Monday, December 28, 2020

married but unhappy

 ஆதர்ச தம்பதிகளாகக் காட்டிக் கொள்ளும் போலித் தம்பதிகள்தான் நாட்டில் அதிகம்

அநேகமாக எல்லாத் தம்பதிகளும் ஏதாவது ஒரு காரணத்திற்காகப் போலித்தனமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் அதில் விதிவிலக்காக இருக்கலாம் அதுதான் நிஜம்.


எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் பார்ட்டிக்கு மனைவியுடன் வரும் போது எப்போதும் அவரது மனைவி அவரது கைபிடித்துக் கொண்டு ஒட்டி உரசிக் கொண்டே இருப்பார் அப்படிச் செய்யக் காரணம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இருப்பு இருப்பதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று அவரது மனைவி விரும்புகிறார்... இது அந்த நண்பருக்கு மிகவும் எரிச்சலைத் தந்தது காரணம் அவர்களின் மணவாழ்க்கை பற்றி நண்பர்களுக்கு அனைவருக்கும் தெரியும்.. அப்படி இருக்கையில் ஒரு நண்பர் என்னங்க அவர் கையையே சின்னப் புள்ளைப் பிடித்துக்கொண்டு இருக்கிற மாதிரி தொடர்ந்து பிடித்துக்கொண்டு இருக்கீறிங்க என்று கிண்டலாகக் கேட்க அதற்கு அவர் என் ஆசை கணவரைப் பிடித்துக் கொண்டு இருப்பது தப்பா எனக் கேட்க, உடனே அவரின் கணவர் வீட்டிலும் நான்தானே உன் கணவன். ஆனால் அங்கே நீ தொட்டது கூட இல்லையே என்று கேட்க அவரது மனைவியின் முகம் மிகவும் சுருங்கித்தான் போனது அதன் பின் அந்த நண்பரின் மனைவி பொது வெளியில் வேஷம் போடுவதில்லை

  


இவர்கள் மட்டுமில்லை இப்படித்தான் பலர் பேஸ்புக்கிலும் ஐ லவ் மை ஹஸ்பண்ட் என்று ஸ்டேஸ் போட்டுத் தங்கள் குடும்ப வாழ்க்கை மிக இனிமையாகக் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பார்கள் .ஆனால் அவர்களே தங்களின் உண்மையான நண்பர்களிடம் பேசும் மட்டும்தான் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி வண்டி வண்டியாகக் குற்றம் சொல்லி குழந்தைக்காகத்தான் கூட வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.


இப்படி அவர்கள் குழந்தையைக் காட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தக் காலக் குழந்தைகளோ அம்மா அப்பா சேர்ந்து இருக்கிறார்களா இல்லையா என்று எல்லாம் பார்ப்பதில்லை காரணம் இந்தக் காலக் குழந்தைகளுக்குத் தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அம்மா அப்பா தேவை அல்ல அவர்களுக்குத் தேவையானதை வாங்கித் தர ஆள் இருந்தால் போதும் என்று நினைத்து அவர்களும் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். ஆக மொத்தம் குடும்பம் முழுவதும் உண்மையான அன்பைத் தொலைத்துப் போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆம் இதுதான் இன்றைய குடும்ப வாழ்வு நிலை... இந்த உண்மை கசக்கத்தான் செய்யும்


இப்படிப் போலித்தனமாக வாழும் நேரத்தில் சமுக இணையத் தளங்களின் வளர்ச்சியும் செல்போன் பயன்பாடும் அதிகரித்த நிலையில் பல தகாத உறவுகளும் ஏற்பட்டுப் பல இடங்களில் கண்டு காணாமலும் சில இடங்கில் அது பெரிய பிரச்சனையாக ஆகி கொலையிலும் தற்கொலையிலும் முடிந்துவிடுகிறது. இப்படிப் பிரச்சனைகள் அந்தக் காலங்களில் நடந்த போதில் கூட்டுக் குடும்ப முறை காரணமாகப் பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தப்பட்டு குற்றங்களை மன்னித்து அல்லது உணர்ந்து திருந்தி வாழ்க்கையை இனிமையாகக் கொண்டு பலரும் எடுத்துச் சென்றனர்..


