உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 2, 2012

உங்களின் எதிர்காலம் எப்படி? (இது ஜோசியம் அல்ல ஜாதகம் அல்ல நியுமராலஜி அல்ல )உங்களின் எதிர்காலம் எப்படி? (இது ஜோசியம் அல்ல ஜாதகம் அல்ல நியுமராலஜி அல்ல )


உங்கப்பா மிக ஏழைன்னா
அது உன் தலைவிதி
ஆனால் உன் மாமனார் ஏழைன்னா 
அது உன்னுடைய முட்டாள் தனம்தான் காரணம்
(இதைபடித்த பின் தமிழகத்தில் எந்த குடும்பத்தில் பிரச்சனையோ அல்லது
விவாகரத்தோ அதிகரித்தால் இந்த மதுரைத்தமிழன் பொறுப்பல்ல)


ஒவ்வொரு ஆணும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்
காரணம் சந்தோஷமாக இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல மக்கா
(வாழ்க்கையின் உண்மை அனுபவத்தை சொல்லிட்டேன் இதை படித்த பிறகும் பொண்ணுபார்ர்க போவதா இல்லையா என்பது உங்கள் தலைவிதியை பொறுத்தது )உங்களின் எதிர்காலம் நீங்கள் காணும் கனவில்தான் இருக்கிறது.
அப்புறம் என்ன இதையே உற்று பார்த்து கொண்டிருக்கிறிர்கள்
போய் தூங்குறதுக்கு வழியப் பார்ப்பிங்களா
(பதிவின் தலைப்புக்கு காரணம் உங்களுக்கு இப்ப புரிந்து இருக்கும்)


Practice makes perfect… அப்படின்னு ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
(இதை அமெரிக்கர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் போல அதனால்தான் என்னவோ கல்யாணம் குழந்தை பெறுதல் டைவோர்ஸ் என்று ப்ராக்டிஸ் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்)
ஆனால் நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் கேட்டால்
ஒருத்தரும் பெர்பெக்ட் இல்லைன்னு சொல்லுறாங்க..
அப்ப நாம எதுக்கு ப்ராக்டிஸ் பண்ணனும்என்னடா இந்த மதுரைத்தமிழன் இப்படியெல்லாம் எழுதி கொல்லுறானே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்துதான் ஒருத்தர் மதுரைத்தமிழனிடம் இதையே கேள்வியாக கேட்டார்.

அதற்கு அந்த மதுரைத்தமிழன் சொல்கிறான்

நான் பிறக்கும் போதே ரொம்ப அறிவு ஜீவியாகத்தான் இருந்தேன்.
ஆனால் நான் கற்ற கல்விதான் என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிவிட்டதென்று.

இதைபடித்த பின்பும் அவனிடம் கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இருந்தால் கேள்வியை பின்னுட்டத்தில் அனுப்பவும்.


அட சொக்கா அட சொக்கா  My wife is not out of town னாச்சே....

மதுரைத்தமிழா உங்க மனைவியும் அவுட் ஆஃப் டவுணாக இருந்து இருந்தால் நீங்க என்ன பண்ணிருவீங்க?

நான் என்ன பண்ணுவேன் தெரியுமா ?அந்த பெண்ணிடம் போய் எனக்கு சைக்கிள் ஒட்ட கற்று தருகிறாயா என்று கேட்டு இருப்பேன்.காரணம் எனக்கு இன்னும் சைக்கிள் ஒட்டத் தெரியாதுங்க மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி கெட்டபையன் இல்லீங்க...

நான் ஒன்னும் அந்த பொண்ணு அழகில் மயங்கி போட்டோ போடலிங்க. அவங்க வைச்சுருக்கிற சைக்கிள் என் கண்ணை கவர்ந்தது அதனால தான் அந்த படத்தை போட்டு இருக்கீங்க..
 
