Thursday, December 3, 2020

 

Rajinikanth to launch political party in January

எழுச்சி ஹெல்த் தகவலும் &  ரஜினி அறிவிப்பும்

இங்கு வந்துள்ள தகவல் எல்லாம் தனித் தனிதகவல் இதைப் படித்து ஒன்றோடு ஒன்றைக் கலந்து குழப்பிக் கொள்ளக் கூடாது

தமிழகத் தகவல் :


நேற்று  ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில்  ‘ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு’. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல’ என்றும், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!’ என்று பதிவிட்டு இருந்தார்.


   
Rajinikanth to launch political party in January


ஹெல்த் தகவல் :

எழுச்சி ஏற்படுவதால் மட்டும் குழந்தை பெற்று விட முடியும்  என்று வயதானவர்கள் கருதினால் அது முட்டாள்தனம் எழுச்சி ஏற்படுவதால் உறவில் சில நிமிடங்கள் சுகம்மட்டுமே கிடைக்கும் ஆனால் குழந்தை பெற விந்தில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியம் அது அதிகமாகவும் சக்தி உள்ளவையாகவும் இருந்தால் மட்டுமே குழந்தை பெற்று தகப்பன் ஸ்தானத்தில் அமர முடியும் . இது ஹெல்த் தகவல் மட்டுமே

பண்பாடு தகவல் :

கல்யாணம் எந்த வயதிலும் பண்ணிக் கொள்ளலாம் அது தவறே இல்லை... ஆனால் கல்யாணத்திற்கு அப்புறம் மனைவிக்குப் பிறக்கும் குழந்தைக்கு வேறு ஒருவன் தகப்பனாக  வந்துவிடக் கூடாது

சமுகத் தகவல் :

அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரியை நியாயமான முறையில் கட்டி நியாயமான முறையில் பணம் சம்பாதித்தால் மட்டுமே நம் பெயர் புகழைத் தக்க வைக்க முடியும் இல்லையென்றால் அடுத்தவனின் ப்ளாக் மெயிலுக்கு பயந்து எல்லாவற்றையும் அடகு வைத்து கடைசியில் பெற்ற பெயர் புகழ் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :


ரஜினி  வெற்றி பெற்றால், அதுதான் மக்களின் தோல்வி.
ரஜினி  தோல்வி அடைந்தால் அதுதான் மக்களின் வெற்றி"

03 Dec 2020

2 comments:

  1. (ஏ)மாத்துவோம் - சரியான கமெண்ட்!!!!!

    ReplyDelete
  2. (ஏ) மாத்துவோம்.....ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.