாமானியனின் பார்வை!

      

"சமூகத்தின் பிம்பங்கள்: பதிப்பகம் முதல் அரசியல் வரை - ஒரு சாமானியனின் பார்வை!


சின்ன சின்ன செய்திகள் கருத்துக்கள்

என் பார்வையில் இன்றைய தமிழகம் இப்படித்தான் தெரிகிறது. தமிழ்நாட்டுல அடுத்தவனை ஏமாற்ற தெரியதவன் எல்லாம் பிழைக்க தெரியாதவன்


தமிழ் பதிப்பக உலகில் ஒரு விசித்திரமான முரண்பாடு நிலவுகிறது.
புத்தகங்கள் விற்பனை ஆகவில்லை, வாசகர்கள் குறைந்துவிட்டார்கள்,
நாங்கள் நஷ்டத்தில் உள்ளோம்  என்று ஒவ்வொரு ஆண்டும் பதிப்பாளர்கள் கூறுகின்றனர். 


ஆனால் அதே பதிப்பாளர்கள், புத்தகக் கண்காட்சி தொடங்கும் நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடன் ஸ்டால் எடுக்க முன்வருவது ஒரு புதிராகவே உள்ளது. நஷ்டத்தில் இருக்கும் ஒருவர் அடுத்த வருடமும் அதே நஷ்டத்தைத் தேடி ஓடுவது எப்படி சாத்தியம்?

அதற்கும் மேலாக, ஸ்டால் கிடைக்காதபோது எழும் புலம்பல் இந்த முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்துகிறது.
#chennaibookfair2026

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள், கடக்கும் இளமை மீண்டும் திரும்ப போவதில்லை

தெரு #நாய்க்கு #பிஸ்கட் போட்டா அது கவனத்தை மாற்றிக் கொள்வது போல, எங்க தேர்தல் வரும்போது மக்கள் உண்மையான பிரச்சனைகளை பேசிடுவாங்களோ என்று பயந்த அரசியல் வல்லுநர்கள், #பராசக்தி #ஜனநாயகன் படத்தை ஒரு பெரிய ‘டிஸ்ட்ராக்ஷன்’ ஆக்கிட்டாங்க. அதையும் புரியாம “இது தான் நாட்டை காப்பாற்றும் விவாதம்!” என்று நம்ம மக்கள் அவங்க அவங்களுக்கு தெரிந்த வகையில் விவாதிக்கிறாங்க.

#வெளிநாட்டில் இருந்தாலும், தமிழர் என்ற பெயருக்கு தகுந்த மாதிரி
#அதே #பிஸ்கட் #ட்ராப்பில் விழுறாங்க நம்ம அறிவாளி தமிழர்கள்


கடந்த வாரம் நான் ஜர்னலிசம் குறித்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதில் உண்மையான பத்திரிகையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த நெறிமுறைகளைப் படித்தபோது, இன்றைய தமிழகத்திலும் இந்தியாவிலும் செயல்படும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் இந்த அடிப்படை விதிகளையே பின்பற்றவில்லை என்பது கண்முன்னே வெளிப்பட்டது. ஒரு வேளை அவர்கள் படித்த ஜர்னலிச படிப்பில் இது போன்ற விதிகளை அடங்கிய புத்தகமே இல்லை போலத்தான் தோன்றுகிறது

சிலரை விதிவிலக்காகக் கூறலாம், ஆனால் அந்த விதிவிலக்கானவர்களும் கூட அனைத்து நெறிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு வேளை இந்த ஒரு சிலர் இந்த விதிகள் அனைத்தையும் கற்று தேர்ந்த போதிலும் சிலவற்றை மட்டும் நினைவில் வைத்துள்ளனர்  போலத்தான் இருக்கிறது.

பண்பாடு, கலாச்சாரம், அறிவு ஆகியவற்றில் உலகம் முழுவதும் உயர்ந்த மதிப்பைப் பெற்ற இந்தியாவில் பத்திரிகைத்துறை இவ்வளவு சீரழிந்து   வீழ்ச்சியடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரியதாக எனக்கு தோன்றுகிறது

குறிப்பு: அந்த புத்தகத்தை படித்த பின்  நான் 
ஜர்னலிஸ்ட் இல்லை என்றாலும் அதில் கூறிய விதிகளை பின் பற்றிதான் கடந்த சில பதிவுகளை நான் எனது வலைத்தளத்தில் எழுதி வெளியிட்டு வருகிறேன் . அந்த பதிவுகள் அதிக வரவேற்பை எனக்கு கொடுத்து இருக்கின்றன என்பதை அங்கு வரும் எண்ணிக்கையை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. இனிமேலும் அதை தொடர்வது என முடிவு செய்து இருக்கின்றேன்.


என் வலைத்தளத்தை பற்றி AI  சொல்லுவது...
   

#AI review about avargal unmaigal blog



மோடி "#அகண்ட_பாரதத்தை" அமைக்கப் போகிறார் என்று கூறி கொண்டவர்கள் இப்போது மோடியினால் உருவாக்கப்பட்ட "#மிரண்ட_பாரதத்தை' கண்டு திகைத்து போய் நிற்கிறார்கள்


ரயில்வே பிளாட்ப்பாரத்தில் டீ விற்றவரை நாட்டின் பிரதமர் ஆக்கினால் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து புது ரயில் அனுப்பும் போது கொடியாட்டத்தான்  முடியுமே தவிர கொலம்பிய அதிபரை கைது செய்தற்கு கண்டணம் தெரிவிக்கவா முடியும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

 

படிக்காதவர்கள் படிக்க எனது முந்தைய பதிவுகளின் சிறு லிஸ்ட்

எனது பார்வையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) - பலம் மற்றும் பலவீனங்கள் 

கோட்டையை நோக்கி 'தளபதி': TVK-வின் வியூகம் வெல்லுமா?  https://avargal-unmaigal.blogspot.com/2026/01/tvk.html

 

திருப்பூர் டூ நியூயார்க்: ஃபேஷன் உலகின் 'மூளை'யாக மாறும் AI!

ஆடை வடிவமைப்பில் அரங்கேறும் டிஜிட்டல் புரட்சி - ஒரு சிறப்புப் பார்வை! https://avargal-unmaigal.blogspot.com/2026/01/ai-tirupur-textile-ai-revolution.html

 

"அகண்ட பாரதக் கனவு கண்டவர்களின் இன்றைய மிரண்ட நிலை என்ன? ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலும், ஜி-யின் மௌனமும்... விலைவாசி உயர்வு குறித்த அதிரடி அரசியல் நையாண்டிப் பதிவு!"


அகண்ட பாரதக் கனவு... டிரம்ப் அடியில் 'மிரண்ட' பாரதம்!

https://avargal-unmaigal.blogspot.com/2026/01/political-satire-tamil-akhanda-bharat.html

 

2026-ல் ஸ்மார்ட்போன் ஜாதகம்: ஏமாறாமல் வாங்க ஒரு "மெகா" கைடு!

**சென்னை முதல் கன்னியாகுமரி வரை... தமிழக செல்போன் பயனர்களுக்கான 2026-ன் பிரத்யேக அலசல்!**

 

https://avargal-unmaigal.blogspot.com/2026/01/2026-tamilnadusmartphone.html

 

#ChennaiBookFair2026 #MediaReality #PoliticsToday #MaduraiTamil #TamilnaduNews #BiscitTrap #Awareness #SocialCritique : #TamilnaduPolitics #SocialIssues #TamilThoughts #TruthTalks #MaduraiThamizhan #SocietyMirror #TamilWriting #CurrentAffairs #JournalismEthics

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.