இப்படியெல்லாம் நான் நல்லவன் என்று நித்தியானந்தா போல சொன்னா யாரு நம்ம போறீங்க.? நீங்க நம்பலைன்னா அது என் தப்பு இல்லீங்க அது உங்க தப்புதானுங்க காரணம் உங்க மனசு தமிழ் டிவி சினிமா பார்த்து கெட்டு போயிருக்குங்க


என்னங்க இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சு இருந்தா பின்னுட்டம் அனுப்புங்க....அப்ப பிடிக்காதவங்க என்ன பண்ணுறதுன்னா கேட்கிறிங்க  அவங்களும் பின்னுட்டம் அனுப்பலாமுங்க


நல்ல வேளை நான் தமிழ்நாட்டில் வசிக்க வில்லை இல்லைன்னா அடிக்க ஆள் இந்நேரம் வந்து இருக்கும். யாரா அது அமெரிக்காவில் இருக்கும் தமிழனை அனுப்பி அடிக்க நினைக்கிறது. அது எல்லாம் இங்க நடக்காதுங்க காரணம் சொல்லட்டுமா?

அவுங்க காலையில் சிக்கிரம் வேலைக்கு போன லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவார்கள் காரணம் அவர்கள் வேலையையும் செய்து அவர்களின் மேனேஜர்களின் வேலையையும் செய்து முடிப்பதினால்தான். சரின்னு களைச்சு போய் வீட்டுக்கு வந்த அவன் மனைவி என்னங்க உங்க வெள்ளைக்காரி மேனேஜரின் வேலையயும் நீங்கள் செய்து வழிந்து விட்டு வருவிங்க அப்ப நான் மட்டும் என்ன இழிச்சவாயா என் வேலையும் நீங்கள் செய்யுங்க என்று சொல்லிவிடுவார்கள் அதையும் செய்த பின் அவர்களுக்கு என்னை அடிக்க உடம்பில் சக்தி எங்க இருந்து வருமுங்க....

ஹலோ என்ன கல்லில் போய் உங்க தலைய முட்டிகிறிங்க......சரிங்க போனா போதும் என்று உங்களை விட்டுடுறேன் அப்ப நான் வரட்டாங்க......


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"

23 comments :

 1. உங்கள் நாள் இன்று ரெம்ப நல்லா இருக்கு...!

  ReplyDelete
 2. ஹா ஹா...வாழ்க்கை வாழ்வதற்க்கே..வேறென்ன!

  ReplyDelete
 3. @ சந்திர சேகரன்
  @விக்கியுலகம்

  உங்கள் இருவரின் வருகைக்கும் பகிர்ந்த கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பர்களே

  ReplyDelete
 4. ஹாஹாஹாஹா

  இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!!!!!!!

  ReplyDelete
 5. என்ன தத்துவங்கள். இன்னிக்கு நானும் ஆபிஸ் லீவு தான். என் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணப்போறேன்.

  மாமனார் பத்தி சொன்னத கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும்.

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா....சிரிக்க வைத்ததற்கு நன்றி!

  ReplyDelete
 7. @ துளசி கோபால்

  ///ஹாஹாஹாஹா இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!!!////

  திருமதி துளசி அவர்களே என் பதிவை படித்த பின் தாங்களுக்கு ஓன்றும் ஆகவில்லையே. உங்களின் அந்த ஹாஹாஹாஹா சிரிப்பு எனது பதிவை படித்த சந்தோஷத்தாலா அல்லது இந்த பதிவை இவன் பல வருடங்களுக்கு முன்பு போட்டிருந்தால் வாழ்க்கை துணையை தேடுவது கஷ்டம் அந்த கஷ்டம் இல்லாமல் ஒருவர் வந்து உங்களிடம் மாட்டிக் கொண்டார் என்ற ஆனந்தாமா

  எதுவாக இருந்தாலும் உங்களின் வருகைக்கும் பகிர்ந்த கருத்துக்கும் மிகவும் நன்றி அம்மா

