Sunday, July 13, 2025

 தடைக்கல்லான  ஜெயலலிதா அகற்றப்பட்ட பின்னர்  பாஜகவின் புதிய சதி, எடப்பாடி சிதைப்பு , திமுக குறிவைப்பு!"  

    



தமிழ்நாட்டு அரசியல் களம் உலாகலாவிய சதுரங்க போட்டிக் களம்போல மாறி இருக்கிறது. இந்த போட்டி இப்போது ஒரு  ஆங்கில சினிமா படம் போலத் திருப்பங்களும் சஸ்பென்ஸும் நிறைந்ததாக மாறியிருக்கிறது.   

திமுக இப்போது தன் கூட்டணிக் கட்சிகளுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிறது . பாஜக அதிமுகவுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டி இருக்கிறது. பாமகவில் அப்பாவும் மகனுமாகச் சதுரங்கம் ஆடிக் கொண்டும் ,சீமான் , விஜய் போன்றவர்கள் தங்களுக்குள்ளாகவே ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்

இந்த சதுரங்க போட்டியில் திமுக லீடிங்கில் இருக்கிறது. பாஜக அந்த இடத்திற்கு  வர வேண்டுமென்றால் அதற்கு முட்டுக் கட்டையாக அதிமுக இருக்கிறது.. அதனால் அதிமுகவுடன் சேர்ந்து முதலில் அதிமுகவை அழித்துவிட்டால் அதன் பின் திமுகவுடன் போட்டியிட்டு வெல்ல முடியும்.

இதன் காரணமாகவே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல ஆட்சி அதிகாரத்திலும் கூட்டணிக்குப் பங்கு உண்டு என்று  அமித்ஷா அமெரிக்க அதிபர் ட்ரெம்பை போல மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். எடப்பாடியோ மோடி போலப் பம்மிப் பம்மி சுற்றி வருகிறார்.       



வாக்கு வங்கியில் பலமாக இருக்கும் அதிமுகவின் எடப்பாடி, ஏன் பாஜகவின் அமித்ஷாவைப்  பார்த்து  ஏன் பயப்படுகிறார் பம்முகிறார்? பதில் எல்லோருக்கும் தெரியும்  மத்தியில் ஆளும் பாஜகவின் கையில் விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதுரங்க ஆட்டம் நடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?


இந்த ஆட்டத்திற்குள் போவதற்கு முன்னால் ஒரு விஷயத்தைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்து கொண்டாக வேண்டும் அதன் பின் இப்போது நடக்கும் ஆட்டம் நன்றாக விளங்கும்

அந்த முக்கிய விஷயம் ஆர்.எஸ்.எஸ். பாஜக.. 


ஆர்.எஸ்.எஸ். ஒரு ஓநாய் என்றால் பாஜக அந்த ஓநாய் போர்த்திக் கொள்ள உதவும் ஆட்டுத்தோல்..  இந்த ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டுதான் ஓநாய் ஆட்டம் போடுகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்.  போடும் திட்டங்கள் எல்லாம் நீண்டகால திட்டங்களே அன்றி குறுகியகால திட்டங்கள் அல்ல அந்த நீண்ட கால தீட்டங்களில் வெற்றி கொள்ள அவர்கள் சிறு சிறு திட்டங்களாகத் தீட்டி அவர்களின் நீண்ட கால திட்ட வெற்றியை நோக்கிச் செல்வார்கள் அப்படித்தான் அவர்கள் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறார்கள்.

இப்படி இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில்  வந்து அமர்ந்தவர்களுக்குத் தமிழகம்  ஒரு மிகவும் சோதனைக்களமாக இருக்கிறது .அதற்காக அவர்கள் பின் வாங்கப் போவதில்லை. இந்தியாவின் ஆட்சியை  நீண்ட கால திட்டம் போட்டுப் பிடித்தவர்களுக்குத் தமிழகத்தைப் பிடிக்க வழி தெரியாதா என்ன?

