Thursday, March 22, 2012



தமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா?


என்னங்க ஒரு வழியா சங்கரன் கோவில் தேர்தல் முடிஞ்சிருச்சு...தேர்தல் ரிசல்டும் வந்திருச்சு.. அதை பார்த்திருப்பிங்க அதை பற்றி நம்ம பதிவாளர்கள் போட்ட பதிவுகளையும் பார்த்து இருப்பிங்க..அதை பற்றி நானும் பதிவு போடலைன்னா இந்த பதிவு உலகம் என்னை மன்னிக்காது என்பதால் தான் இந்த பதிவு.

இந்த பதிவை படித்துவிட்டு யாரு மாங்கமடையன்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்ன ரெடியா?????


பரிட்சையில் பிட்டு அடித்து எழுதி பாஸாகிவிட்டு நான் நல்லா படிக்கும் மாணவன் அதனாலதான் நான் பரிட்சையில் நல்ல மார்க்கு எடுத்து பாஸாகி இருக்கேன் என்று சொன்னால் அவனைப் பார்ப்பவர்கள் இவன் பிட்டு அடிச்சு பாஸானது ஊருக்கே தெரியும் இதுல வேற ஊர் பூரா நான் நல்லா படிபேன்னு சொல்லிகிட்டு திரியுறான் இந்த மாங்கமடையன் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அப்ப ஜெயிச்சு வந்த ஜெயலலிதாவை நாம் என்னான்னு சொல்லாம் நீங்களே சொல்லுங்களேன். ( ஜெயலலிதா அவர்களே நீங்கள் நல்ல ஆட்சி புரிந்து இருப்பாதாக நினைத்தால் அப்புறம் ஏன் அனைத்து மந்திரிகளையும், ஏன் முழு அரசாங்கத்தையும், அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தியது ஏன்? நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன் )


ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு புத்தியுள்ளவன் முதலில் யோசிப்பான் போட்டியில் கலந்து கொள்ள நமக்கு தகுதியுண்டா, அப்புறம் போட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களின் பலம் என்ன என்று தெரிந்து போட்டியிட வேண்டும். உதாரணமாக குத்துசண்டை வீரர் முகம்மது அலி கலந்து கொள்ளும் போட்டியில் நமது வடிவேல் நான் மதுரைகாரைய்யங்க, எனக்கு இதெல்லாம் சூசுப்பி என்று சொல்லி கலந்து கொண்டு முதல் ரவுண்ட்டில், முதல் குத்தில் முகத்தில் காயப்பட்டு தோல்வி அடைந்த பின் எனக்கு அப்பவே தெரியும் ஐயா அவர்தான் ஜெயிப்பாருன்னு மூக்காலா அழுதா வடிவேலுவை மாங்கா என்று அழைக்கலாம்தானானே? ( தோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் என்று இன்று சொல்லவதற்கு பதிலாக, அப்பவே தெரிஞ்சு இருந்தால்வேட்பாளாரை நீங்கள் அறிவிக்காமல் இருந்து இருந்தால், அதிமுக போட்டியில்லாமல் வென்று இருக்குமே அதனால் உங்கள் பணமும் நேரமும் மிச்சம் ஆகி இருக்கும்  அது போல ஆளும் கட்சிகளின் பணமும் மிச்சமாயிருக்கும் தமிழக அமைச்சர்களும் நாய்யாக சங்கரன் கோவிலை சுற்றி சுற்றி வராமல் தங்கள் அலுவலக வேலைகள் மீது சிறிதாவது கவனம் செலுத்தி நாடு முன்னேற ஏதாவது செய்து இருப்பார்களே... அது மட்டுமில்லாமல் மக்களும் அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக கழித்து இருப்பார்களே அப்படி ஏன் நீங்கள் செய்யவில்லை ? .நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன் )

தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களின் சார்பாக சங்கரன் கோயில் மக்களுக்கு கிடைத்த இந்த அற்புத வாய்ப்பை இந்த மக்கள் சரியாக பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை மீண்டும் ஜெயிக்க வைத்ததன் மூலம் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சரியானவை என்று நீங்கள் கருதி கொண்டதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது அவரை தோற்கடித்து இருந்தால் தீயில் கை வைத்த சிறு குழந்தை போல மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் மீண்டு இருக்கும் ஆண்டுகளை மிகவும் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பாக ஆட்சி செய்ய முயற்சி செய்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும் அதற்கான வாய்ப்பை சங்கரன் கோவில் மக்கள் செய்ய தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன் ( அவரை தோற்கடித்து இருந்தால் சங்கரன் கோவிலை பாலைவனமாக ஆக்கி விடுவார் அதனால்தான் அவரை ஜெயிக்க வைச்சு சங்கரன் கோவிலையே ( The problem is, stupid people won't get it anyway ) போயஸ் தோட்டம் என்ற சோலைவனமாக்கி ஒவ்வொரு வேளையும் தங்க தட்டில் சாப்பாட்டில் நல்ல அறுசுவை உணவு வந்திடும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் நீங்களும் ஒரு மாங்காதான் . நீங்கள் மாங்கா இல்லையென்றால்  கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்) "People who already don’t get it, never will "

இந்த பதிவை படித்ததும் சந்தோஷப்படும் தமிழக தலைவர் ஒருவர் இருந்தால் அவர் ஐயா ராமதாஸ் அவர்களாகத்தான் இருப்பார். காரணம் தான் மாங்கா இல்லை என்பதால். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் மாங்காவாய் இருந்து மாம்பழமாக மாறி யாருக்க்கும் உபயோகம் இல்லாமல் வீணா போன பழமாகிவிட்டார்

ஒகே மக்களே வந்தீங்க...படிச்சீங்க....நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதை கொஞ்சம் நேரம் இருந்தால் சொல்லிவிட்டு போங்க...

எனக்கு ஏதோ கிறுக்கணும் என்று தோன்றியதால் இந்த கிறுக்கல் பதிவு. மீண்டும் அடுத்த கிறுக்கலில் சந்திப்போம்..வாழ்க வளமுடன்

அன்புடன்,
மதுரைத்தமிழன்










12 comments:

  1. Unami ithuthaan... Aanaal unmai'ya ivalavu thelivaa peysa koodathu. (Kund)Amma vanthu vulunkiduvaa! Sankarankovil was an opportunity for the people to show their dissent yet our Tamil brothers and sisters are very intelligent, so intelligent that they will make a fool out of every normal human being who expects commonsense...

    ReplyDelete
  2. \\அப்ப ஜெயிச்சு வந்த ஜெயலலிதாவை நாம் என்னான்னு சொல்லாம் நீங்களே சொல்லுங்களேன்.\\
    திருடன், நம்ம பாக்கெட்டை லாவகமா பிளேடு போட்டு உள்ளே இருக்கிறதை அடிச்சிட்டான்னா, அவனை என்னன்னு சொல்வது??!! அவன் சாமர்த்தியமான திருடன், நான் இளிச்சவாயன்னு சொல்லலாம்!!

    ReplyDelete
  3. \\நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.\\ பொதுவா மாங்கா மடையன்னு சொல்லுவாங்க. இத்தனை தில்லுமுல்லுகளையும் செஞ்சும், ஓட்டு வாங்கி ஜெயிக்கணும்னா சாமர்த்தியம் இருக்குதுன்னு அர்த்தம், மாங்கா என்ற பட்டம் இங்கே பொருந்தாது.

    ReplyDelete
  4. \\தோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் என்று இன்று சொல்லவதற்கு பதிலாக, அப்பவே தெரிஞ்சு இருந்தால், வேட்பாளாரை நீங்கள் அறிவிக்காமல் இருந்து இருந்தால்,\\ World Cup match களில் ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சிருந்தாலும் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள் பங்கேற்று ஆடவில்லையா அது மாதிரிதான் இதுவும்.

