தமிழ் சமுகத்தை பண்பாடற்ற சமுகம் எனச் சொல்லும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்குக் கடுமையான பதிலடி
அன்புள்ள சாரு நிவேதிதா, உங்கள் பதிலைப் படித்தேன் .அது ஒரு தோல்வியடைந்த எழுத்தாளனின் திமிரும், பொறுப்பை மக்களின் தலையில் போடும் கிளர்ச்சியும் நிரம்பியதுமாகத்தான் இருக்கிறது . உங்கள் பதிவு (https://charuonline.com/blog/?p=15896) என்னை விமர்சித்ததை விட, உங்களையே அம்பலப்படுத்தியிருக்கிறது. நான் உங்கள் எழுத்தை இழிவு செய்யவில்லை; உங்கள் அருவருப்பான நடத்தை மற்றும் மக்களை அவமதிக்கும் மனோபாவத்தை மட்டுமே சுட்டிக்காட்டினேன். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முடியாதவர் என்று அருவருக்கத்தக்க முறையில் பேசுகிறீர்கள். அது உங்கள் புத்தி குறைவையே காட்டுகிறது.
உங்களின் பதிவிற்கு என்பது பதில் இங்கே......
அட சாரு... உங்களின் கட்டுரை ஆரம்பத்திலே ஒரு பொய்யோடு எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
கீழே வரும் நீண்ட குறிப்பை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. அதை எனக்கு அனுப்பிய நண்பர் நான் இதற்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். ( பேஸ்புக்கில் உங்களை டேக் பண்ணிதானே என் பதிவை வெளியிட்டேன் ஹீஹீ_)
உங்கள் நண்பர் அனுப்பியதற்காக அதுவும் அவரும் பெயர் ஏதும் குறிப்பிடப்படப்படாத ஒருவர் எழுதிய ஒரு தகவலுக்குப் பதில் எழுதுகிறேன் என்று சொல்வதே எவ்வளவு மடத்தனமானது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?
உங்களை விமர்சிப்பதை மட்டித்தனமான என்று சொல்லி , அப்படி விமர்சிப்பதைப் படிப்பது இல்லை என்றால் அதைப் படித்து பதில் எழுதி வெளியிடுவது எந்த வகையில் சாரும் கொஞ்சம் யோசித்துத்தான் எழுதுங்களேன்.
ஜப்பானில் புத்தகங்கள் கோடியில் விற்கின்றன என்று சொல்லி, தமிழ்ச் சமூகத்தை அவமதிப்பது அறிவற்ற ஒப்பீடு. ஜப்பானின் வாசிப்பு பண்பாடு, கல்வி அமைப்பு, அரசியல் ஆதரவு இப்படிப் பல விஷயங்கள் சொல்லலாம் இவை அனைத்தும் வேறு. அதைத் தமிழருடன் ஒப்பிடுவது அறிவியல் பிழை.
ஜப்பான் ஒரு நாடு , தமிழகம் ஒரு மாநிலம் . ஜப்பானிய எழுத்தாளர் எழுதுவது ஒட்டு மொத்த ஜப்பான் நாட்டிற்கும் சென்று சேருகிறது ஆனால் இந்தியாவில் பல்வேறு மொழி பேசப்படுகிறது அதனால் உங்கள் ஒப்பிடு என்பது மிக தவறானது. தமிழர்களும் வாசிக்கிறார்கள் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் உள்ளவறையும் படிக்கிறாகள். தமிழில் எழுத்தாளர்களும் அதிகம்.
