Monday, August 5, 2024

 ஆண்களை மதிக்கும் பெண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....

  




இரவு 10 மணிக்கு மேல் இணையத்தில் இருக்கிற ஆண்கள் தப்பான ஆண்கள்ன்னு சில பெண்களோட நினைப்பு.. இன்பாக்ஸ்ல போய் தப்பா மெசேஜ் பண்றது... எவ்வளவு பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியவில்லை...

எனக்கு தெரிந்த ஒரு பேஸ்புக் ஆணுக்கு ,  ஒருத்தி  10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கிறாள். இவன் ரிப்ளை பண்ணல. உடனே தப்பு தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்காள். இவன் பதறிப் போய்  'சகோதரி  கொஞ்சம் மரியாதையா பேசுங்கள்.. நீங்க நினைக்கிற மாதிரி ஆணு நான் இல்லை'ன்னு சொல்லி இருக்கிறான்

அதுக்கு 'அவள் 10 மணிக்கு மேல இணையத்தில் இருக்கிற..  நீ எவ கூட கொஞ்சிட்டு இருக்கியோ.. உனக்கென்னடா மரியாதைன்'னு சொல்லி இருக்கிறாள்...

அவன்   இப்படி எல்லாம் இந்த காலத்தில் பெண்கள் இருக்கிறார்கள் இவர்களால் வம்புதான் என்று  அவளை  பிளாக் பண்ணிட்டு  உடனே பேஸ்புக்கை டி-ஆக்டிவேட் பண்ணிட்டான்
..
ஏய்  பொண்ணுங்களா ஆண்கள்  ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்ற காரணத்தை சொல்கிறேன்...

அவனின்  மனைவி  வெளி நாட்டில் இருக்கலாம்.. அங்க 11 மணியென்றால் இங்க 8.30 மணி. அதனால அவன் மனைவி கூட  பேச வெயிட்  பண்ணிக்கொண்டு இருக்கலாம்.

இணையத்தில் ஏதாவது அவங்க வேலைக்கு ஏற்ற கோர்ஸ் ஜாயின் பண்ணி அமைதியாக இருக்கிற நேரத்தில் படித்துக் கொண்டு இருக்கலாம்
அல்லது இணையத்தில் ஏதாவது கதை படித்துக்கொண்டு இருக்கலாம்....
வீட்டு வேலை முடித்துக்கொண்டு மனைவி பெட்டுக்க்கு வருகிற வரைக்கும்  நல்ல போஸ்ட்களுக்கு லைக் பண்ணிட்டு இருக்கலாம்....
அல்லது வேலைக்குப் போன மனைவி  வர லேட்டானா தூங்காமல் இருக்க பேஸ்புக் பார்த்து கிட்டு இருக்கலாம்....
தூக்கம் வராமல் மனசு கஷ்டத்தில் பேஸ்புக் வரலாம்...
படிக்கிற ஆண்கள் தூக்கம் வராமல் இருக்க அப்பப்போ பேஸ்புக் வந்திட்டு போகலாம்...
இப்படி எவ்வளவோ  காரணங்கள் குடும்ப ஆண்களுக்கு இருக்கிறது... அதனால் உங்கள் கிட்ட பேசவேண்டுமென்று எந்தவொரு கட்டாயமும் இல்லை...

ஆண்களுக்கு  முதல்ல மரியாதை கொடுக்க கத்துக்கோங்க... அவர்களுக்கு உடம்பு மட்டுமில்லை உணர்வுகளும் மனசும் இருக்கிறது புரிஞ்சுக்கோங்க....
ஆண்கள் ஏக பத்தினி விரதன்களாகவே இருக்கிறார்கள் & இருக்க விரும்புகிறார்கள்.. உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே ஆண்கள் வர பயபடுறாங்க....


தப்பி தவறி உங்களை மதிச்சு பேசினால் கவர்ச்சிகரமான படங்களை அவனுக்கு அனுப்புவது ரீல்ஸ்களை அனுப்புவது  இப்படி எல்லாம் செய்வது சரியா...


அவனுக்ககும் குடும்பம் உண்டு..... நல்ல மனைவியாக இருந்தால் பரவாயில்லை கொஞ்சம் சந்தேகம் கொண்டவளாக இருந்தால் அவனின் நிலை என்னாவது என்று கொஞ்சமாவது யோசிங்களேன்


ஆண்களே  இப்படிப் பட்ட பெண்களை  நீங்கள் பிளாக் பண்ணிட்டு உங்கள் வேலையை பாருங்கள் நீங்க.... 100 நல்லவர்கள் இருந்தால் 10 கெட்டவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்....

ஆண்களை மதிக்கும் பெண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.