    ReplyDelete
  5. \\அது போல ஆளும் கட்சிகளின் பணமும் மிச்சமாயிருக்கும்\\ தமிழக வாக்காளர்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு ஒருதடவைதான் வரும்படியே கிடைக்குது அதையும் கெடுக்கப் பாக்குறீங்களே!!

    ReplyDelete
  6. \\தமிழக அமைச்சர்களும் நாய்யாக சங்கரன் கோவிலை சுற்றி சுற்றி வராமல் தங்கள் அலுவலக வேலைகள் மீது சிறிதாவது கவனம் செலுத்தி நாடு முன்னேற ஏதாவது செய்து இருப்பார்களே...\\ நாடு முன்னேற யாரு பாடுபடுவது...??? காமடி பண்றீங்களே பாஸ்.

    ReplyDelete
  7. \\ஜெயலலிதாவை மீண்டும் ஜெயிக்க வைத்ததன் மூலம் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சரியானவை என்று நீங்கள் கருதி கொண்டதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது\\ விஜயகாந்தை தேர்ந்தெடுத்துவிட்டு விருத்தாசலம் மக்கள் கடந்த ஐந்து வருடமாக பட்ட பாடை யோசித்துப் பாருங்கள். அந்தத் தொகுதிக்கு எத்தனை இன்னல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையும் கொடுத்தார்கள், எந்த வளர்ச்சித் திட்டங்களே, சாலை வசதிகளோ வேறு பயனோ அவர்கள் அடியாத் மாதிரி பார்த்துக் கொண்டார்கள், தேவையா இது?

    ReplyDelete
  8. \\அவரை தோற்கடித்து இருந்தால் தீயில் கை வைத்த சிறு குழந்தை போல மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் மீண்டு இருக்கும் ஆண்டுகளை மிகவும் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பாக ஆட்சி செய்ய முயற்சி செய்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும்\\ ஜெயலலிதாவைப் பத்தி ரொம்ப உயர்ந்த அபிப்பிராயம் வச்சிருக்கீங்களே பாஸ். கட்சியை விட்டு போனவங்க விழுந்த ரோமத்துகுச் சமம் என்று சொன்ன ஆள் இவர். இவருடன் கூட்டணி வச்சவங்க ஏன்டா வச்சோம்னு வருந்தாதவங்களே கிடையாது. வாஜ்பேயி அழுதே விட்டாரு. இவரு ஒரு போதும் தவறுகள் மூலம் தன்னைத் திருத்திக் கொள்பவர் இல்லை. இவர் எப்படி மீண்டும் ஜெயிக்க முடிந்தது என்றால் கருணாநிதியின் உலக மகா கேவலமான ஆட்சிதான். [இவர் வந்து, அதை விட கேவலமான ஆட்சியைத் தருவார் என்பது வேறு விஷயம்!!]

    ReplyDelete
  9. கண்டிப்பாய் மக்களாகிய நாம்தான் மாங்காய் மடையர்கள் சகோ. இலவசத்துக்கு என்று ஆசைப்பட ஆரம்பித்தோமோ அன்றே நாம் மடையர்களாக மாற ஆரம்பிச்சுட்டோம்.

    ReplyDelete
  10. ஒருவன் சமையல் வேலை செய்யும்போது
    எரியும் நெருப்பில் விழுந்துவிட்டான்.
    தாங்க மாட்டாமல் துள்ளி
    குதிக்கையில் கொதிக்கும் எண்ணெய்யில்
    விழுந்து விட்டான். ...........
    கொதிக்கும் எண்ணெயிலிருந்து
    தப்ப எண்ணி மீண்டும்....
    இது தான் தமிழக மக்கள் நிலை............

    ReplyDelete
  11. sarithaan neenga!
    sonnathu!

    mangaa pasanga....

    ReplyDelete
  12. I feel you have poured your personal frustrations in the article. We should learn to respect the verdict of the people.
    This by election was conducted much more peacefully and with much less allegations cash for votes that the by elections of DMK regime where Madurai Anjanenjan went on a free cash doling spree.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.