Saturday, February 25, 2023

 இளம் வயது  பெண்கள்  கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? 

@avargalunmaigal



இந்தியாவில் பெண்களின் அனுபவங்கள் மற்றும் யதார்த்தங்கள் பலதரவைப்பட்டவை மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம், மேலும் பாலினத்தின் அடிப்படையில் பொதுமைப்படுத்துவது அல்லது ஒரே மாதிரியாக மாற்றுவது பொருத்தமானது அல்ல. இருப்பினும், இந்தியாவில் பெண்களை விகிதாச்சாரத்தில் பாதிக்கும் சில சிக்கல்கள் உள்ளன, மேலும் இந்த சிக்கல்களைப் பற்றி அறிந்திருப்பது பெண்கள் சிறப்பாகச் செல்லவும் சவால்களைச் சமாளிக்கவும் உதவும். அனைத்து இந்தியப் பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே



பாதுகாப்பு: இந்தியாவில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் வன்முறை உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.  இந்தப் பிரச்சனைகளுக்கு ஆட்படாத பெண்களே இல்லை என்று கூட சொல்லாம்.பெண்கள் தங்கள் சுற்றுப்புறம் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது, முடிந்த வரையில் இரவில் தனியாகப் பயணம் செய்வதை அதுவும் கூட்டம் அதிகமாக இல்லாத இடங்களுக்குச் செல்வதைத்  தவிர்ப்பது நல்லது,  உங்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நடக்கும் போது, துன்புறுத்தல் அல்லது வன்முறைச் சம்பவங்கள் நடந்தால் அது வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று கருதிக் கொண்டு இருக்கவும் கூடாது அதே சமயத்தில் இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி தற்கொலைக்கும் முயலக் கூடாது  காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பது அவசியம். காவல்நிலையம் செல்ல தயக்கம் இருப்பின், ஆன்லைனில் உங்களது புகாரைப் பதிவு செய்யுங்கள்.ஆன்லைனில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புகாருக்கும் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் பதிலளித்தே ஆக வேண்டும். அப்படியும்  நடவடிக்கை சரியாக இல்லாத பட்சத்தில், ஆன்லைன் புகார் நகலை நேரடியாக cm cell மற்றும் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் போன்ற நபர்களது டிவிட்டர் கணக்குகளை டேக் செய்து பதிவிடுங்கள். முடிந்தால் சில செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களையும், சில பிரபலமான யூடியூப் சேனல் மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளது டிவிட்டர் கணக்குகளை டேக் செய்து பதிவிடுங்கள். உங்களுக்குப் பதில் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கையும் பாயும்.


உடல்நலம்: உடல் அழகைப் பேணுவதில் எடுக்கும் முயற்சிகளை உடல் நலத்தைக் கவனிப்பதில் பெண்கள் எடுப்பதில்லை. இந்தியாவில் உள்ள பெண்கள் பிரத்தியேகமான சுகாதார சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் அதிக தாய் இறப்பு விகிதம், இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை அடங்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் தேவைப்படும்போது மருத்துவ உதவியை நாடுவது முக்கியம் வயது கடந்து பின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில் பயனில்லை. முக்கியமாக ஆண்களுக்கு தாங்கள் சமம் என்று கருதி அவர்களைப் போலக் குடிப்பது சிகரெட் பிடிப்பது போன்ற பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பது அவசியம். இயற்கையாகவே பெண்களின் உடல் ஆண்களின் உடல்வாகிலிருந்து மாறுபட்டு இருக்கிறது அதனால் இந்த மாதிரி பழக்கவழக்கங்களைக் கொள்வோமேயானால் பாதிக்கப்படுவது என்பது நாம்தான்.  சரிவிகித உணவு உண்ணுங்கள். குறிப்பாக புரோட்டீன், தலைமுடி வளர்ச்சிக்கும் சரும பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சரியான மாதவிடாய் சுழற்சிக்கும் அவசியம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. அதனுடன் புரோட்டீன், வைட்டமின் C, கால்சியம் எல்லாம் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்குக் கூகுளில் தேடிப் படியுங்கள்   சுயநலமாக இருங்கள். சரியாகத்தான் சொல்கிறேன். உங்கள் உடலும் உள்ளமும் நன்றாக இருந்தால் தான் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. காலையில் எழுந்ததும் காபி குடிக்கத் தோன்றுகிறதா??? Treat yourself first.


கல்வி: சமீபத்திய ஆண்டுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியாவில் பெண்கள் இன்னும் கல்வியில் தடைகளை எதிர்கொள்கின்றனர், இதில் பாகுபாடு, வறுமை மற்றும் பள்ளிகளுக்கு அணுகல் இல்லாமை ஆகியவை அடங்கும். பெண்களை மேம்படுத்துவதற்கும் பாலின தடைகளை உடைப்பதற்கும் கல்வி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், மேலும் அனைத்து பெண்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இங்கு நான் கல்வி என்று சொல்வது  பள்ளி கல்லூரிகளில் சென்று படிப்பதைமட்டும் சொல்லவில்லை.. வாழ்க்கையில்  நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம் அதை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் உதாரணமாக ஒரு சொத்தை எப்படி வாங்க வேண்டும் விற்க வேண்டும் அதற்கு எங்குச் சென்று பத்திரம் பதிய வேண்டும் அதற்காக என்ன முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக ஆண்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாது இது போன்ற பல வற்றை கற்றுக் கொள்வதுதான் கல்வி