இந்தியாவில் முதலில் ஆட்சி கைப்பற்றிய நேரத்தில் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் ஜெயலலிதா அதற்கு ஒரு தடைக்கல்லாக இருந்தார்.. காரணம் இவர்கள் எந்த மதத்தைச் சாதியைச் சேர்ந்தவர்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்களோ அவர்களின் முழு ஆதரவும் ஜெயலலிதா பக்கம் இருந்தது. அந்த ஒரு காரணத்தினால்தான் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்

அதை உடைத்து எறியும் முயற்சியில் தங்களது ஆட்சி அதிகாரத்தை(உளவுத்துறையை) பயன்படுத்தி ஜெயலலிதாவை அகற்றிவிட்டார்கள். அதன் பின்தான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் ஆரம்பித்து இருக்கிறது .அதன் பின் நடந்த தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் அமர முடியவில்லை. முன்பு அவர்களுக்குத் தடைக்கல்லாக இருந்தது ஜெயலலிதா ஆனால் இப்போது அதிமுக.. அதனால் அதிமுகவை அழித்துவிட்டால் நேரடியாக திமுகவோடு மோதி களம் காண்பது மிக எளிது வெற்றி பெறுவதும் எளிது..


இப்போது நாம் முன்பு சொன்ன சதுரங்க  ஆட்டத்திற்கு வருவோம்


"2026 தேர்தலில் பாஜகவின் இலக்கு திமுக இல்லை, அதிமுகதான் என்று  பாஜகவின் தலைமை நினைப்பதைப்  பல அரசியல் விமர்சகள் கூறிவருகிறார்கள் எனது கருத்தும் அதுதான் . பாஜக தலைவர்கள் "கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார்கள் அந்த எண்ணத்தையும் விதைத்துக் கொண்டு வருகிறார்கள் இதை அவர்கள் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். இதை விளையாட்டாக எடுத்துக்  கொள்ளக் கூடாது

தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் முதன்மை சக்தியாக பாஜக தன்னை நிலைநிறுத்த விரும்புகிறது. அதற்கு முதல் படியாக, அதிமுகவைப் பலவீனப்படுத்தி, அதன் வாக்கு வங்கியைத் திருட வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.


சமீபத்தில் தி இந்து மற்றும் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளைப் பார்த்தால், பாஜக தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயல்வது தெளிவாகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 11% வாக்கு பெற்றது .இது ஒரு சிறிய முன்னேற்றம் தான். ஆனால், அதிமுகவோ ஒரு தொகுதியைக் கூட வெல்லாமல், ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்து பரிதாப நிலையில் இருக்கிறது.இந்த பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது.

பீகார் மாடல் தமிழ்நாட்டிலும்?பாஜகவின் உத்தியைப் புரிந்து கொள்ள, பீகாரை ஒரு பார்வை பார்க்கலாம். அங்குக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த பாஜக, பின்னர் முதன்மை சக்தியாக மாறியது. தமிழ்நாட்டிலும் இதே நாடகத்தை அரங்கேற்ற அவர்கள் திட்டமிடுகிறார்கள். "கூட்டணி ஆட்சி" என்று சொல்லி அதிமுகவை இப்போது கட்டிப்போட்டு, தேர்தலுக்குப் பிறகு "நாங்கள்தான் பெரிய அண்ணன்" என்று காட்டுவதுதான் பாஜகவின் திட்டம். அடுத்த தேர்தலில் "திமுக vs பாஜக" என்று நிலைமை மாறினால், அதிமுக ஒரு பக்கம் ஒதுங்கி சிறிய கட்சியாகி விடும்.


அதிமுக ஏன் இறங்கிப் போகிறது? அதிமுகவின் இந்த அஞ்சாமைக்கு ஒரே பதில்  மத்திய விசாரணை அமைப்புகள். சிபிஐ, அமலாக்கத்துறை (ED) போன்றவை பாஜகவின் கையில் ஆயுதங்களாக இருக்கின்றன. எடப்பாடியைப் பொறுத்தவரை, "பாஜகவை எதிர்த்தால் வீட்டுக்கு ED வருமோ" என்ற பயம் இருக்கலாம். ஆனால், இந்த பயம் அதிமுகவின் வாக்காளர்களுக்குப் பிடிக்கவில்லை. தினமலர் ஒரு கருத்துக் கணிப்பில், "பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்" என்று பலர் கூறியிருப்பதாக வெளியிட்டிருந்தது. இது எடப்பாடிக்கு ஒரு எச்சரிக்கை மணி.

