Saturday, July 26, 2025

 அமெரிக்காவில் தமிழனுக்கு நேரும் 'விருந்து' கொடுமைகள்: உயிர்பிழைக்க ஒரு வழி இருக்காடா?
   



அடடா... அமெரிக்கான்னா என்னமோ சொர்க்கம்னு நினைச்சீங்களா? இங்க தமிழனுக்கு நேரும் கொடுமைகளை கேட்டா, உங்க கண்ணுல ரத்தக் கண்ணீர் வரும்! குறிப்பா, இந்த 'விருந்து'ங்கிற பேர்ல நடக்குற கொடுமைகள் இருக்கே... அப்பாடா!



இப்ப  இங்குள்ள  நண்பர்கள்  யாரும் வாடா வீட்டுக்கு, விருந்திற்கு கூப்பிட்டால் போகவே பயமா இருக்கு எனக்கு. காரணம் விருந்திற்கு கூப்பிட்டு கொடுமை படுத்துகிறார்கள் அமெரிக்காவில் வாழும் எனது அருமை நண்பர்கள் .. இது எனக்கு மட்டுமல்ல என்னை போல உள்ள ப்லருக்கும் இது போல  கொடுமைகள் நடக்கிறது.. அதனால இப்ப யாராவது அமெரிக்கா வாசி "வா டா வீட்டுக்கு"ன்னு சொன்னா, நான் டூடூன்னு ஓடறேன். அது அழைப்பு இல்ல டா... தூக்குச் சீட்டு! 


காபி, டீ-யும் ஒரு கொடுமை!

முன்பெல்லாம் ஒருவரின் வீட்டிற்கு போனால் உடனே சரக்கு பாட்டிலை எடுத்துவைத்து கூடவே பல சைடிஸ்களை வைப்பார்கள் . இப்பல்லாம் வீட்டுக்கு போனா, காபி, டீ கூட தரமாட்டேங்குறாங்க. அப்படியே மனசு இறங்கி தந்தாலும், சுகர், பால் சேர்க்க மாட்டேங்குறாங்க. அடேய்! அது இல்லாம அதை காபி, டீ-ன்னு எப்படிடா கூப்பிடுவீங்க? அது கழனி தண்ணிடா கழனி தண்ணி! "வேண்டாம்"னு சொன்னா, உடனே "க்ரீன் டீ தரவா? உடம்புக்கு நல்லது"ன்னு ஒசொல்லுவார்கள், அடேய் அதை குடிக்கும் நீயே ICU பேஷ்ண்ட் போலத்தான் இருக்கிறாய் என சொல்லவா முடியும்


தோட்டத்துல ஒரு டார்ச்சர்!

சரி, விருந்துக்கு போனோமே, நம்மள கொஞ்சம் என்டர்டெயின் பண்ணுவாங்களான்னு பார்த்தா... இல்லடா சாமி! நம்மை கூட்டிட்டு போய், அவங்க வீட்டு தோட்டத்துல போட்டுருக்கிற செடி கொடிகளை காட்டி, அதை எப்படி வளர்க்கணும்னு ஒரு மணி நேரம் பாடமே எடுப்பாங்க. மத்தவங்க எல்லாம் வாய் பிளந்து பார்ப்பாங்க. ஆனா, என்னைப் போன்றவர்களுக்கு அது மொட்டை கத்தியை வச்சு கழுத்தை அறுக்குற மாதிரி இருக்கும்டா கொடுமை! ஒரு தக்காளி செடிக்கு இவ்வளவு பில்டப்பா?


சுகர் அளவும், சாகாத டயட்டும்!

அப்புறம், வேற ஏதாவது பேசுவாங்களான்னு பார்த்தா, உடனே அவரவர் சுகர் அளவை பத்தி பேசுவாங்க. "நேத்து 180 இருந்துச்சு, இன்னைக்கு 175"ன்னு ஒருத்தன் சொல்ல, "நான் இந்த டயட்ல இருக்கேன், எனக்கு 160 தான்"னு இன்னொருத்தன் பீலா விடுவான். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்... அவங்க என்ன டயட் எடுத்தாலும், அவங்க சுகர் அளவு குறையவே குறையாது! இது ஒரு எழுதப்படாத விதி!

டின்னர் டைம்... திகில் டைம்!

சரின்னு இந்த கொடுமையையும் கேட்டுக்கிட்டு இருக்கும்போது, டின்னர் டைம் வந்துடும். டேபிள்ல உட்கார்ந்தா, ஆடு மாடுகளுக்கு வைப்பது போல சாலட்னு சொல்லி ஏதோ ஒன்னு வைப்பாங்க. அப்புறம், தண்ணியே இல்லாத ராஜஸ்தான் பாலைவனம் மாதிரி, எண்ணெயே இல்லாத ஒரு ரொட்டி வரும். அதுக்கு சைடிஷ்ஷா "ஹெல்த்தி குருமா"ன்னு ஒன்னு வைப்பாங்க. அது குருமா இல்லடா... கேரட், பீன்ஸ் போட்டு, கொஞ்சம் மஞ்சள் தண்ணி தெளிச்சு, உப்பு மிகக் குறைந்த அளவு போட்டு, "கர்மமே"ன்னு கண்ணை மூடி திங்க வேண்டிய ஒரு சமாச்சாரம்!