எப்படி ஜப்பான் நடிகரோ இயக்குநரோ தமிழ் திரைத்துறையை ஜப்பான் திரைத்துறையோடு ஒப்பிட்டு உங்களைப் போலப் பேசி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு ஜப்பான் நடிகர் தன் மக்களைப் பார்த்து, ஒரு நடிப்பைப் பார்த்து ரசிக்கத் தெரியவில்லை புரிந்து கொள்ளத் தெரியாத மூட்டாள் காலக ஜப்பான் மக்கள் இருக்கிறார்கள். அதனால்தான் என் நடிப்பு எடுபடாமல் இருக்கிறது .ஏய் ஜப்பான் மக்களே தமிழகத்தைப் பாருங்கள் அங்கே ரஜினி நடித்து வெளி வரும் படம் உலகம் எல்லாம் வெற்றி பெறுகிறது .ஏன் ஜப்பானிலும் கூட வெற்றி பெறுகிறது .நான் மட்டும் தமிழ் திரைப்படங்களின் நடித்து இருந்தால் என் திரைப்படமும் உலகம் எல்லாம் ஒடி நான் கார் பங்களா என்று சொகுசாக வாழ்ந்து இருப்பேனே என்று சொலவது போலத்தான் உங்களின் பேச்சும் இருக்கிறது.
உங்கள் எழுத்தைக் குறை சொல்லவில்லை . நீங்கள் தமிழ் சமுகத்தை இழிவு படுத்தி ,கடைசியில் அவர்களிடமே கையேந்துவதைத்தான் விமர்சிக்கின்றேன் உங்கள் புத்தகத்தைப் படித்து, அதில் இன்ன குறைகள் உள்ளன என்று பதிவு எழுதவில்லை .நான் சொல்லியதெல்லாம் அதிகம் விற்பனையாகவில்லையென்றால் , இந்த தமிழ் சமுக மக்களுக்கு ஏது பிடிக்கும் என்பதை உணர்ந்து எழுதுங்கள். அதைத்தான் எழுதுது நன்றாக இருந்தால் விற்பனை அதிகமாக இருக்கும் என்று சொல்ல முயன்று இருக்கிறேன் .ஆனால் அடுத்தவன் காசில் வாழ ஆசைப்படுவன் கண்ணிற்கு இதெல்லாம் குறையாகத் தெரிகின்றன.
நீங்கள் சங்கப் புலவர்கள் மன்னர்களிடம் பரிசு பெற்றதை எடுத்து தமிழ்ச் சமூகத்தைக் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அது கலை மதிப்பை மதிக்கும் ஒரு பண்பாட்டின் அங்கமாகும் .அதை நீங்கள் பிச்சை என்று கூறுவது உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. ஒரு பிச்சைக்காரனுக்கு மற்றவர்கள் சம்பாதிப்பது எல்லாம் பிச்சையாகவே தெரிகிறதாம் .ஆ ம் பிச்சை எடுக்கும் உங்களுக்குப் பிச்சைக்கும் பரிசிற்கும் வித்தியாசம் தெரியாததால்தான் . அந்த காலப் புலவர்கள் பிச்சை எடுத்துச் சம்பாதித்தார்கள் என்று சொல்லுகிறீர்கள். ஒரு சின்ன புரிதல் கூட இல்லாத நீங்கள் ஒரு பெரிய இலக்கிய எழுத்தாளர் என்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் புலவர்கள் அரசவையிலோ ,கிராமத்துச் சபையிலோ அல்லது மக்கள் கூடும் இடங்களில் தங்களது எண்ணங்களை எழுதி அதைப் பொதுவெளியில் பேசி பரிசுகளைப் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள் அது அன்றைய காலத்து இயல்பு & மரபு அது உங்கள் எண்ணத்தில் பிச்சையாகத் தெரிகின்றது என்றால் அது உங்களின் சிந்தனையில் எண்ணத்தில் உள்ள குறைபாடே.
#புதுமைப்பித்தன், #ஔவையார், போன்றோரின் பெயரை உபயோகித்து, உங்கள் தரமற்ற எழுத்தை உயர்த்த முயல்வது அவர்களை அவமதிப்பதற்குச் சமம். அவர்கள் மக்களிடம் பிச்சை எடுக்கவில்லை. அவர்கள் மக்களுக்காக எழுதியவர்கள். நீங்கள் மக்களை இழிவுபடுத்தும் எழுத்தாளர்.
