Saturday, August 24, 2024

சாரு ஏன் பணம் கேட்கிறார் என்று மனுஷய் புத்திரன் எழுப்பிய கேள்விக்கு என் பதில்?

   





//ஒரு எழுத்தாளர் வாழ்நாள் எல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்கு தேவையான பணத்தை அவனால் எழுத்தின் மூலம் ஈட்ட முடியவில்லை. அப்போது அவன் தன் வாசகர்களிடம் உதவி வேண்டுகிறான். விரும்பியவர்கள் அளிக்கலாம். விரும்பாதவர்கள் கடந்து செல்லலாம். அவ்வளவுதான். பிறகு ஏன் இவ்வளவு வன்மம்? ///


இப்படி மனுஷய புத்திரன் தன் பதிவில் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்.


ஒரு எழுத்தாளர் வாழ்நாள் எல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்குத் தேவையான பணத்தை அவனால் எழுத்தின் மூலம் ஈட்ட முடியவில்லையென்றால் அதற்குத் தேவையான பணத்தை வேற முறையில் உழைத்து பெற முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அடுத்தவர்களிடம்  அவன் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்குத் தேவையான பணத்தை கேட்டால் அதற்குப் பெயர் பிச்சைதான் அதை இணைய வழி மூலம் கேட்டாலும் சரி தெருவில் நின்று கேட்டாலும் சரி அதற்குப் பெயர் பிச்சைதான்

ஏன் எழுத்தாளர்கள் என்றால் அவனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கொம்பா முளைத்திருக்கிறது. அவன் உழைத்துச் சம்பாதிக்கக் கூடாது என்று ஏதாவது சட்டம் சொல்லுகிறதா? இல்லை அவன் உழைத்தால் அவன் சிந்தனை வரண்டுவிடுமா என்ன? வாரத்திற்கு ஐந்து நாட்கள் எழுதவும் மீதி 2 நாட்கள் உழைக்கக் கூடாதா என்ன?

சாருனிவேதாவிற்கு என்ன குறைச்சல் பசியால் பட்டினியால் வாடிக் கொண்டு இருக்கிறாரா என்ன? நல்ல வீட்டில் குடி இருக்கிறார் மூன்று வேளையும் நல்ல உணவு கிடைக்கிறது வீட்டில் நாயை வளர்க்கிறார் அதற்கும் சாப்பாடு போடத்தான் முடிகிறது. குழந்தைகள்  படித்து நல்ல வேலையில்தான் இருக்கிறார்கள் இதைவிட வேற என்ன வேண்டும். அவருக்கு ஊர் சுற்ற வேண்டும் வெளிநாடு போக வேண்டும் நல்ல க்ளப்பில் குடித்து ஆட்டம் போட வேண்டும் இப்படி இருக்கத்தான் அவருக்குப் பணம் தேவைப்படுகிறது இப்படி அவர் வாழ விரும்பினால் அவர் உழைக்க வேண்டுமே தவிரப் பிச்சை கேட்கக் கூடாது.

சமுகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறை இருக்கும் அதற்காக உழைக்க வேண்டுமே தவிர சுயமரியாதை இழந்து அடுத்தவரிடம் யாசகம் கேட்டுக் கொண்டு இருக்க கூடாது


My life did not give me what I wanted,  and it gave me what I worked for," இதை நாம் படித்து இருப்போம் கேள்விப்பட்டு இருப்போம்..  

எதையாவது அடைய விரும்பினால் மட்டும் போதாது அதற்கு  நமது முயற்சியும் உழைப்பு மட்டும்தான் பதில் அளிக்கும்

வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது அதற்காக உழைக்க வேண்டும். வாழ்க்கை  நாம் விரும்புவதை அடிப்படையாகக் கொண்டு  வெகுமதிகளை வழங்காது;  மாறாக, நாம் செய்யும் முயற்சி மற்றும் உழைப்புக்கு அது பதிலளிக்கிறது.


மனுஷ புத்திரன் மேலும் சொல்லுகிறார் பட்டிமன்ற பேச்சாளர்கள் எல்லாம் ஏதாவது உளறி மாசம் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் நல்ல பேசக் கூடிய சாருவை யாரும் பேசக் கூப்பிடவில்லை என்று வருத்தப்படுகிறார். அது உண்மைதான் ஆனால் மக்களுக்கு ஏது தேவையோ அதுதான் விற்பனையாகும். பிரியாணிக்குப் பைத்தியமாக அடித்துக் கொள்ளும் இடத்தில் நான் தயிர் சாதம் விற்பனை செய்கிறேன் அது வாங்க ஆள் இல்லை என்று வருத்தப்படுவது போலத்தான் பட்டிமன்ற பேச்சாளர்கள் Vs சாருவின் நிலை இருக்கிறது...  அதற்காக மக்கள் வருத்தப்பட்டு அவருக்கு அள்ளி கொடுக்கப்போவதில்லை.