அதுமட்டுமில்ல, பத்து பேரை கூப்பிட்டு இருப்பாங்க. ஆனா சாப்பிட மொத்தமே ஒரு கிண்ணம் ரைஸ் மட்டும் வச்சிருப்பாங்க. அதையும் ஒருவர் பரிமாறும்போது, ஒரு ஸ்பூன் ரைஸ் எடுத்து போடும்போது, "இதுவே மிக அதிகம்"னு ஒருத்தர் சொல்லுவார். இன்னொருத்தர், "இது ஜாஸ்தி, நான் டயட்ல இருக்கேன், அதுல அரை ஸ்பூன் மட்டும் போடுங்க"ன்னு சொல்லுவார். அப்ப நமக்கு வாய்ச்சது ஒரு பார்வை பார்க்கும். அதோட அர்த்தம் என்னன்னா, "நீயும் அதுபோல ஒரு ஸ்பூன் மட்டும் வாங்கி சாப்பிடு" என்பதுதான்! சரி, சாதம் போட்டாச்சு, குழம்பு ஏதும் வருமான்னு பார்த்தா... ஒரு பொரியல், ஒரு கூட்டு மட்டும் வரும். பொரியல்னா என்னன்னா, காயை கட் பண்ணி, லைட்டா உப்பு சேர்த்து வேக வச்சது. கூட்டுன்னா, இந்த பொரியலை செஞ்சு, அதுல கொஞ்சம் பருப்பை போட்டு வச்சது! அவ்வளவுதான்!


கருப்பட்டி ஸ்வீட்... கர்ம ஸ்வீட்!

கடைசியில ஸ்வீட்னு பேர்ல கருப்பட்டியில செஞ்ச ஏதோ ஒன்னு வரும். இந்த வாட்ஸ்அப் டாக்டர்கள், "கருப்பட்டியில செஞ்ச ஸ்வீட் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது"ன்னு தகவல் பரப்பி வச்சிருப்பாங்க. அதை ஐடி-ல வேலை செய்யும் படித்த பெரிசுகள் எல்லாம் தேவ வாக்கா எடுத்து, அதை அப்படியே பின்பற்றுவாங்க. அதை சாப்பிடும்போது, "இது ஸ்வீட்டா, இல்ல கர்ம ஸ்வீட்டா?"ன்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி ஓடும்.

ரிட்டையர்மென்ட் பேச்சு... உயிரை வாங்கும் பேச்சு!

"என்ன கொடுமை, இவ்வளவுதானா?"ன்னு கேட்கக்கூடாது. அதுக்கப்புறம் எல்லாரும் உட்கார்ந்து, "ரிட்டையர்மென்ட் ஆன பிறகு என்ன செய்யலாம்? அதுக்கு எப்படி இன்வெஸ்ட் செய்யலாம்?"னு கலந்துரையாடுவாங்க. அப்ப என் மைண்ட் வாய்ஸ் சொல்றது எல்லாம், "அடேய்! இப்பவே அனுபவிங்கடா! நீங்க ரிட்டையர்மென்ட் ஆக மாட்டீங்க! அதுக்கு முன்னாடி நீங்க இந்த உலகத்துல இருந்து ரிட்டையர்மென்ட் ஆகிடுவீங்க!"ன்னு சொல்ல தோணும். ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியாதுல்ல?

சொர்க்கம்... என் வீடு!

இந்த இழவை எல்லாம் அமைதியா கேட்டுட்டு, வீட்டுக்கு வந்ததும், சுடச்சுட நிறைய நல்லெண்ணெய் ஊற்றிய வத்தக் குழம்பும், கூடவே ஒரு பவுல் நிறைய உருளைக்கிழங்கு பொரியலும், அப்பளமும், கூடவே கொஞ்சம் தயிர் சாதமும், ஊறுகாயும் வச்சு சாப்பிட்டுட்டு, அப்படியே கையில சூடா ஒரு கப் காபி எடுத்துட்டு போய் பெட்ல அமர்ந்து, கையில லேப்டாப்பை எடுத்த பின் தான் சொர்க்கத்துக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு தோணும்.

கடைசி வேண்டுகோள்:


அடேய் இன்னிமே என்னை இந்த மாதிரி கெட்டுகேதற்க்கு கூப்பிட்டு கொடுமை படுத்தாதிங்கடா வூட்டுடுங்கடா நான் பாவம் டா  
“அடேய்! இனிமே நீங்க ‘வா வீட்டுக்கு’ன்னு கூப்பிடாதீங்கடா!  அப்படி கூப்பிட்டா கொஞ்சம் மனுஷனுக்கு  சாப்பாடு போடுற மாதிரி போடுங்கடா


அன்புடன்
மதுரைத்தமிழன்;

டிஸ்கி :கடந்த வாரம் ஒரு நண்பரின் வீட்டிற்கு  சென்று வந்த பின் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கு நகைச்சுவை பதிவா

 

 

 

#Tamil Diaspora Humor,  #TamilsInAmerica, #TamilAbroadChronicles, #DiasporaDilemmas, #MaduraiManVsAmericanMeal

 #Hospitality or Hostility?  #InviteOrInterrogate, #TortureInTheNameOfTea , #SaladSurvivalStories #RiceRationReality    #Emotional  Rollercoaster,  #ICUCoffeeCrisis #RetirementTalkTerror ,#GardenTourGoneWrong, #KarupattiOrKaruppam

🎭 Punchlines & Irony, #AmericanDreamDebunked, #HealthyFoodHaunting,#DinnerTableDrama#OneSpoonRiceChallenge

 

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.