தமிழ் சமுகம் பண்பாடற்ற சமுகம் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த பண்பாடற்ற சமுகம் எப்படி உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் . உங்கள் வாதப்படி எழுத்தாளர்களைத் தூக்கி வைத்து கொண்டாடாத பண்பாடற்ற சமுகத்திடம் இருந்து இப்படி ஒரு எதிர்பார்ப்பு வைத்திருக்கும் நீங்கள் ஒரு முட்டாளே
#புதுமைப்பித்தனை எடுத்து தமிழ்ச் சமூகத்தைக் கொலைவ accusation பாவிப்பது மிகவும் அருவருப்பானது. புதுமைப்பித்தன் தமிழுக்காக உழைத்தவர் ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் சமூகம் அல்ல, அவரது நேரத்தில் இல்லாத மருத்துவ வசதிகள் மற்றும் அரசு உதவி தான். நீங்கள் அவரது வறுமையைப் பற்றிப் புலம்பி, தமிழர்களைக் குற்றம் சாட்டுவது ஒரு பெரிய புனையல்
எழுத்தாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அது எழுத்தாளின் அறிவற்ற செயல்களால்தான் இருக்க முடியுமே தவிர , அதற்கு ஒரு சமுகம் காரணமாக இருக்க முடியாது. அந்த காலத்திலே கல்லூரியில் படித்தது பட்டம் பெற்ற புதுமைப்பித்தன் கடைசிக்காலத்தில் கஷ்டப்பட்டது அவரது எழுத்தினால் அல்ல அவர் திரைத்துறை துறையில் நுழைந்தது மட்டுமல்ல ஒரு தயாரிப்பளாராகி படம் எடுத்து நஷ்டப் பட்டதால்தான் .இது தெரியாமல் சாரு தமிழ் சமுகத்தைக் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்
உங்களுக்கு ஏஜெண்ட் இல்லாதது, பதிப்பகம் தோல்வியடைந்தது எல்லாம் உங்கள் எழுத்தின் தரமற்றதால் அதை மறைக்க மக்களைக் குற்றம் சாட்டுவது ஒரு துரோகம்.
எழுத்தாளர்கள் என்றாலே கஷ்டப்படுபவர்கள் என்று தோற்றத்தை ஏற்படுத்தி ஒரு கழிவிரக்கம் உண்டாக்கி, அதன் மூலம் பிச்சை எடுக்கும் சாரு ,அவரின் சம கால எழுத்தாளர்களோடு ஒப்பீட்டு பார்க்கலாமே. ஜெயமோகன், எஸ். ராம்கிருஷணா. ஏன் அவரது நண்பர் சிஷ்யர் அராத்துவை எடுத்துக் கொள்ளட்டுமே.. அவர்கள் இப்படித்தான் கையேந்துகிறார்களா என்ன? ஜெயமோனின் எழுத்துக்கள் விற்பனையாகவில்லையா ?அவர் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வந்து வாசகர்களோடு கலந்துரையாடவில்லையா என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்னால் வேள்பாரி புத்தகம் வெளிவந்து எப்படிப் பரபரப்பாகப் பேசப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமர்சிக்கப்பட்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன? அதைப் படித்து விமர்சித்த சமுகம் உங்களால் பண்டாடற்ற சமுகம் என்று தூற்றப்படும் தமிழ் சமுகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
The Indian book market is projected to reach US$5.83 billion in 2025, with an anticipated 483.3 million users by 2030.
//என் எழுத்தில் குறை இருந்தால் ஔரங்ஸேப் நாவலுக்கு அகில இந்திய அளவில் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்து க்ராஸ்வேர்ட் விருது தருவார்களா?
