நாம் பிறந்த இடம் , நமது தோலின் நிறம் , நம் பெற்றோர், நமது பிறப்பு பாலினம் , நமது தாய் மொழி, பெற்றோர்கள் நமக்கு வைத்த பெயர்
நமது இனம், நமது இரத்த தொடர்புடைய சொந்தங்கள் இப்படி பலவற்றைச் சொல்லாம்
ஆனால் அதே நேரத்தில் நாம் எப்போது வேண்டுமானாலும் கிழ்ககணடவற்றை எல்லாம் தேர்வு செய்யலாம்: நேர்மையானவராக, தாராள குணமுடையவராக , கருணை உள்ளம் கொண்டவராக, .பாசக்காராக, நன்றியுள்ளவராக, மரியாதைக்குரியவராக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக, தாழ்மையானவராக , சுய அறிவு மிக்கவராக, விசுவாசிகளாக, மகிழ்ச்சி நிறைந்தவர்களாக
இப்படி நாம் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் அதன்படி வாழலாம் . அதே சமயத்தில் நம்மால் தேர்வு செய்ய முடியாதவைகளை நினைத்து வருந்திக் கொண்டிருக்க வேண்டாம்.. ஆம் நாம் யாருக்கு பிறந்தோம் எந்த சாதியில் மதத்தில் இனத்தில் எந்த கலர் தோலில் பிறிந்தோம் என்பது எல்லாம் முக்கியமல்ல அது எல்லாம் நம்மால் தேர்வு செய்ய முடியாதவைகள். நம்மால் தேர்ந்தெடுக்க கூடியவைகள்தாம் நம்மின் பெருமைகளை உலகறிச் செய்யும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல பதிவு
ReplyDeleteதாயை தேர்ந்தெடுக்கும்,
ReplyDeleteதந்தையை தேர்ந்தெடுக்கும்,
உரிமை உன்னிடத்தில் இல்லை - இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும்,
நிறத்தை தேர்ந்தெடுக்கும்,
உரிமை உன்னிடத்தில் இல்லை - இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும்,
இறப்பை தேர்ந்தெடுக்கும்,
உரிமை உன்னிடத்தில் இல்லை - இல்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே -
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
உண்டு - அதை வென்று எடு...