Wednesday, May 5, 2021

 இந்தியா இந்த அளவிற்கு மோசமாகும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியவில்லை

இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது என்றுதான் நினைத்து வந்தேன் ஆனால் இந்த அளவு மோசமாகும் என்பதை என் கனவிலும் நினைத்துக் கூட பார்க்கவில்லை ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது ஆனால் அது நிஜம் என்று நினைக்கும் போதுதான் மனம் மிக அதிர்ச்சிக்கு உள்ளாகி கண்ணில் கண்ணீர் வழிகிறது..


இன்று என் வேலை இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களிலிருந்து அங்கு வந்த வாடிக்கையாளர்கள் வரை இந்தியாவில் உனக்கு நெருங்கிய சொந்தங்கள் இருக்கிறதா எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்று பார்ப்பவர் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் அனைவரு நலமாகத்தா இருக்கிறார்கள் என்று பதில் சொல்லி வந்தேன்..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்பதை அறிந்துதான் இருக்கின்றேன். ஆனால்  பார்ப்பவர்கள் எல்லோரும் கேள்வி கேட்கும் போதுதான் மனம் அச்சத்திற்கு உள்ளாகியது. இந்திய ஊடக செய்திகளைத் தினம் பார்க்கும் போது கொரோனா அதிகரிக்கிறது பலர் குணமாகிக் கொண்டு இருக்கிறார்கள் வழக்கம் போது டாஸ்மக்கில் கறிக்கடைகளில் ஷாப்பிங்க் எரியாவில் மக்கள் அரைகுறையாக மாஸ்க் அணிந்து வருவதைத்தான் காண்பிக்கிறார்கள் அதைத்தான்  நான் உள்பட எல்லோரும் பார்த்து வருகிறோம்.


ஆனால் இங்குள்ளவர்கள் இந்தியா பற்றி கேட்கும் போதுதான் இங்குள்ள செய்திகளைப் பார்க்கும் போது அவர்கள் வெளியிட்ட செய்திகள் கண்களைக் குளமாக்கி விட்டன.

இன்று  சி. என். என்னில் வந்த செய்தியைப் பார்த்த போது உண்மையிலே அழுதேவிட்டேன்.. ஒரு வேளை இந்த செய்திகள் எல்லாம் மோடி அரசால் கட்டுப்படுத்தப்பட்டு வெளியிட முடியாமல் ஊடகங்கள் இருக்கிறதோ என்றுதான் கேள்வி மனதில் எழுகிறது..

உத்திர பிரதேசத்தில் டிவிட்டரில் ஆக்சிஜன் கேட்டுப் பதிவிட்ட ஒருவரின் மேல் வழக்கு பாய்ந்து இருக்கிறது அவர் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது மாதிரி வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அப்படி இல்லை என்று  யோகி அரசு சொல்லி இருக்கிறது.


ஆனால் சி. என். என்னில் வந்த இந்த வீடியோ செய்து உண்மையை அம்பலமாக்கி இருக்கிறது

அந்த வீடியோவிற்கான லிங்க இங்கே:  https://youtu.be/zrefKeWuNpQ மனம் திடம் உள்ளவர்கள் மட்டும் பாருங்கள் மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது








கடந்த வருடத்தில் மேலைநாடுகளில் கொரோனா அதி தீவிரமாகப் பரவியது அது என்ன ஏது என்று புரிவதற்கு முன்னாலே மக்கள் மடிந்தனர்.. முன்னேற்பாடுகள் இருந்திருந்தால் அது குறைந்து இருக்கும்... இயற்கை சீரழிவது என்பது யாரும் எதிர்பார்க்காமல் இருக்கும் போது வருவதுதானே... ஆனால் இந்தியாவின் நிலைமையோ இதற்கு எதிராக இருந்தது பாதிப்பு என்பது அதிகமாக இல்லை . இந்தியாவில் கொரோனா பரவியதற்கு  சிங்க்ள் சோர்ஸ் என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர்களைக் குறை சொல்லியும் மேலை நாடுகளைக் கேலி செய்தும்  கொண்டிருந்தனர் ( கேலிக்குரியவர்களே அமெரிக்காவைக் கேலி செய்து கொண்டிருக்கிற அவலம்  )இதற்கு மேலாக மகா மனிதர் டிவியில் தோன்றி வாயால் வடை சுட்டுக் கொண்டு இருந்தார்



அப்போது நான் சொன்னது இறைவன் இந்தியாவிற்கு பெரும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார் அதைப் பயன்படுத்தி இந்தியா போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆனால் இந்தியாவோ தங்களின் பழக்கவழக்கம் பண்பாடு கலாச்சாரம்தாம் தங்களைக் காப்பாற்றிக்  கொண்டு இருக்கிறது என்று மமதையிலிருந்து வந்து கைதட்டி விளக்கு ஏற்றி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிக் கொண்டது. அதுமட்டுமல்ல இந்தியாவை ஆளும் மகா புருஷர் இந்தியாவைக் காப்பாற்றி கொரோனாவை கட்டுபடுத்தியதுமல்லாமல் உலக காப்பாற்ற வந்த இரட்சகராகத் தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டார்..


ஆனால் இப்போது அந்த மகா புருஷரை உலகமே காறித்துப்புக் கொண்டு இருக்கிறது என்பதுமட்டும் உண்மை




அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. மதவாதிகளிடம் மனிதம் இருக்காது...

