Sunday, August 20, 2017

@avargalunmaigal
 மோடிக்கு ஆபத்து எதிர்கட்சிகளினாலா அல்லது அமித்ஷாவினாலா?



தமிழகம் மற்றும் சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் மோடி ஒரு இரும்பு மனிதர் போல ஒரு கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் இவரை ஆண் ஜெயலலிதா என்று கூறலாம். என்ன ஜெயலலிதா மாநில அளவில் வலம் வந்தார் இவர் இந்தியா அளவில் வலம் வருகிறார்.ஜெயலலிதா அதிக அளவில் விளம்பரம் செய்து தம்மை முன்னிருத்துவது போல இவரும் தன்னை முன்னிலை படித்து கொண்டிருக்கிறார்


அது போல ஜெயலலிதா எப்படி எதிர்கட்சிகள் மேல் நமது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்குகள் தொடுத்து அவர்களை மிரட்டி கொண்டிருந்தாரோ அது போலத்தான் மோடியும் தனக்கு கிடைத்த அதிகாரத்தை மிகவும் தவறாக பயன்படுத்தி தேர்தல் ஆணையம் நீதிமன்றம்  வருமானவரித்துறை அலுவலகம் போன்றவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனக்கு எதிரிகளே இருக்க கூடாது என்று நினைத்து அழித்து வருகிறார். இப்படித்தான் ஜெயலலிதாவும் செய்து வந்தார். ஆனால் கடைசியில் அவரின் நிலமை எப்படி முடிந்தது என்பதை உலகமே அறியும்... அரசியல்வாதிகளுக்கு இது ஒரு அனுபவபாடம்.. ஆனால் இதில் இருந்து எத்தனை அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொண்டார்கள் என்பதுதான் அறியாத புதிர்.


தனக்கு அதிகாரம் வந்தவிட்டதும் நாம் இருக்கும் வரை எல்லாம் தன் கையில்தான் என்று நினைத்து ஆணவத்துடன் செயல்படுகிறார்கள் ஆனால் அது எல்லாம் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே இதை உலக வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.


அரசியல்வாதிகள் தலைவர்கள் ஏன் சாரசரி மனிதர்கள் ஒன்றை மட்டும் நன்கு நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது உங்களின் பலம் எதிரிகளுக்கு நன்கு தெரியும் ஆனால் உங்கள் பலவீனம் உங்களை நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்


ஜெயலலிதாவின் அதிகாரப்பலம் பற்றி எல்லோரும் அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டுவந்தார்கள் ஆனால் அவர் பலவீனம் நன்கு அறிந்தவர் சசிகலாதான் . அவர் ஜெயலலிதாவின் பலவீனத்தை வைத்து விளையாடி ஜெயலலிதா மறைவிற்கே காரண கர்த்தாவாக இருந்தார். ஆனால் சசிகலா தன்னின் உண்மையான பலத்தை அறியத தவறிவிட்டதால் இப்போது பெங்களுர் ஜெயிலில் இருக்கிறார்

ஜெயலலிதாவிற்கு எல்லாமேதான் தான் என்றிருந்த போது ஜெயலலிதாவின் பலத்திற்கு தாம்தான் காரணம் அதனால் ஜெயலலிதா இடத்தை நாம் ஏன் கைப்பற்ற கூடாது என்ற ஆசையினால் நாடகம் நடத்தி இப்போது பரிதாபமான நிலையில் உள்ளார்.


ஜெயலலிதாவின் நிலமை ,மோடிக்கும் ஏற்பட வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எப்படி ஜெயலலிதாவிற்கு சகோதரியாக தோழியாக சசிகலா இருந்தாரோ அது போல மோடிக்கு சகோதரனாக தோழனாக மோடியின் வெற்றிக்கு பின்னால் அமித்ஷா இருக்கிறார். எவ்வளவு நாள்தான் அடுத்தவரின் வெற்றிக்கு பாடுபட்டு கொண்டிருப்பார்.தனக்கும் அந்த பதவியில் உட்கார ஆசை வாராத முற்றும் துறந்த துறவிய அவர்.நிச்சயம் அவருக்கும் ஆசை ஒரு நாள் வரும் அல்லது அவருக்கு வர மற்றவர்கள் அவருக்கு துதிபாடுவார்கள்.அப்ப மோடிக்கும் ஜெயலலிதா நிலை கண்டிப்பாக வரும்

அதனால்தான் சொல்லுகிறேன் மோடி ஆடுறவரைக்கும் ஆடட்டும். அமித்ஷாவிற்கும் ஒரு நாள் ஆசை கண்டிப்பாக வரும் போது மோடியின் ஆட்டத்திற்கும் ஒரு நாள் முடிவு கண்டிப்பாக வரும் அதுவரை பொறுத்து இருங்கள்.


ஒன்றும்மட்டும் உறுதியாக சொல்லுகிறேன் மோடிக்கு எதிரிகளால் ஆபத்து வராது நண்பர்களால் அல்லது தனது நம்பிக்கைகுரிய ஆட்களால்தான் கண்டிப்பாக வரும்
@avargalunmaigal  #modi


அதவானிக்கு மோடி ஒரு நல்ல சிஷ்யன் போல மோடிக்கு ஒரு  நல்ல சிஷ்யனாக அமித்ஷா இருக்கமாட்டரா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நல்லதொரு அலசல். என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்!

    ReplyDelete
  2. என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று எண்டு ஒரு சொல் உண்டு. அது நினைவுக்கு வருகிறது. நல்ல அலசல்.

    ReplyDelete
  3. சொல்லித்தான் தெரியனுமோ

    ReplyDelete
  4. உங்கள் கணிப்பு தர்க்க ரீதியாக சரியாக இருக்கிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டு ம் எனக்கு பஜக வுக்கு ஆபத்து ஆர் எஸ் எஸ்தான் என்று தோன்று கிறது

    ReplyDelete
  5. you do not worry about modi ....you are always anti modi

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்கு நாலு பேர் ஆம் ... ஆனால் , நான் அப்படி அல்ல .

    ரெண்டு பேருக்கும் ( மோடி & ஜெயா ) குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் இருக்கு - இங்கே ஜெயலலிதா & சசிகலா ரெண்டு பேருமே பணம் , சொத்து , நகைன்னு சேகரித்து கொண்டே இருந்தார்கள் . நிச்சயமாக அந்த ரெண்டு பேரும் அப்படி கிடையாது . மோடி , அவர் அண்ணா , அம்மா , மற்றும் உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்த்து பின் எழுதுங்கள் . மோடி & ஷா ரெண்டு பேருமே கொள்கை பிடிப்பு உடையவர்கள் . சசியிடம் பண பற்று மட்டுமே . அங்கே இரண்டு பேருமே எப்போதும் பொது வாழ்க்கையில் வெளிப்படை - திரை மறைவு வேலை கிடையாது . சசி எப்போதுமே திரை மறைவு தான் . ஜெயா அவ்வளவு நல்ல ஆரோக்கியமாக இருந்தது கிடையாது , மோடி மிகவும் ஆரோக்கியமாக உள்ளவர் , யோகா செய்பவர் , மோடி யாரையும் பழி வாங்கியது கிடையாது , ( லல்லு மேல கேஸ் என்றால் அவர் தவறு செய்தவர் , சொத்து சேர்த்தவர் , அதனால் ரெய்டு ) . அங்கே டீம் ஒர்க் , ஜெயா ஒரு one man ( woman ) show .

    ReplyDelete
  7. நல்ல ஆராய்ந்திருக்கீங்க மதுரைதமிழன்! நல்ல ஒப்பீடும் கூட. உங்கள் அலசல் சரியாகிறதா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?!! மன்னர் காலத்திலிருந்தே! ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு ஏனோ இந்தப் பாடம் மண்டையில் உரைக்க மாட்டேன் என்கிறது...

    துளசி, கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.