வரலாறு சொல்லும் பாடம் தமிழ்நாட்டில் கூட்டணி அரசியல் புதிதல்ல. 2001 தேர்தலில் அதிமுகவும், 2006 தேர்தலில் திமுகவும் கூட்டணி மூலம் ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு. ஆனால், பாஜகவுடன் கூட்டணி என்றால் அது வேறு விஷயம். 2014, 2019 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்குப் பெரிய அடி விழுந்தது. இப்போது மீண்டும் அதே பாதையில் போனால், அதிமுகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இது நடந்தால் என்ன ஆகும்?பாஜகவின் திட்டம் வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் அரசியல் களம் மாறும். திமுக ஒரு பக்கம் நிற்க, பாஜக மறுபக்கம் முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறி, அது ஒரு "சிறு கட்சி" ஆக மாறும் ஆபத்து உள்ளது. ஆனால், எடப்பாடி இதை உணர்ந்து, தனித்து நின்று போராடினால், இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவருக்கு அந்த தைரியம் வருமா என்று பார்த்தால் இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகிறது காரணம் அவர் மாபெரும் தலைவர் அல்ல அவரை சுற்றி நம்பிக்கையானவர்கள் யாரும் இல்லை  இருப்பவர்கள் எல்லாம் அவரை போல சந்தர்ப்பவாதிகளே, எடப்பாடி முதல்வருக்கு வந்த பாதை நேர்வழிப் பாதை அல்ல அது சந்தர்ப்ப சூழ்நிலையைப்பயன்படுத்தி சதி செய்து வந்தது.. அவ்வளவுதான்

இன்றைய சூழ்நிலையில் எடப்பாடிக்கு அதிமுகவைக் காப்பாற்றுவதைவிட தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான் அவர் முயற்சியில் இறங்குவார்.. இந்த தேர்தலில் அவர் தன் கட்சி வெற்றி பெறுவதைவிட தன் கட்சி தோற்றுப் போவதுதான் அவருக்குக் கிடைக்கும் வெற்றியாகக் கருதுவார் அப்படி நடந்தால்தான் இன்னும் சிறிது காலம் அவரின் பிழைப்பு சந்தி சிரிக்காமல் ஓடும்.

இப்போது நடப்பதைப் பார்த்தால் இது ஒரு சிரிப்புக்குரிய முரண்நகையாக எனக்குத் தோன்றுகிறது  பெரிய வாக்கு வங்கி உள்ள அதிமுக, சிறிய பாஜகவைப் பார்த்துப் பயப்படுகிறது. ஆனால், இதில் சிந்திக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. 2026 தேர்தல் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். பாஜகவின் சதுரங்க ஆட்டத்தில் அதிமுக ஒரு பொம்மையாக மாறிவிடுமா, அல்லது எடப்பாடி தனது "ராஜ தந்திரத்தை" அப்படி என்று ஒன்று இருந்தால் காட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். 

அதுவரை, இந்த அரசியல் நாடகத்தை நீங்களும்  ரசியுங்கள் , உங்கள் கருத்தையும் அப்படி ஒன்று இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்!

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோரு பதம் என சொல்லுவாங்க அதை நிறுப்பிக்கிறாங்க பாஜக உறுப்பினர்





அன்புடன்
மதுரைத்தமிழன்

 #தமிழக_சதுரங்கம் |  #2026_தேர்தல்  | #பாஜக_உத்திகள் | #அதிமுக_பயம் | #திமுக_வெற்றி  |#அரசியல்_நாடகம் |   #எடப்பாடி_சவால் |   #ஆர்_எஸ்எஸ்_தந்திரம்

#TamilNaduPolitics  | #2026Elections  | #BJPStrategy  | #AIADMKFear | #DMKVictory | #PoliticalDrama | #EdappadiChallenge | #RSSPlan

 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.