எல்லோரும் அவரவர் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்கு அவரவர்தான் உழைக்க வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

 

https://www.facebook.com/manushya.puthiran

சாரு ஏன் பணம் கேட்கிறார்?
........
பேஸ்புக் முழுக்க வன்முறையும் இழிவுபடுத்தி இன்பம் காணும் மனங்களும் நிறைந்து இருக்கின்றன. சாரு நிவேதிதா பண உதவி கேட்கிறார் என்பது ஏன் இத்தனை எள்ளலுக்கும் இழிவுபடுத்தலுக்கும் உள்ளாக வேண்டும்?
இதற்குப் பின்னால் இருப்பது சாரு என்ற ஒரு தனி நபரின் மீதான வெறுப்பு அல்ல. மாறாக எழுத்தின்மீது, எழுத்தாளின்மீது மிகவும் கீழ்மையான மனங்கள் கொள்ளும் வெறுப்பும்கூட
ஒரு எழுத்தாளர் வாழ்நாள் எல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் வாழ விரும்புகிற குறிப்பிட்ட தரத்திலான வாழ்க்கை முறைக்கு தேவையான பணத்தை அவனால் எழுத்தின் மூலம் ஈட்ட முடியவில்லை. அப்போது அவன் தன் வாசகர்களிடம் உதவி வேண்டுகிறான். விரும்பியவர்கள் அளிக்கலாம். விரும்பாதவர்கள் கடந்து செல்லலாம். அவ்வளவுதான். பிறகு ஏன் இவ்வளவு வன்மம்?
தமிழ் உரைநடையில் வளர்ச்சிக்கு, நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சாருவின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது வெறுப்பாளர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. கல்லெடுத்து எரிவதில் ஒரு குதூகலம் அடைகிறார்கள்.
நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். எதற்கெல்லாமோ இங்கே நிதி திரட்டப்படுகிறதும் கட்சிகள் தொண்டர்களுடன் நிதி திரட்டுகின்றன. மத ரீதியான, சாதி ரீதியான விழாக்களுக்கு நிதி திரட்டப்படுகின்றன. Crowd funding என்ற பெயரில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லாத பற்பல காரியங்களுக்கு நிதி திரட்டப்படுகின்றன. சில நிதிக் கோரிக்கைகள் உண்மையானவை. பல சந்தேகத்திற்கிடமானவைம் அனாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறோம் என்று சொல்பவர்கள் எந்த வெளிப்படைத்தன்மையுடன் செயல் படுகிறார்கள்?
ஆனால் எல்லாவற்றிற்கும் மக்கள் பணம் கொடுக்க தான் செய்கிறார்கள்
உங்கள் குற்ற உணர்வையும் இரக்கத்தையும் ஒருவர் தூண்டினால் நீங்கள் ஏதோ ஒன்றை அளிக்க முயற்சிக்கிறீர்கள்ம் ஆனால் எழுத்தாளன் உதவி கேட்டால் அத்தனை அவமதிப்புகள், கேலிகள். ஒரு பாமரத்தனமான, இழிவான சூழலில் தான் இதெல்லாம் நடக்க முடியும்.
ஒரு பட்டிமன்ற பேச்சாளர் இரண்டு மூன்று கூட்டங்களுக்கு போனால் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து விடுகிறார். அவர் சமூகத்திற்கு தன் பேச்சின் மூலமாக அளிக்கும் புதிய சிந்தனை என்ன? வெற்று அரட்டை என்பதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. சாரு மேடைகளில் சிறப்பாக பேசக்கூடியவர். தமிழ்நாடு முழுக்க எத்தனையோ விழாக்கள்ழ் பேச்சு மன்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஏன் சார் போன்ற ஒருவர் அவற்றிற்கெல்லாம் அழைக்கப்படுவதில்லை? மாதத்தில் நான்கு கூட்டங்கள் அவர் பேசினாலே அவர் இப்போது உதவியாக கேட்கும் பணம் எளிதில் கிடைத்து விடும். ஒரு எழுத்தாளன் அமர வேண்டிய அரங்குகள் இங்கு இருக்கின்றன. ஆனால் அங்கு வேறு யாரோ ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பார்கள்.
புத்தக கண்காட்சிகளில் நான் ஆற்றிய உரைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டிருக்கின்றன, கேட்கப்பட்டிருக்கின்றன நான் பேசிய எந்த அரங்கிலும் என் பேச்சு தோல்வியுற்றதில்லை. ஆனால் ஒரு வருடத்தில் நான் நான்கைந்து கண்காட்சிகளுக்கு அழைக்கப்பட்டாலே மிகவும் அதிகம். சாரு போன்றவர்கள் ஒருபோதும் அழைக்கப்படமாட்டார்கள். ஆனால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தொழில் முறை பேச்சாளர்கள் மாதத்தில் எளிதில் நான்கு ஐந்து லட்சம் ரூபாய் கூட சம்பாதித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் ஒரு எழுத்தாளன் காசு கேட்டால் அவனை இழிவுபடுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். நான் மேற்குறிப்பிட்ட பணம் திரட்டல்கள் ஏன்னவாகிறது எப்போதாவது உரத்து பேசியிருக்கிறீர்களா?
ஒரு எழுத்தாளன் பட்டினி கிடந்த சாக வேண்டும் என்பது ஒரு பாமர சமூகத்தில் நோய்மையான எண்ணம். அதைப் பார்த்து அவர்கள் கிளுகிளுப்படைகிறார்கள். பாரதியின் வறுமையை பார்த்து அடையும் கிளுகிளுப்பு அதுதான்.
சாரு ஏழ்மையை ஏற்க மறுக்கிறார். ஒரு எழுத்தாளர் எழ்மையை ஏற்கவும் கூடாது. எழுதுகிறவனுக்கு எந்த நியாயமும் செய்யாத ஒரு சமூகத்தில் இத்தகைய இழிவு படுத்துவார்கள் நிறைந்திருக்கவே செய்கிறார்கள்.
ஏதோ மிகவும் கசப்பாக இருக்கிறது




0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.