Saturday, August 3, 2024

நாங்களும்  எங்களுக்கு வாய்த்த நண்பர்களின் குடும்பங்களும்

  




 எனது திருமணம் லவ் மேரேஜ். ஒருவர் இஸ்லாமியர் இன்னொருவர் ஹிந்து பிராமின். மதங்கள் மாறியது இல்லை 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்... அது போல என் மனைவியின் தோழி அவர் ஐயங்கார் அவரது கணவர் ஐயர்,  அது போல  அந்த தோழியின் அக்கா  மணந்தது கிறிஸ்துவரை,  மற்றொரு நண்பரோ  இஸ்லாமியர்  அவர் காதலித்து மணந்தது இன்னொரு இஸ்லாமியப் பெண்ணை, இன்னொருவர் இருவரும் ஹிந்துக்கள்தான் ஆனால் வேறு வேறு சாதி காதல் திருமணம்தான் . இன்னொருவர் பிராமின் அவர் மணந்தது  இந்து மதத்தில் உள்ள மற்ற சாதியைச் சேர்ந்தவர் .இவர்கள் எல்லாம் எங்கள் சென்னை நட்புகள் கடந்த 30 வருடங்களாக அனைவரும் அமெரிக்காவில் நீயூஜெர்சியில்தான் இன்னும் சிறப்பாக வசித்து வருகிறோம்


இன்னொரு நண்பர் குடும்பத்தில் ஒருவர்   மலையாளி அவரது கணவர் பீகாரைச் சேர்ந்தவர். அது போல இன்னொருவர் மலையாளி அவரது மனைவி மaஹாராஸிரா பிராமின் இந்த 2 குடும்பங்களும் 20 வருட குடும்ப நண்பர்கள்

சரி இவர்களை எல்லாம் விடுங்கள்  இன்னொரு நண்பர் குடும்பம் அவர்கள் மிக இளைய வயதினர் ஒரு தென்காசியில் அக்ரஹார பகுதில் வசிக்கும் பக்கா பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் மணந்தது கிறிஸ்துவரை இப்போது இருவரும் கிறிஸ்துவ மதத்தில் இருக்கிறார்கள். இன்னொருவர் குடும்ப நண்பர் அவரும்  மிக இளம் வயதைச் சார்ந்தவர் பிராமின் குடும்பத்தைச் சார்ந்தவர் அவர் மணந்தது கிறிஸ்துவரை அவர் காதலித்த பின் கிறிஸ்துவ மதம் மாறவில்லை .கிறிஸ்துவராக மதம் மாறிய பின் ஒரு கிறிஸ்துவரைக் காதலித்து மணம் புரிந்து கொண்டார்கள் இவர்களின் குடும்பங்களும் மிகச் சந்தோஷமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்



அரேஞ்ச்டு மேரேஜ் மட்டும் சிறப்பானது அல்ல காதல் திருமணங்களும் சிறப்பானது

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.