Monday, February 6, 2023

 தாடிஜியின் ஆணவமும் அணுகுமுறையும்
 

 
@avargal unmaigal



 
குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதிலும், நல்ல தகவல்களை , பண்புகளை ,  கலாச்சார மரபுகளைச் சொல்லிக்கொடுத்து, அதன்படி அவர்களை நடக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்றுகூடச் செல்லாம். . "தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை", "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" போன்ற தமிழ் பழமொழிகள் குழந்தை வளர்ப்பைப் பற்றி மிக எளிமையாக விளக்குகின்றன. நாம் எவ்வாறு குழந்தைகளை வளர்க்கிறோமோ, அதைப்போல் தான் நாளைய சமூகத்தில் அவர்கள் பரிணமிப்பார்கள். இதனை உணர்ந்து, குழந்தைகளைப்  பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்,

பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே ஆனால்  தாடிஜியின் அன்னை  இதைப் பின்பற்றாமல் வளர்த்து விட்டார் என்பது தாடிஜியின் செயல்களையும் கடந்த கால வாழ்க்கையையும் பார்க்கும் போது  சாதாரண மக்கள் கூட நன்கு அறிந்து கொள்வார்கள். ஆனால் சங்கிகளுக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாது & புரியாது. அதிலும் வேதம் படித்த சங்கிகளுக்கு சுத்தமாகப் புரியாது

ஒரு வேளை பண்புகளைப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கவில்லையென்றாலும் கூட சேர்ந்த நண்பர்கள் மூலமும் கற்றுக் கொண்டிருக்கலாம்... ஆனால் தாடிஜி அதையும் செய்யவில்லை


அதனால்தான் என்னவோ கல்யாணம் செய்து கொண்ட பின் மனைவியைத்  தவிக்க விட்டு ஓடினார்.....  மத துவேஷத்தை விதைத்தார் , மதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தார்... தனக்கு அரசியலை கற்றுக் கொடுத்த குருவை பின்னுக்குத் தள்ளியதோடு அவமதித்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக்  கொடுக்க தவறினார் . பாரம்பரிய மரபைப் பின்பற்றத் தவறினார்.. இவ்வளவும் செய்தும் அவரை  சிறந்த தலைவர் என்று முட்டுக் கொடுப்பவர்களை என்ன சொல்லாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்




இந்திய  ஜனாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதையைப் பாருங்கள்.. மரபு என்பதை  எவ்வளவு எளிதாகத் தூக்கி ஏறிந்துவிட்டு செல்லுகிறார். இதை யாரும் சுட்டிக் காட்டி பேசவில்லை.. காரணம்  அவர்கள் சங்கிகள் என்பதால்.. ஆனால்  உலக  செஸ் விளையாட்டு தொடக்க விழாவில் பிரதமர் வருவதற்கு முன்பு விழா தொடங்கியதற்கு என்ன ஆட்டம் போட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் அப்போது தெரியும் இவர்களின் ஈனச் செயல்கள்..


 



இதோடு நிற்கவில்லை தாடிஜியின் செயல்கள்  அது ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. மற்றொரு உதாரணம் இதில் தாடிஜியின் ஜியின் ஆணவமும் அணுகுமுறையும் வெளிப்படுவதைப் பாருங்கள்! 'இந்தியாவின் துணை ஜனாதிபதி' இப்படித்தான் மதிக்கப்படுகிறாரா?


 



 தலைவராக மட்டுமல்ல சாதாரண நல்ல குடிமகனாக  இருக்கும் தகுதி தாடிஜிக்கு கிடையவே கிடையாது




அன்புடன்
மதுரைத்தமிழன்

06 Feb 2023

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.