  ReplyDelete
 8. @ முன்பனிக்காலம்

  //ஹா ஹா ஹா....சிரிக்க வைத்ததற்கு நன்றி!//

  பலரை அழுக விட்டு வேடிக்கை பார்க்கும் உலகம் அந்த உலகத்தில் நான் சில பேரை சிரிக்க வைக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது

  உங்களின் வருகைக்கும் பகிர்ந்த கருத்துக்கும் மிகவும் நன்றி

  ReplyDelete
 9. @ ஹாலிவுட்ரசிகன்
  ///. இன்னிக்கு நானும் ஆபிஸ் லீவு தான். என் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணப்போறேன்.//
  நண்பரே எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலததை மறந்து போகாதீர்கள்

  //மாமனார் பத்தி சொன்னத கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும்.///
  இருக்கும் மாமனாரை கைவிட்டு வீடாதீர்கள் அதற்கு பதிலாக சின்ன மாமனார் யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கவும் நண்பரே

  நீண்ட இடைவெளிக்கு அப்புறம் வந்த உங்களின் வருகைக்கும் பகிர்ந்த கருத்துக்கும் மிகவும் நன்றி

  ReplyDelete
 10. சிரிக்க வைக்கக் கூடிய பதிவு. சிந்திக்க சத்தியமா சொல்றேன் அப்படி ஒரு தப்ப நீங்க பண்ணவே மாட்டீங்க இல்ல...ஹா ஹா ஹா...


  expect
  suspect
  respect

  superappu

  ReplyDelete
 11. அப்ப நான் மட்டும் என்ன இழிச்சவாயா என் வேலையும் நீங்கள் செய்யுங்க என்று சொல்லிவிடுவார்கள் அதையும் செய்த பின் அவர்களுக்கு என்னை அடிக்க உடம்பில் சக்தி எங்க இருந்து வருமுங்க....
  >>உங்க வீட்டு கதை போல இருக்கு

  ReplyDelete
 12. நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் ஆள் தான்.

  #Copy& Paste, bcoz me too no arivujeevi...

  :-)

  ReplyDelete
 13. ada ippadiyumaa!?

  kelvi !
  pathil nalla irunthathu!

  ReplyDelete
 14. ......சரிங்க போனா போதும் என்று உங்களை விட்டுடுறேன் அப்ப நான் வரட்டாங்க.// அப்பப்பா இப்பவாவது தோனுச்சே எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிரிங்க ஆனாலும் எப்படி பதிவு போடவும் சிலர் வேனும்க என்னைய வேன உங்க மாணவியா .....?

  ReplyDelete
 15. ஹா... ஹா... ஹா... அருமையான தத்துவங்கள்! ஆழமான விளக்கங்கள்! தீர்ந்தது சந்தேகம். தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத ‘வாழ்க்கைன்னா என்ன’ங்கற என் சந்தேகத்தை தனியொருவனாய் வந்து தீர்த்து வைத்த மதுரைத் தமிழனே..! இந்தாரும், பிடியும் பொற்கிழியை!

  ReplyDelete
 16. நீங்க நல்லவர் தான் ஒத்துகிறோம் சைகிளில் மயங்கி போட்ட சைகில் படம் அருமை வீட்டம்மா இந்தியாவுக்கு வந்துட்டாங்களா? அவ்வ்வவ்

  ReplyDelete
 17. A.C.PARAMASIVAN TIRUPUR IYA MAHURAITAMILA AMERIKAVULA UNAKKU VELA VETTYEILAYA VELLAKKARI MENAJARU NIENKA VELA SENJU MUDICASAA SUMMA KALAKKARINKA VAALTHUKKAL THODARATTUM UNKA VELA

  ReplyDelete
 18. super thola kalakitinga kadasiya oru doubt ena than solavaringa.......... but konjam sirika vachutinga paaratavum taan akka cycle superah iruku.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog