வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஒரு சிறந்த ஆலோசனை
வாழ்க்கையில் தவறுகள் செய்யாதவர்களே இல்லை என்று சொல்ல முடியாது . நாம் சில சமயம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தவறுகள் செய்து விடுகிறோம். அப்படி நாம் தவறுகள் செய்யும் போது அது தவறு என்று தெரிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களிடம் சிலரோ மன்னிப்பு ஒன்றும் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சிறிது காலம் கழித்து நீங்கள் மறந்துவிடுவீர்கள் என்றும் அவர்கள் நினைத்துக் கடந்து போய்விடுகிறார்கள் அது தவறு..
வேறு சிலரோ சாரி என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லிப் போய் விடுகிறார்கள். அவர்கள் சாரி என்று சொல்ல முடிந்தால், அது ஒரு நல்ல தொடக்கம்தான் . ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர
வாய் வார்த்தைகளாக இருக்கக் கூடாது.
சிலர் மன்னிப்பு கேட்பதோடு அது என் தவறுதான் என்று ஒத்துக் கொள்வார்கள்..
ஆனால் இதை எல்லாவற்றையும் விட நாம் மன்னிப்பு கேட்கும் போது
மறக்காமல் சொல்ல வேண்டியது என்ன தெரியுமா?
செய்த தவறை நேர் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று
பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாக கேட்க வேண்டும்.. அப்போதுதான் அந்த மன்னிப்பு முழுமையான அர்த்தமுள்ள மன்னிப்பாக இருக்கும்
https://youtu.be/z_89M2cCK7A
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.