நாம் ஏன் ரஜினியை ஸாரி விகடனை நக்கல் பண்ணுகிறோம்?
|
|
http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/27284-why-we-like-rajini-63-reasons.html#cmt241 http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/27284-why-we-like-rajini-63-reasons.html#cmt241 |
நாம் ஏன் ரஜினியை விரும்புகிறோம் என்று விகடன் நிருபர்கள் 63 காரணங்களை கூறி இருக்கிறார்கள். அதை படித்ததும் நாம் மனதில் எழும் நக்கல் பதில்கள்
1. ரஜினி பிறந்த நாள் மட்டும்தான் அபூர்வ நாளா என்ன? அப்ப இந்த தேதியில் பிறந்த நாட்களை எப்படி அழைப்பது 01.01.01, 02.02.02 , 03.03.03, 04.04.04 05.05.05
06.06.06, 07.07.07 08.08.08, 09.09.09 10.10.10, 11.11.11, 12.12.12, 13.13.13,
14.14.14 15.15.15 இப்படி நிறைய நாளை சொல்லிகிட்டு போகலமாம், ஆனால் விகடன் நிருபர்கள் மிக அதி புத்திசாலிகள் இந்த ஆபுர்வ நாட்கள் எல்லாம் அவர்கள் புத்திக்கு புரியாது.
2. தவிர்க்க நினைக்கிறார்கள் ஆனால் தவிர்க்க முடியவில்லை என்று சொல்ல வருகிறார்களோ விகடன் நிருபர்கள்.
3. துஷ்டன் வரான் தூற ஒடு என்று நக்கல் பண்ணுறமாதிரி இருக்கே
7. ஒரு சினிமா ஸ்டாருக்கு நல்ல லுக் நல்ல உயரம், விதவிதமான நடிப்பு திறமை வேண்டும் இது எதுவுமே மக்களை கவர வேண்டும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியாகதான் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ராம் கோபால் சொல்லியதாக கூறியிருக்கிறார்கள். என்ன ரஜினிக்கு விதவிதமான நடிப்பு திறமை இல்லையா? அவர் என்ன அசிங்கமாகவா இருக்கிறார்? சரி இதை ராம் கோபால் கருத்தாக இருக்கலாம் ஆனால் இந்த வரிகளை வெளியிடுவதன் மூலம் மீண்டும் ரஜினியை ஏன் அவர் பிறந்த நாளில் மட்டம் தட்டுகிறார்கள்
10,சர்ச்சையை கிளப்ப வேண்டுமென்றுதான் மனதில் பட்டதை பேசுவார் அதுவும் புதிய படம் வெளிவருவதற்கு முன்பு என்று விகடன் நிருபருக்கு தெரியாதோ?
11. மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் வெளிப்படையாக் சொல்லுவார். இது சாதனையா என்ன? நடிப்பதை தவிர்த்து வேறு என்ன சாதனைகள் செய்தார் என்பதை அவரால் வெளிப்படையாக சொல்ல முடியுமா அல்லது விகடந்தான் சொல்லுமா?
16. ரசிகர்களை கண்ணா என்று அழைப்பவராம் ஆனா தன் வீட்டில் விசேஷம் நடக்கும் போது தலைவர்களை மட்டும் கண்ணா நம்வீட்டுக்கு வாங்க என்று உரிமையோடு அழைப்பாராம் என்பது விகடன் நிருபர்களுக்கு தெரியாதா?
17. ஆரம்பகாலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் காலத்தில் இருந்தவர்கள்தான் இன்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள்.. எங்க இப்போது சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டாரா என்று விகடன் சொல்லி இருக்கலாமே?
கலைஞருடன் அவர் கொண்டது நெருங்கிய நட்பு இல்லையா? என்பதை கொஞ்சம் விசாரித்து எழுதி இருக்கலாமே?
26, இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்தாலும் அதை அவரின் சுய நலத்துக்காகவும் விளம்பரத்துக்குகாகவும் பயன்பத்தியதே இல்லை.... ஓ அப்படி போடு அப்ப தலைவர்களுடன் அவர் மேடையில் தோன்றியது எல்லாம் பொது நலனுக்காகவா? ஹஹஹாஆஆஅ அதையும் கொஞ்சம் விளக்கி எழுதி இருக்கலாமே
23 முதல் பட ஹீரோக்கள் கேரவன் கேட்கும் போது இவர் மரத்தடியில் சேர் போட்டு ஷாட்டுக்காக காத்து இருப்பார். முதல் பட ஹிரோக்கள் கேரவன் கேடப்தில் தப்பு என்ன? அவர்களுக்கு உண்மையில் கிடைப்பது கொஞ்சம் சாப்பாடும் கைசெலவுக்கு சிறிது பணமும்தான் தருவார்கள். ஆனால் இவர் வாங்குவது லட்சம் அல்ல பல கோடிகள் ஆனால் பொதுமக்கள் முன்பு எளிமையாக இருப்பது போல தோன்றுவது அதிசயமில்லையே. பணக்காரர்கள் எளிமையாக இருப்பது போல தோன்றவது பல இடங்களில் நடப்பதுதான் அதில் அதிசயம் இல்லை.