நிதி சுதந்திரம்: இந்தியாவில் பெண்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம், வரையறுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் நிதி கல்வியறிவின்மை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள் நிதி சுதந்திரத்திற்காகப் பாடுபடுவது மற்றும் அவர்களின் நிதி கல்வியறிவு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான ஆதாரங்களைத் தேடுவது முக்கியம் இன்று பல பெண்கள் படித்து நல்ல வேலையிலிருந்தாலும் தான் சம்பாதிப்பதை அப்படியே கணவரிடமோ  மாமனார் மாமியாரிடம் கொடுத்துவிட்டு செலவிற்கு அவர்களை எதிர்பார்த்து நிற்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் உங்களுடைய பணத் தேவையை யார் கையாளுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்களே சுயமாகச் சம்பாதித்தாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் தனியாக எதையும் எடுத்துக்கொண்டு ஓடவும் முடியாது அனைத்தையும் ஒரே ஓடையில் கொட்டி கரைக்கவும் கூடாது. முதலில் உங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நிதி தேவையினை கணக்கிடுங்கள். அதற்கேற்றவாறு திட்டம் தீட்டுங்கள் அப்படிச் செய்தால்தான் வயதான காலத்தில் யாரிடமும் கையேந்தாமல் குனிக் குறுகி நிற்காமல் இருக்க முடியும்


மனநலம்: இந்தியாவில் மனநலப் பிரச்சினைகள் பெரும்பாலும் களங்கப்படுத்தப்படுகின்றன, மேலும் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் காரணமாக மனநலம் தொடர்பான கூடுதல் சவால்களைப் பெண்கள் சந்திக்க நேரிடும். பெண்கள் தங்கள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் தேவைப்படும்போது ஆதரவைப்  உதவியைப் பெறுவது முக்கியம். அதுவும் இந்த சமுக இணைய தளப்பயன்பாடு அதிகமான பின் அவர்கள் பல மன உலைச்சல்களுக்கு ஆளாகப் பல வித பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அது போல அரசியலில் அல்லது பொதுச் சேவைகளில் ஈடுபடும் போது அவர்கள் பலவிதமாகப் பாதிக்கப்பட்டு கடைசியில் மனச் சோர்வு அடைகின்றனர்.. அதை எப்படிக் கையாள்வது என்பது தெரிந்து  முன்னேற வேண்டும்  மேலும் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுங்கள். பெற்றோர், கணவர், பிள்ளைகள் உங்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தாமல் பின்னர் எல்லோரும் முன்னிலையிலும் மதிக்கவில்லை/மட்டும் தட்டி பேசிவிட்டார்கள் என்றெல்லாம் புலம்பி பயனில்லை.

பாலின சமத்துவம்: பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறை இந்தியாவில் பரவலாக உள்ளது, மேலும் பெண்கள் பெரும்பாலும் சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகளுக்குத் தடைகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக வாதிடுவதும், பாலின சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதும் முக்கியம்.ஆனால் பல சமயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறி செயல்படுகிறார்கள்


இப்படி  இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய பல பிரச்சினைகளில் இவை சில மட்டுமே என்பதையும், ஒவ்வொரு பெண்ணின் அனுபவங்களும் சவால்களும் தனித்துவமானவை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம். ஆயினும்கூட, இந்த சிக்கல்களைப் பற்றி அறிந்திருப்பது மற்றும் ஆதாரங்களையும் ஆதரவையும் தேடுவது பெண்களுக்குத் தடைகளைத் தாண்டி தங்கள் இலக்குகளை அடைய உதவும் சமுதாயம், பெண்களை வேண்டும் போது இளவரசியாகவும் வேண்டாத போது வேலைக்காரியாகவும் பார்த்துப் பழகி விட்டது.பெண்ணை சுற்றி வரைந்திருக்கும் கோட்டை ஒரே நாளில் தாண்டி விடவோ, அழித்துக் கொண்டு வெளியேறி விடவோ இயலாது. அப்படிச் செய்தால் அதற்குப் பின்னால் வருத்தங்கள் எஞ்சி நிற்கும்.

ஒவ்வொரு நாளும் தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வரவேண்டும். குறிக்கோளை அடைய ஒரு ஆண் உழைப்பதைக் காட்டிலும் இரு மடங்கு உழைத்தால் தான் அங்கீகாரமே கிடைக்கும்.

அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து உழைக்க வேண்டும். அதன் பின்னரே வெற்றி:


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இது போன்ற தலைப்பைத் தேர்வு செய்து  எழுத நேரம் அதிகமாக செலவாகிறது.. இது பயனுள்ள பதிவாக இருந்தாலும் இது போன்ற பதிவுகளுக்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இருந்த போதிலும் நாமும் எதாவது நல்ல விஷயங்களை உணையத்தைல் சொல்லி வைப்போமே என்பதற்காகத்தான் இந்த மாதிரி பதிவுகள் நிச்சயம் முகம் தெரியாத சிந்திக்கத் தெரிந்த ஒரு சிலருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. டாட்

2 comments:

  1. ஆழ்ந்து்்நன்றாக யோசித்து எழுதி உள்ளீர்கள்... அருமை...

    ReplyDelete
  2. மிக அருமையாக ஒவ்வொன்றையும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. பார்வையாளர் மிகவும் குறைவாக வந்தாலும் பரவாயில்லை நல்லதை நிறைய பகிருங்கள். ஒருவரை சென்று அடைந்தாலே உங்களுக்கு வெற்றிதான்.

    தன் உடல்நலம், மனநலத்தை பாதுகாத்து கொள்வது முக்கியம் நன்றாக சொன்னீர்கள். , பின் தன் குடும்ப நலத்திற்கு பாடுபட வேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.