Friday, July 18, 2025


எனக்கு உதவி செய்யவில்லையா நீ 

    




🙏 நமக்குப் பிரச்சனைகள் என்றால் நண்பர்களிடம் உதவி கேட்பது இயல்பான விஷயம். ஆனால் அவர்கள் உடனே உதவவில்லை என்றால்,  அவர்கள் நம்மைக் காயப்படுத்திவிட்டார்கள் என்று க எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நாம் உதவி கேட்டதும், அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால், உடனே கோபப்படுவது, பேசாமல் இருப்பது, அல்லது 'அன்பிரண்ட்' செய்யவோ 'ப்ளாக்' செய்யவோ வேண்டாம். ஒருவரின் செயலுக்குப் பின்னால் எதையெல்லாம் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியாமல் இருக்கலாம்.


🌿 ஒரு நல்ல நண்பர், அவரால் முடிந்த அளவுக்கு நிச்சயம் உதவ முயற்சிப்பார். ஆனால் சில நேரங்களில், அவர்களது சூழ்நிலை, மனநிலை, அல்லது பொறுப்புகள் காரணமாக உடனடி உதவி செய்ய முடியாமலும் போகலாம். பல நேரங்களில் நமக்குத் தெரிவது  நண்பர்களின் வெளிப்புற வாழ்க்கை மட்டுமே ஆனால் சில நேரங்களில் அவர்களின் உள் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது நமக்கு தெரியாமல் இருக்கலாம். நமக்குப் பிரச்சனைகள் வரும் சமயத்தில்  நண்பர்களின் வாழ்விலும் பெரிய புயலே அடித்துக் கொண்டு இருக்கலாம். அது  நமக்கு தெரியாமல்  கூட இருக்கலாம்தானே.அதனால் நாம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கவிட்டால் அவர்கள்  நம்மைக் காயப்படுத்திவிட்டதாகக் கருத வேண்டாம்

🧘‍♀️ மெச்சுரிட்டி என்பது, மற்றவர்களின் நிலையைப் புரிந்து கொள்ளும் திறன். நம்மால் முடிந்த அளவுக்குப் பொறுமையுடன், புரிந்துகொள்ளும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது தான் உண்மையான நட்பு.

💛 நட்பு என்பது ஒருவரின் தேவைக்கு மட்டும் அல்ல, அவர்களின் நிலையைப் புரிந்து கொள்ளும் ஒரு பயணமும் கூட.

   உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து
விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.




அன்புடன்
மதுரைத்தமிழன்


#நட்பு #புரிதல் #பொறுமை #நண்பர்கள் #உணர்வுகள் #நட்பின்_ஆழம்
#Friendship #Understanding #Patience #Friends #Emotions #DepthOfFriendship  


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.