ஒரே கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லும் உறவோ அல்லது நண்பர்களோ அல்லது அலுவலக மேல் அதிகாரியோ நம் வாழ்வில் இருப்பார்கள் இதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள் சொன்னதையே மீண்டும் சொல்ல ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிட்டானய்யா /ஆரம்பிச்சிட்டாளாடா என்று நேரிடியாகச் சொல்லாமல் பார்வையைப் பரிமாறிக்கொள்வதை நீங்கள் காணலாம், அல்லது போலியாக ஆர்வமாகக் கேட்பதைப் போலத் தங்கள் முகத்தை வைத்து நடித்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படி அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம் என்னவென்று பார்த்தால் ஒன்று அவர்களின் ஞாபக மறதி தன்மையே காரணம் என்று சொல்லாம் அடுத்தபடியாக அவர்களின் வாழ்வில் இதைத் தவிர வேறு எந்த அனுபவ நிகழ்வுகளும் ஏற்படாமல் இருந்திருக்கலாம் அதாவது உரையாடலை உருவாக்க அவர்கள் பெறும் வாழ்க்கை அனுபவங்களின் தளம் மிகவும் ஆழமாக இல்லை எனலாம். இந்தக் காரணங்களால்தான் அவர்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள் பேசுகிறார்கள்
இப்படி அவர்கள் சொன்னதையே தங்கள் ஞாபக மறதி காரணமாக மீண்டும் அவர்கள் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பிக்கலாம் ஆனால் அதைக் கேட்கும் நமக்கும் ஆர்வத்திற்குப் பதிலாக ஒரு மந்த நிலைதான் ஏற்படும்.
நமது மேனேஜரோ அல்லது வயதில் முதிர்ந்த பெரியோர்களோ சொன்னதையே மீண்டும் சொல்லும் போது குறுக்கிட்டு இதை நீங்கள் எத்தனை தடவைதான் மீண்டும் மீண்டும் சொல்லூவீங்க வேற ஏதாவது உருப்படியா சொல்லுங்க என்று சொல்லுவது மிகச் சரியான செயலாக இருக்காது. இப்படி நாம் சொன்னால் அது அவர்களின் மனதைக் காயப்படுத்துவது போலத்தான்.. அவர்கள் காயப்படுவதால் பின் விளைவுகளும் ஏற்படலாம் அந்தப் பின் விளைவுகளால் நாமும் பாதிக்கப்படலாம்.
ஆனால் அதற்காகக் கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை..
கேட்க வேண்டியது அவசியம் இல்லை என்பதால் கேட்பது போலப் பாசாங்கு செய்யலாம் என்றாலும் அதுவும் சரியாக இருக்காது காரணம் அடிக்கடி கேள்விப்பட்ட பழக்கமான கதை என்பதால் உண்மையான உணர்வுப் பூர்வமாகக் கேட்க முடியாது அதன் விளைவாக நாம் செல்போனை தேய்த்துத் தேய்த்து பார்க்க ஆரம்பிப்போம் அப்படிச் செய்வது பேசுபவர்களுக்குச் சரியான மரியாதையைத் தரவில்லை என்ற உணர்வு ஏற்படும் சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது அல்லது தாம் சரியாக விஷயத்தைச் சொல்லத் தெரியவில்லையோ என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது
அப்படியானால் இந்தச் சூழ்நிலையில் அவர்கள் மனது நோகாமல் நாம் என்ன செய்யலாம்? அல்லது செய்ய வேண்டும்?