ஒளரங்கசீப் நாவலுக்கு எப்படி விருது கிடைத்தது என்று சொன்ன நீங்கள், அது எப்படிக் கிடைத்தது என்பதையும் கொஞ்சம் விளக்கிச் சொல்லி இருக்கலாம். அந்த புத்தகம் அதிகம் விற்பனையாகி மக்களால் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டதால் கிடைத்ததா ? அல்லது உங்கள் சிஷ்யர் அராத்து தன் பேஸ்புக்கில் ஒளரங்கசீப் புத்தகத்திற்கு வோட்டு போட்டுத் தேர்ந்தெடுங்கள் என்று அவருடைய பேஸ்புக் பாலோவர்களிடம் வேண்டுகோள் விடுவித்து அதன் மூலம் தேந்தெடுக்கப்பட்டுதானே அதற்கு விருது கிடைத்தது. பூனைக் கண்ணை முடிக் கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைத்துக்கொள்வது போல நீங்களும் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் "பெட்டியோ" மொழிபெயர்ப்பு இந்தியாவில் அலை உருவாக்கும் என்று அடித்துக் கூறுகிறீர்கள் ,ஆனால் உங்கள் கடந்தகால தோல்விகளைப் பார்த்தால், அது ஒரு வெற்று புகழ் பரப்புதல் மட்டுமே. லிடரரி ஏஜெண்டுகள் கிடைப்பதில்லை, சர்வதேச பதிப்பகங்கள் அணுக முடியவில்லை இது உங்கள் எழுத்தின் சர்வதேச தரமற்றதற்கு சான்று. உலகம் முழுவதும் இரண்டு புத்தகம் எழுதினால் செல்வந்தர்கள் ஆவார்கள் என்று சொல்லி, உங்கள் இருநூறு பிரதி விற்பனையை நியாயப்படுத்த முயல்கிறீர்கள் ஆனால் உண்மை என்னவென்றால், உலகம் உங்கள் எழுத்தை மதிக்கவில்லை, அதுதான்!
///தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முழுவதுமே இப்படித்தான் இருந்தது, இருக்கிறது. சினிமாவுக்குப் போய் கை கட்டி நின்றால் மட்டுமே காசு கிடைக்கும். என்னால் கை கட்ட முடியாது. இயக்குநர்தான் என் முன்னே கை கட்ட வேண்டும். //
இயக்குநர் உங்கள் முன்னால் கைக்கட்ட வேண்டும் என்றால் உங்களிடம் பணம் இருக்க வேண்டும் அல்லது உங்கள் எழுத்து மக்களைக் கவருவதாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நிச்சயம் இயக்குனர்கள் கைக்கட்டி உங்கள் முன் நிற்பார்கள்.. ஆனால் நீங்கள் சொலவது எப்படி இருக்கிறது என்றால் பிச்சை வாங்குபவன் கைக்கட்டி நிற்க மட்டான் ஆனால் தர்மம் செய்பவன் கைக்கட்டி நிற்க வேண்டுமென்று சொல்வது போல இருக்கிறது.. நிச்சயம் வயதான காலத்தில் உங்களின் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது
??புளியமரத்தை மொழிபெயர்த்தவர் நாற்பது ஆண்டுகள் சென்னையின் ஒரு பிரபலமான கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவர். அவர் மொழிபெயர்ப்பில் ஒரு பிழை இல்லை. ஆனால் அது பத்தாம் கிளாஸ் மாணவன் எழுதும் வியாசம் போல் இருந்தது. கிழித்துக் குப்பையிலே போட்டு விட்டேன். இலக்கியம் வேறு. ஆங்கிலத்தை இலக்கணப் பிழையின்றி எழுதுவது வேறு. ///
அட சாரு ஆங்கில பேராசிரியர்கள் எல்லாம் மொழி பெயர்ப்பு வல்லுநர்கள் அல்ல என்பது தெரியாமல் அவர்களிடம் மொழி பெயர்க்கச் சொன்னது நீங்கள்தான் அது உங்களின் மடத்தனம் அன்றி வேறு ஏதுமில்லை. மொழி பெயர்ப்பது என்பது ஒரு கலை
யாருடைய வங்கி கணக்கும் அமுத சுரபி அல்ல செலவழிக்கச் செலவழிக்க அது நிறைந்து வழிவதற்கு... முதலில் பணத்தை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.. தமிழர்கள் பணத்தை எப்படிக் கையாளுவது என்பதை புரிந்து கொண்டிருப்பதால்தான் நீங்கள் கேட்கும் உதவியைச் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்களுக்குத் தெரியும் குப்பைக்காகப் பணத்தை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை, நீங்கள் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லுகிறீர்களே உங்கள் பிள்ளைகளும் தமிழர்கள்தானே அவர்களும் படித்தவர்கள்தானே.. அவர்களும் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்கள்தானே. அவர்களின் பங்களிப்பு என்னவென்று இதுவரை சொல்லி இருக்கிறீர்களா? உங்கள்பிள்ளைகளே உங்கள் எழுத்தை மதிக்காத போது தமிழ் சமுகம் எப்படி பாரட்டும்.
