Monday, February 20, 2023

 

@avargal unmaigal

பிரபல நடிகர்கள் வெட்கிதலை குனியும் அளவிற்கு வாழ்ந்து  மறைந்தவர் நடிகர் மயில்சாமி

இன்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தது திரைத்துறையினரையும் தாண்டி பொதுமக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் நகைச்சுவை திறனால் ஒருபக்கம் ரசிகர்களை ஈர்த்தாலும் அவரின் குணத்தால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார் மயில்சாமிஉதவி என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு ஓடோடி சென்று உதவி வந்தவர் தான் மயில்சாமி.

நடிகர் மயில்சாமியைப் பற்றிய இரங்கல் செய்திகளைச் சமுக இணையதளங்களில் படிக்கும் போது  வியப்பாக இருக்கின்றது. அவர் ஒரு படத்திற்குக் கோடிக் கணக்கில் வாங்கும் நடிகர் அல்ல அவரது தொழிலோ நிரந்தர வருமானத்தைத் தரும் தொழிலும் அல்ல... வேறு எந்த வியாபாரமும் அவர் செய்யவில்லை. தனக்குக் கிடைத்த வருமானத்திலிருந்து அடுத்தவருக்குப் பகிர்ந்து அளிக்க  அவருக்கு எல்லையில்லா மனம் இருந்திருக்கிறது.

பல தலைமுறைகளுக்குச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் அது போதாதென்று பொது மக்கள் பணத்தைத்  தொடர்ந்து சுருட்டிக் கொண்டிருக்கையில் சேமித்து வைப்பது மட்டும்  வாழ்வல்ல என்று மற்றவர்களுக்கு உதவி வாழ்ந்து காட்டி இருக்கிறார். . திரையுலகிலும் வெளியுலகிலும் வறியவர் அனைவருக்கும் உதவிகளைச் செய்தவர் என்றும்  நல்ல கடவுள் பக்தி கொண்டவர்.  அதிலும் சிவபக்தர் என்றும் அறிகிறேன்.அவரின் நல்ல உள்ளம் காரணமாக ஒரு நல்ல நாளில் தானும் அதிகம் கஷ்டப்படாமல் பிறருக்குக் கஷ்டங்களைக் கொடுக்காமல்  சிவராத்திரி முடிந்த விடியலில் சிவனடி சேர்ந்திருக்கிறார். சிவபதம் வாய்க்கட்டும்  

இவர் இறந்த பிறகு இவரின் நல்ல செயல்களை எல்லாம் பாராட்டி எழுதி வரும் ஊடககத்தார் இவர் வாழ்ந்த போது அவரின் நல்ல செயல்களைப் பாராட்டி  எந்தவொரு விழாவிலும்   ஒரு விருது கூட கொடுத்தது இல்லை.. அவரும் அவர்கள் தரும் விருதுகளுக்காக நல்லது செய்வது போல வேஷம் கட்டியது இல்லை


அவர் வாங்கியது எல்லாம் Tamil Nadu State Film Award for Best Comedian என்பதற்காக மட்டும்தான்

இந்த நடிகர் இறந்த செய்தி கேட்டு பலர் நேரில் வந்து உடலிற்கு அஞ்சலி செய்தார்கள்  ஆனால் பிரபல நடிகர்கள் யாரும் நேரில் வந்து அஞ்சலி செய்யவில்லை.. காரணம் இவ்வளவு தாங்கள் கோடிக் கணக்கில் சம்பாதித்தும் இவரைப் போல இதுவரை செய்ததில்லை என்று வெட்கிதலை குனிய வேண்டும் என்ற காரணமாகத்தான் இருக்கும்
 

அதுமட்டுமல்ல மயில்சாமி இறந்த பின் அவரை பாராட்டும் இந்த தமிழ் சமுகம்.. அவர்  எந்த கட்சியும் சாராமல் சுயோட்சையாக தேர்தலில் நின்ற போது அவரை தோல்வியுறச் செயதது. .. காரணம் அவர் சுயநலவாதியாக இல்லாமல் இருந்ததுதான். இப்படித்தான் காமராஜரை தோல்வியடையச் செய்த இந்த சமுகம் அவரை போல ஒரு தலைவர் இல்லை என்று இறந்த பின் சொல்லிக கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறது


அவருக்கு வயது 57தான் அது இறக்கும் வயதல்ல ஆனால் இப்போது இந்தியாவில் இவரைவிட இளையவர்கள் பலர் இளம் வயதிலேயே மாரடைப்பால் இறக்கும் செய்தி தினம் தோறும் சமுக ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம்

இப்போது இந்தியாவை  நான் வெளியிலிருந்து பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது எல்லாம்  இந்திய மக்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல மன ஆரோக்கியத்திலும் அக்கறை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதாகவே தோன்றுகிறது..

நல்ல உணவு பழக்கவழக்கங்கள் இல்லை மனங்கள் மதங்களால் மதவெறில் கெட்டுப் போய் இருக்கின்றது அடுத்த தலைமுறை மிகவும் ஆரோக்கியமற்ற  திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இதற்குச்  சிறிய சதவிகித மக்கள் விலக்காக இருக்கலாம் அவ்வளவுதான்

2 comments:

  1. மிகச் சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. சங்கிகள் மனம் மாற வேண்டும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.