Friday, February 12, 2016


avargal unmaigal
சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்

சுப.வீரபாண்டியன்  தனது வலைத்தளத்தில் Friday, 12 February 2016 ல் சின்னச் சின்னதாய்ச் சில கேள்விகள்? என்ற பதிவை இட்டு இருந்தார். அந்த கேள்விகளுக்கான பதில்தான் இந்த பதிவு.



1.சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வி :

அ.தி.மு.க.வா, தி.மு.க.வா என்று கேட்டால், என் வாக்கு தி.மு.க.விற்குத்தான். தி.மு.க.வா, மக்கள் நலக் கூட்டணியா என்று கேட்டால் என் வாக்கு, மக்கள் நலக் கூட்டணிக்கே என்கிறார் இதழியலாளர் ஞானி. பதிப்பாளர் பத்ரியும் ஏறத்தாழ இதே நிலையை எடுத்து, மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்கிறார். அப்படியானால், மக்கள் நலக் கூட்டணி தொடங்குவதற்கு முன், ஞானியும், பத்ரியும் தி.மு.க.விற்கு ஆதரவாகவா இருந்தார்கள்? சென்ற தேர்தல் வரை, தி.மு.க.விற்குத்தான் வாக்களித்தார்களா?

மதுரைத்தமிழனின் பதில்
உங்களின் முதல் கேள்வியில் முந்தைய தேர்தலில் ஞானியும் பத்ரியும் திமுகவிற்கா வாக்களித்தார்கள் என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். இப்படி கேள்வி கேட்கும் முன் நீங்கள் கொஞ்சம் கூட சிந்திப்பது இல்லை என்றுதான் தெரிகிறது. ஒவ்வொரு கால கட்டத்திற்கு தகுந்தாற்போலதான் இவர்கள் முடிவு எடுக்கிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல எழுத்துதுறைய சார்ந்தவர்கள். அதனால் முந்தைய தேர்தலின் போது திமுகவா அல்லது அதிமுகவா என்று அவர்கள் சிந்திக்கும் போது அப்பொழுது அவர்கள் கலைஞரின் குடும்பத்தினர் தமிழகத்தில் பண்ணிய அட்டகாசத்தை பார்த்து அதிமுகவிற்கு வோட்டு போட்டு இருக்கலாம். அது போல இந்த தேர்தலின் போது அதிமுகவா திமுகவா என்று பார்க்கும் போது அதிமுக செயல்பாடுகளை பார்க்கும் போது அதுதன் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதால் அதிமுகவை விட திமுக என்று அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில்  முன்றாவது அணி ஒன்று தமிழகத்தில் உருவாகி இருக்கிறது அதனால் அந்த மூன்றாவது அணியோடு திமுகவை ஒப்பிட்டு பார்க்கும் போது முன்றாவது அணி திமுகவை விட பெட்டராக இருப்பதால் அதை அவர்கள் ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் இப்படி செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். எந்த அறிவுள்ள மனிதனும் இப்படிதான் செய்வார்கள்.

2. சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வி :
மற்ற கூட்டணிகளுக்கெல்லாம் கொள்கை இல்லை. மக்கள் நலக் கூட்டணிதான் குறைந்த பட்ச செயல் திட்டத்தோடு கூட்டணி அமைத்துள்ளது என்று ஒரு கருத்து பரப்பப்படுகின்றது. உண்மைதான். தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் இங்கு தொகுதி உடன்பாடுதான் கொண்டுள்ளன. கொள்கை வழிப்பட்ட கூட்டணி என்று கூறமுடியாது. போகட்டும். கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே ஈழச் சிக்கல், கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியனவற்றில் உள்ள பொதுவான கொள்கை என்ன? முல்லைப் பெரியாறு சிக்கலில், வைகோவும், ஜி. ராமகிருஷ்ணனும் இனி இணைந்து நின்று போராடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

மதுரைத்தமிழனின் பதில்.

சுப.வீரப்பன் அவர்களே  தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் இங்கு தொகுதி உடன்பாடுதான் கொண்டுள்ளன. கொள்கை வழிப்பட்ட கூட்டணி என்று கூறமுடியாது என்ற உண்மையை ஒத்துக்கொண்டதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள். அடுத்தாக  மக்கள் நலக் கூட்டணி கொள்கை அடிப்படையிலா கூட்டணி அமைத்திருக்கிறீர்கள் என்று  பல பிரச்சனையை சொல்லி கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் ஆமாம் அவர்கள் கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் அதவாது மக்களுக்கு நலம் விழைவிக்கும் வகையில் பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு செயல்படுவது என்ற கொள்கையின் அடிப்படையில்தான் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்களுக்கு நலம் செய்யாத அதிமுக திமுகவிற்கு எதிராக போராட முடிவு செய்து இருக்கிறார்கள் காரணம் இந்த இரண்டு கட்சிகளும் மக்கள் விரோத கட்சிகளாகவே பொதுமக்களுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் தோன்றுகிறது.


3. சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வி :எழுப்பிய கேள்வி :
தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கருணாநிதி பதவி வழங்குவார் என்று வைகோ குற்றம் சாற்றுகின்றார். மூன்று முறை, 18 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வைகோவைத் தி.மு.கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியதே, வைகோ என்ன கலைஞர் குடும்ப உறுப்பினரா?

மதுரைத்தமிழனின் பதில்.

வைகோ சொன்னது கட்சியில் பதவி பற்றி .ஸ்டாலினை நாடளுமன்றத்திற்கு அனுப்பி இருந்தால் வைகோ மட்டுமல்ல வேறு யாரும் இப்படி பேசமாட்டார்கள். ஆனால் கட்சியின் தலைவர் பதவிக்கு தன் குடும்ப உறுப்பினர்களை முன்னிறுத்துவதால்தான் வைகோ மட்டுமல்ல மற்றவர்களும் குற்றம் சுமத்துகிறார்கள். ஸ்டாலினை விட திமுகவிற்காக உயிரைக் கொடுத்தும் செயல்பட்டவர்கள் செயல்படுபவர்கள் பலர் இருக்கும் போது கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்தினால் ஸ்டாலினுக்கு பதவி தருவது தவறுதானே இதில் என்ன அப்படி குற்றம் கண்டுவிட்டீர்கள். வைகோ என்ன எனக்கு பதவி தரவில்லையா என்று கேட்டார். வைகோ பதவிக்கு ஆசைப்பட்டு இருந்தால்  இந்நேரம் தெருதெருவாக இறங்கி போராடாமல் சிலருக்கு ஜால்ரா போட்டு அவர் மிகப் பெரிய பதவியை எந்தவொரு கட்சியிலும் வகித்திருப்பார்

சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வி : எழுப்பிய கேள்வி 4 :
தலைமை அனுமதித்தால்,  மேற்கு வங்கத்தில், காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருப்பதாக, மேற்கு வாங்க இடது சாரிகளின் கட்சித் தலைவர் பிமன் போஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி  பிற்போக்கு, மேற்கு வங்கத்தில் மட்டும் முற்போக்கா தோழர்களே?


மதுரைத்தமிழனின் பதில்.

இங்கு நடக்க போவது தமிழக தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் அல்ல.மேற்கு வாங்க இடது சாரிகட்சி அந்த மாநிலத்தின் நலனைக் கண்டு இப்படி முடிவு எடுத்திருக்கலாம் இப்படிதானே கலைஞரும் மதவாதகட்சிகளை எதிர்க்கிரறேன் என்று சொல்லிவிட்டு தங்களுக்கு நலம் என்றால் மதவாதகட்சிகளோடு சேர்வோம் என்று  இதற்கு முன்னால் முடிவு எடுத்து சேர்ந்து இருக்கிறார்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: சுப.வீரபாண்டியன் தனது வலைத்தளத்தில் இந்த கேள்விகளை கேட்டு பதிவு எழுதியிருந்தார். அதற்கு கருத்து சொல்லாம் என்று எழுதிய போது அது கொஞ்சம் பெரியதாக வந்துவிட்ட காரணத்தால் எனது தளத்தில் பதிவாக இட்டுள்ளேன்


8 comments:

  1. பொருத்தமான பதில்கள்தான். எல்லோருக்கும் தெரிந்த பதில்கள்தான். ஆனால் அவர் என்ன செய்வார்? தன் சக கட்சிக்காரர்களுக்கு பதில் தர சொல்லித்தர வேண்டுமே...!

    ReplyDelete
  2. மநகூ.வின் செயல் பாடுகள் தேர்தல் வரும் முன்னே தெரிந்து விடும்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக தலையில் அடித்துக் கொள்ள வேண்டிய, நேர விரய பதிவு.!!!
    புள்ள குட்டிகள படிக்க வைக்கலாம்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    ReplyDelete
  4. அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் என் மதிப்புக்குரிய தோழர்தான். அதில் மாற்றமில்லை. ஆனால், அவர் எழுப்பிய சில கேள்விகளுக்கு நான் பதில் சொன்னால் என்ன சொல்வேனோ அதை அப்படியே எழுதிவிடட மதுரைத் தமிழனை எங்கள் கூட்டணியில் ஒரு தொகுதியில் நிறுத்த எம்என்கே( மநகூ ) தலைவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். வாங்க தலைவா!

    ReplyDelete
    Replies
    1. இதனைத் தொடர்ந்து, எனது தளத்தில் “அய்யா சுப.வீரபாண்டியனுக்கு ஐந்து கேள்விகள்” எனும் மற்றொரு பதிவை இன்று இட்டிருக்கிறேன். பார்க்க, பதிலிட அழைக்கிறேன் -
      http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_14.html நன்றி, வணக்கம்

      Delete
  5. தெளிவான பதில்கள்
    சுப வீர்ர் என்ன செய்கிறார் என்று பாப்போம் ..

    ReplyDelete
  6. சரியான பதில்கள்..பொதுவாக அனைவருக்கும் தோன்றும் பதில்களைத் தந்துள்ளீர்கள் சகோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.