    ReplyDelete
    Replies
    1. இந்த மதவாதிகள் மதத்தின் பெயரில் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் மற்றும் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து மத நடைமுறைகளும் தனிப்பட்ட நலனுடன் பிணைக்கப்பட்டுள்ளன.அதனால்தான் மதவாதிகளிடம் மனிதம் இருப்பதில்லை தனபாலன்

      Delete
  2. Replies


    1. அந்த இறை நம்பிக்கைத்தான் எங்களையும் காப்பாற்றி கொண்டு இருக்கிறது. மற்றவர்களையும் காப்பாற்றி கொண்டு இருக்கிறது கில்லர்ஜி

      Delete
  3. நான் வீடியோ பார்க்கவில்லை மதுரை. அந்த அளவிற்கு மனோதிடம் இல்லை. செய்திகள் மொபைலில்தான் பார்ப்பதையும் தவிர்த்துவருகிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லது. நானும் அப்படித்தான் கொரோனா எங்களை பாதித்த சமயத்தில் எந்த நெகடிவ் செய்திகளையும் ஏன் கொரோனாப் பற்றி வந்த செய்திகளையும் பார்ப்பதில்லை கொரோனா பற்றிய செய்து என்றால் இங்குள்ள ஹெல்த் துறை தரும் செய்திகளை மற்றும் பார்த்து அப்போதையை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு மீண்டு வந்தோம்..

      Delete
  4. மருத்துவமனைகள் வாசலில் காத்திருக்கும் மக்கள் கூட்டம்...  ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடும் மருத்துவமனைகள்..  ஆக்சிஜன் மட்டுமல்லாமல் முக்கிய உயிர்காக்கும் மருந்துகளும் இல்லாமல் பரிதவிக்கும் அவலம்..   எப்படி முன்னாலேயே கணிக்காமல் போனார்கள்?  எப்படி தேர்தலையும், கும்பமேளாவையும் அனுமதித்தார்கள்?    இதுமாதிரி கட்டுப்பாடாட்ச சூழல்கள் கையிருப்பைக் காலிசெய்து பெரும் தீங்கை விளைவினுக்கும் என்று எப்படி யோசிக்காமல் போனார்கள்?  தடுப்பூசியே இன்னும் போதுமான அளவில் தயாராகவில்லை.  இந்தச் சூழல் எப்போது தாண்டும் என்று மனம் பதைபதைக்கிறது.  மக்கள் எனக்கு கொரோனாதான்..  அதனால் நான் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அவசியமில்லை என்று சொல்லி வெளியே நடமாடுகிறார்கள்.  அவர்களை என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. அரசு சரி மக்களும் சரி உலக நாடுகளில் நடக்கும் செய்திகளை அறிந்து தங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை... அந்த காலம் என்றால் தகவல் பறிமாற்றம் அதிக இல்லை எனலாம் ஆனால் இன்றோ உலகின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு சின்ன செய்தி கூட உலகத்தையே சில மணிநேரங்களில் சுற்றி வந்துவிடுகிறா போது இவ்வளவு அலட்சியமாக இதை கையாண்டு இருக்க வேண்டாம் அலட்சியத்தின் விளைவே இன்றைய அழிவு

      Delete
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய காலகட்டம் மிகவும் கொடுமையாய் இருக்கிறது. மனதுக்கு ரொம்பவும் வேதனை தருகிறது.இதை எப்படி கடந்து அனைவரும் நல்லபடியாக வாழப் போகிறோம் என்ற பயம் வருகிறது. வீட்டிலேயே இருக்க வேண்டும். இறைவனை வேண்டியபடி, இறைவன் அனைவருக்கும் நல்லதையே செய்வார் என்ற நம்பிக்கையை வளர்த்தபடி வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.... வீடியோ பார்க்கும் அளவு என் மனதில் தெம்பு இல்லை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவனை நம்புவோம் நிச்சயம் நல்லதே நடக்கும் . நம்புவதோடு நின்றுவிடாமல் அவர் நமக்கு கொடுத்த அறிவையும் பயன்படுத்தி அனைவரும் செயல்பட வேண்டும். கடவுள் மீதுள்ள நம்பிக்கையால் கடலினின் உள்ளே குதித்துவிட்டு அவன் காப்பாற்றுவான் என்று சும்மாவே இருந்தால் நாம் முழ்கித்தான் சாவோம் அதனால் அறிவைப் பயன்படுத்தி கடலில் குதிக்காமல் இருக்கவேண்டும். கொரோனாவும் கடல்போலத்தான்

      Delete
  6. என் மகள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.ஆனால் என் மகள் படிக்கும் பள்ளி அமைந்திருக்கும் தில்லி செல்லும் வழி சாலையில் இன்றும் விவசாய போராளிகள் நடு சாலையில் டெண்ட்டுகளுடன் அமர்ந்தே இருக்கிறார்கள்.அவர்களை இன்னும் அப்புறப்படுத்தவில்லை,அவர்களுக்கு கரோனா பாதிக்கவில்லையா தெரியவில்லை.ஆனால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் மக்கள் அவதியுறும் நிலை காண்கிறோம்.என்ன நடக்கிறது யார் பொறுப்பு ஒன்றும் புரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அதை சரி செய்வது குடும்ப தலைவனின் பொறுப்பு அது போல நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அதை ஆளும் தலைவர்தான் பொறுப்பேற்று தீர்க்க வேண்டும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.