36. தான் செய்யும் உதவிகளை ரகசியமாக வைத்திருப்பார். ஆமாம் அவர் ஏழைகளுக்கு உதவி இருந்தால் வெளிப்படையாக சொல்லி இருப்பார் ஆனால் அவர் செய்யும் உதவிகள் அரசியல் தலைவர்களுக்கு தானே? இதையும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்
37. மகளின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை... நல்லவேளை நின்றிருந்தால் மகளால் மூக்குடைபட்டு இருப்பார் என்பதையும் சொல்லி இருக்கலாமே
41. படத்தின் பிஸினஸை 100 கோடிக்கு உயர்த்தியவர்... கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க உதவியர் என்று சொல்லாம்தானே
47. கிரிக்கெட் விளையாடினால் ஒரு பந்துக்கு பத்து ரன் எடுப்பவர்... நல்ல வேளைடா அரசியலுக்கு வந்திருந்தா ஒரே தடவை எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போயிருப்பார் என்பதை சொல்லாமல் சொல்லுகிறிர்களோ
51. அவர் தனிமையில் கேட்கும் பாடல்கள் நான் ஒரு முட்டாளுங்க... ஒண்ணுமே புரியலை.... தன்னைப்பற்றிய பாடல்கள் என்று நினைத்துதான் அடிக்கடி கேட்கிறாறோ?
53. பணம்,புகழை அவர் பொருட்படுத்தியத்தில்லை... அப்ப ஒரு படத்திற்கு ஏங்க பல கோடி வாங்குகிறார். ஒரு வேளை அப்படி வாங்கிய பணத்தை அப்படியே சமுக நலனுக்கு செலவிட்டு விட்டாரா என்ன?
60. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆதரவாக அவரது மண்டபத்தை ஹாசாரே ஆதரவாளருக்கு கொடுத்தவர் ஆனால் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு இல்லத்தில் இடம் கொடுத்தவர்
|
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
|
Related Posts
நாம் ஏன் ரஜினியை ஸாரி விகடனை நக்கல் பண்ணுகிறோம்?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?
ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா? ஆயுத பூஜைக்கு ஆயுதங்களை வைத்து பூஜ...Read more
தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து
வாழ்வது சில காலம் அந்த காலத்திலும் துணிச்சலாக செயல்பட்டு தான் வாழும் சமுகத்திற்கு நல்லத...Read more
தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
உலகெங்கும் உள்ள தமி்ழ் நெஞ்சங்களே!!
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
4 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
\\நல்ல வேளைடா அரசியலுக்கு வந்திருந்தா ஒரே தடவை எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போயிருப்பார் என்பதை சொல்லாமல் சொல்லுகிறிர்களோ\\
ReplyDeleteஇது ஏற்கத் தக்கதல்ல. இது போல சில ஒவ்வாத கருத்துக்கள் இருந்தாலும், ஓவரால் கட்டுரை நியாமானதே.............
//13.13.13, 14.14.14 15.15.15// இந்த தேதிகள் எல்லாம் எப்படி வரும்? கொஞ்சம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டுவிட்டீர்கள். மற்றபடி, கட்டுரை மிக மிக சரியாக எழுதப்பட்டிருக்கிறது. தன்னை மிக நன்றாக மார்கெட் பண்ண தெரிந்தவர் ரஜினி. அவ்வளவுதான். மற்றபடி, அவர் ஒரு நடிகர். அவர் தொழிலை நன்றாக செய்கிறார். அதற்கு மேல் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாட எதுவும் இல்லை.
ReplyDeleteஆமாம் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி
Deleteஆஹா....... நானும் கேன மாதிரி படிச்சிட்டு போயிட்டேனப்பா.......... ரொம்ப நன்றி பந்து!! நீங்க தான் கவனமா படிக்கிறீங்க, மத்தவாங்க எல்லாம் வேஸ்டு........
ReplyDelete