"நீங்கள் இந்தக் கதையை இதற்கு முன்பு சொல்லியிருக்கிறீர்கள்!" என்று நாம் சொல்ல முற்பட்டால் பேசுபவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடும்
அதாவது ,நமது குறுக்கீட்டை மிக மென்மையான வகையில் எடுத்துச் சொல்லலாம் அப்படிச் செய்வதன் மூலம் இது உங்களுக்கு ஏற்கனவே கதையை/அவர் சொல்லும் செய்தியை நன்கு அறிந்திருப்பதைக் காட்டும் உதாரணமாக அவர் சொல்லும் போது முடிவில் இப்படித்தானே நடந்தது என்று அவர் ஏற்கனவே சொல்லி இருப்பதிலிருந்து ஒரு எடுத்துக்காட்டைச் சுட்டிக் காண்பிப்பதன் மூலம் அந்தச் செய்தியை நாம் ஏற்கனவே அவரிடம் இருந்து கேட்டு இருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்த முடியும் அதை உணர்ந்த அவர் ஆம் அப்படித்தான் நடந்தது என்று சொல்லி முடித்துவிடுவார் அதிகம் அது பற்றி விவரிக்கமாட்டார். நம்மிடம் நிகழ்வை விவரிப்பவர் ஓ, இந்தக் கதையை நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறீர்கள் போல என்று பதில் சொல்வதன் மூலம் ஏற்படும் உணர்தல் அவர்களை அசிங்கப்படுத்தாது காயப்படுத்தாது
சில நேரங்களில், நீங்கள் முன்பு ஒருவரின் கதையைக் கேட்டிருந்தாலும், நீங்கள் சில விவரங்களை மறந்துவிட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதை மீண்டும் கேட்க விரும்புவதை இப்படி நீங்கள் சொல்லலாம், “நான் இந்தக் கதையைக் கேள்விப்பட்டேன், ஆனால் அது எப்படி மாறுகிறது என்பதை நான் மறந்துவிட்டேன் வெளியே. மீண்டும் சொல்லுங்கள் கேட்கலாம். ” அதைக் கேட்கும் போது நிகழ்வை/கதையைச் சொல்பவர் நீங்கள் அப்படிக் கேட்டதால் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றும் வண்ணம் எடுத்துச் சொல்லுவார் இதனால். பேச்சாளர் மற்றும் கேட்பவர் இருவருக்கும் சலிப்பு ஏற்படாது சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
இப்படி அவர்கள் ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள் என்ற உண்மையை அவர்களின் நினைவில் உறுதிப்படுத்தலாம். (மக்கள் முன்பு உங்களிடம் கூறிய விஷயங்களை மீண்டும் வெளிப்படுத்துவது பொதுவாக ஒரு நல்ல நடைமுறை மட்டுமே; இப்படி மென்மையாக எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களைக் காயப்படுத்தாமல் வேறு விஷயங்களைப் பற்றிப் பேச்சைத் திசை மாற்றலாம்
அப்படி இல்லையென்றால் காயப்பட்டவர்கள் அவர்கள் நமக்கு எப்படிப்பட்ட உறவாக இருந்தாலும்
வேறு எந்த விதத்திலாவது நம்மைப் பதிலுக்குக் காயப்படுத்தவே முயற்சிப்பார்கள் அதுதான் உண்மை
அதனால் அனைவருடன் நாம் மென்மையாக நடக்கக் கற்றுக் கொள்வோம்
அன்புடன்
மதுரைத்ததமிழன்
டிஸ்கி எனது இளம் வயதில், வீட்டில் உள்ள பெரியவர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார்கள் அலுவலகத்தில் மேனேஜரும் மீட்டீங்கில் சொன்னதையே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார் அதைக் கேட்கும் போது மிகவும் எரிச்சலடைந்ததை நினைவில் கொள்கிறேன். அதுமட்டுமல்ல சொன்ன நகைச்சுவையையே ஒரே வாரத்தில் மூன்று முறை ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் செய்தவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இப்போது எனக்கு வயதாகிவிட்டதால், அது என்னை அதிகம் பாதிக்காது,காரணம் பலர் நீங்கள் இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள் காட்டி இருக்கிறீர்கள் என்று சொல்லுகிறார்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆமாம் நான் சொன்னதையே மீண்டும் மீண்டும் பலமுறை சொல்கிறேன் என்று பலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் ஹீஹீ எனக்கும் மூளையில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது ஞாபக மறதியும் ஏற்படுகிறது.
நான் மட்டும் இப்படி அல்ல மோடியும்தான் கடந்த ஆறு வருடங்களாக புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்
எல்லாம் சரிதான் முடிவில் மோடி வருவார் என்பதை கண்டிப்பாக நினைத்தேன் நண்பரே...
ReplyDelete
Deleteஐ லவ் மோடி அதனால மோடி இல்லாமல் அல்லது மோடி பற்றி பேசாமல் பதிவு இட மறப்பதே இல்லை நண்பரே
இப்போதுதான் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பாரதியார் பாடல்களை கூறிவருகிறார் என்றாவது ஒருநாள் நன்றாக தமிழ் கற்றுக் கொண்டேன் உங்கள் எழுத்துக்களை படித்து விட்டு கைகுலுக்க அமெரிக்காவிற்கு வரப்போகிறார் அந்த நாள் வெகு சீக்கிரம் நடக்கப்போகிறது செய்தித்தாட்களில் நாங்கள் வாசிக்க போகிறோம் ஏனென்றால் மோடியே நான் கூறியவற்றை திரும்பிப் பார்ப்பதில்லை ஆனால் அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு போட்டு கலக்குகிறீர்கள் இது ஒன்று போதாதா அவர் உங்களை சந்திக்க
ReplyDeleteமலத்தை நான் கையால் கனவில் கூட தொடுவது இல்லை
Deleteஅதானே பார்த்தேன்...
ReplyDeleteமுடிவு :
சிறப்பு... மிகவும் சிறப்பு...