இதுவரை மொழிபெயர்ப்புக்காக இருபது லட்சத்துக்கு மேல் செலவு செய்திருப்பேன் என்று சொல்லும் நீங்கள் அப்படிச் செலவழித்து மொழி பெயர்த்தும் உங்கள் புத்தகம் விலை போகவில்லை என்றால் உங்கள் எழுத்து எப்படி இருக்கிறது என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் . அதுவும் உங்களுக்கு அந்த திறமை இருந்தால்
ஔரங்ஸேப் மொழிபெயர்ப்புக்கு மூன்று லட்சம். அது இந்திய அளவில் விருது வென்றது. அராத்துவின் பேஸ்புக் நண்பர்களால் கிடைத்தது என்பதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு அறிவு வளர்ச்சி வேண்டும் .அது உங்களுக்கு இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன் அமேசான் புத்தக போட்டியில் வெறது திமுக கட்சியை சார்ந்தவர்களின் புத்தகம் அது வெற்றி பெற்றதற்குக் காரணம் அது சிறந்த புத்தகம் என்பதற்காக அல்ல கட்சிகாரகள் அந்த அமேசான் வோட்டு எடுப்பில் கலந்து கொண்டு அதை முன் நிறுத்தியதால்தான். பல நல்ல புத்தகங்கக்ளை எழுதியவர்கள் அந்த போட்டியில் தோற்றுப் போனார்கள் என்பதைப் படித்தவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.. இது போலத்தான் உங்கள் புத்தகமும் அராத்துவின் பேஸ்புக் நண்பர்கள் மூலம் தேர்தெடுக்கபட்டதே ஒழிய உங்கள் புத்தகம் அதிகம் விற்றதால் அல்ல, இதில் பெருமைப்பட ஏதுமில்லை சாரு
//வளன் ஒரு விஷயம் சொன்னான், அவனுடைய நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றிச் சொல்லும்போது சாரு நூறு நூல்கள் எழுதியிருக்கிறார் என்ற தகவலைச் சொல்லியிருக்கிறான். அப்படியானால் அவர் மில்லியனராக இருக்க வேண்டுமே என்றாராம் அந்த அமெரிக்கர். //
அமெரிக்கர்களிடமும் முட்டாள்கள் உண்டு நீங்கள் சொன்ன வளவனுக்கு அப்படிப்பட்ட ஒரு நண்பர் கிடைத்து இருக்கிறார் அவ்வளவுதான்
///உலகம் முழுவதும் இரண்டு புத்தகம் எழுதினாலே ஒரு எழுத்தாளர் செல்வந்தராகி விடுவார். ///நன்றாக எழுதத் தெரிந்தவர் மட்டுமே செல்வந்தர் ஆகமுடியும் எழுதுபவர்கள் எல்லாம் நன்றாக எழுதுபவர்கள் அல்ல
நீங்கள் மக்களை மதிக்க வேண்டும் என்று நான் சொன்னதை, பர்த்ருஹரியின் மேற்கோளை எடுத்துத் திரித்து பதிலடி கொடுக்க முயல்கிறீர்கள். "இலக்கியம் அறியாதவர் நடமாடும் பிரேதம்" என்று சொல்லி தமிழர்களை இழிவு செய்யும் உங்கள் மனோபாவம் ஒரு பெரிய ஆபத்து. இலக்கியம் அறியாவிட்டாலும், உங்களைப் போல ஆணவம் கொண்டவர்களை விட அவர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் திரைத்துறை நடிகர்களைக் கடவுளாகக் கொண்டாடும் சமூகத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்கிறீர்கள் ஆனால் உண்மையில் நீங்கள் மக்களை அவமதித்து, தன்னை மேலிடமாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள். அது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்புடைய மனப்பான்மையா?
பர்த்ருஹரி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் ஆனால் அதை நீங்கப் புரிந்து கொண்டதுதான் தவறு நீங்கள் எழுதுவது குப்பைதானே ஒழிய அது இலக்கிய அல்ல என்பது புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு அறிவில்லை.
. /// எழுத்தாளர்களை மதிக்காத சமூகம் தமிழ்ச் சமூகம். ///
உங்கள் காலத்தில் வாழும் எழுத்தாளர் ஜெயமோகனைத் தமிழ் சமுக கொண்டாடுகிறதே எஸ்.ராமகிருஷணை கொண்டாடுகிறதே.. தமிழ் சமுகத்திற்கு யாரைக் கொண்டாட வேண்டும் யாரைத் தூக்கி எறிய வேண்டும் என்பது மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது . ஆனால் அது உங்களுக்குத்தான் தெரியவில்லை அல்லது புரியவில்லை
உங்கள் புத்தகங்களுக்கு வாசகர்கள் இல்லை என்றால், அது சமூகத்தின் தவறா, உங்கள் எழுத்தின் தோல்வியா?
நீங்கள் மீண்டும் என்னை விமர்சிக்க முயல்வீர்கள். ஆனால் உங்கள் வார்த்தைகள் உங்கள் தோல்வியை மறைக்காது. உங்கள் எழுத்து தரமற்றது, உங்கள் அணுகுமுறை அருவருப்பானது, உங்கள் மனோபாவம் கீழானது. தமிழ்ச் சமூகத்தைக் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.
உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள். இல்லையெனில், நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பிச்சை எடுத்து, உங்கள் தோல்வியை மக்களின் தலையில் போடுவீர்கள். அது உங்கள் கதியாக இருக்கட்டும் ஆனால் அதை நியாயப்படுத்த முயலாதீர்கள்!
சாரு அவர்களே அடுத்தவர்களிடம் கையேந்தாமல் புத்தகம் வெளியிடுவதற்கான வழிகளை( https://avargal-unmaigal.blogspot.com/2025/06/blog-post_30.html ) நான் வெளியிட்டு இருக்கிறேன்.. உங்கள் எழுத்து தரமாக இருந்தால் அந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால் நிச்சயம் வெளியாகும்..
சாரு நிவேதிதாவின் உதவி வேண்டுமென்ற பதிவிற்கு கடுமையான எதிர்பதிவு (https://avargal-unmaigal.blogspot.com/2025/06/charu-nivedita-tamil-writter.html )
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்தான் புதுமைப் பித்தனுக்கும் சாரு நிவேதிதாவிற்கும் உள்ள வித்தியாசம்
நோட் : உங்களை பற்றிய என் முந்தையப் பதிவை படித்து உங்களிடம் சொன்னவர் நிச்சயம் இந்த பதிவையும் உங்களிடம் சொல்லுவார் என நினைக்கிறேன்.. அல்லது சொன்னால் மான்ஸ்தானா நீங்கள் தற்கொலை செய்யுது கொள்ளவீர்கள் நினைத்து சொல்லாமலும் இருக்கலாம்
Strong response to writer #Charu #Nivedita who calls Tamil society an #uncultured society
#TamilVoicesMatter #ExposeLiteraryHypocrisy #ThirukkuralSpeaksTruth #JusticeForTamilWriters#LiteraryDignity#TamilHeritageUnshaken#AnsweringCharu#TruthOverMockery#StandWithTamilLiterature
#ReplyToCharu #சாருவுக்குப்பதிலடி #தமிழ்சமூகம்சமர்ப்பணம் #இலக்கியதுரோதத்துக்கு_பதில் #தமிழ்மக்களின்மரபு #திருக்குறள்சொல்லும்_உண்மை #தமிழ்_எழுத்தின்_ஒளி #அறம்சமூகத்தின்_அடித்தளம் #சிலப்பதிகாரம்_பேசுகிறது #மக்கள்மீதானபழியெதிர்க்கவும
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.