ஆனால் இன்றைய அவசர உலகில் எல்லாம் தலைகீழாக மாறினாலும் இன்னும் நம் கலாச்சாரம் பண்பாடு என்ற கட்டுப்பொட்டித்தனம் மட்டும் மாறாததால் பிரச்சனை பூகம்பமாகி வெடிக்கின்றன.


இதற்காகத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் திருமணம் 5 ஆண்டுகள் மட்டும் செல்லுபடியாகும் அதன் பின் அடுத்த 5 ஆண்டுகள் செல்லுபடியாக வேண்டுமென்றால் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது எக்ஸ்பையர் ஆகிவிடனும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும். இப்படி எல்லாம் நல்ல யோசனையை நான் சொன்னால் என்னை லூசுன்னு சொல்லுறாங்க .ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு லூசுத்தனமாகப் பலர் போலியாகக் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஹும் இதற்கும் மேல என்னத்த சொல்ல



அன்புடன்
மதுரைத்தமிழன்



மகிழ்ச்சியற்ற தம்பதிகள் ஏன் ஒன்றாக இருக்கிறார்கள் தெரியுமா?

1. உறவிலிருந்து வெளியேற போதுமான தைரியம் இல்லை.

2. பிற்கால வருத்தத்தின் பயம்.

3. காலப் போக்கில் பிரச்சனைகள் நீங்கி விஷயங்கள் மேம்படும் என்று நம்புவது

4. இந்தப் பிரிவினை தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய கவலைகள்

5. வாழ்க்கையைத் தனியாக வாழ்வதற்கான நிதி நிலமைப்ப்பற்றிய அச்சம்

6. குடும்ப வீட்டை இழக்க விரும்பாதது..

7. விலகி ஒரு புதிய உறவைத் மீண்டும் தொடங்க ஏற்ற  வயதை கடந்துவிட்டோம் என்ற நிலை

8. வெளியேறுவது பற்றிய குற்ற உணர்வு.

9. தனியாக வாழ்வது பயமாக இருக்கிறது.

10 தனிமை பற்றிய கவலைகள் .

11. சமுகம் தம்மைப்பற்றி தவறாக நினைத்துக் கொள்ளுமோ என்ற அச்சம்

இந்தக் காரணங்களால் மட்டுமே பல திருமணங்கள் அப்படியே சந்தோஷம் இல்லாமல் இருந்து கொண்டு இருக்கிறது
 

https://youtu.be/kQ8xqyoZXCc


kacey musgraves - follow your arrow lyrics



If you save yourself for marriage
You're a bore
You don't save yourself for marriage
You're a horrible person


If you won't have a drink
Then you're a prude
But they'll call you a drunk
As soon as you down the first one

If you can't lose the weight
Then you're just fat
But if you lose too much
Then you're on crack


நட்புக்கு தூரம் அதிகமில்லை கலைஞர் பேசினால்.......?  

 

சந்தி சிரிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை 

28 Dec 2020

55 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஓஓஓஓஓஓஒ எனக்கு இந்தக் கொமெண்ட் வேணும்.. ட்றுத் கண்ணுபிடிச்சு எடுத்துத் தாங்கோ:))

      Delete
    2. என் யோசனை மிகவும் அற்புதமான யோசனை பாராட்டதக்கது வரவேற்கதக்கது அதை 100 % ஆதரிக்கிறேன் என்று சொல்லி இருந்தாங்க... கடைசியிலே என்ன நினைச்சாங்களோ அதை டெலீட் பண்ணிட்டாங்க ஹீஹிஹீ

      Delete
    3. ஆஆஆ !!1 இல்லை இல்ல அது என்ன எழுதி அழிச்சேன்னா /// அது யாரு ட்ரூத் படம் போட்டதுன்னு //கியூரியாசிட்டில கேட்டுட்டு பயத்தில் அழிச்சிட்டேன் 

      garrrrr truth :) தானே தன்னை பாரட்டிக்கிட்டார் சந்தடிசாக்கில் 

      Delete
    4. என் புதிய கனவு கன்னி பற்றிய வீடியோ போட்டு இருக்கின்றேன் அது பற்றி நீங்க இரண்டு பேரும் ஒன்னுமே சொல்லவில்லை

      Delete
    5. அடுத்தவங்க பாராட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க கூடாது என்பதுதான் என் பாலிசி ஹீஹீ அதுனாலதான் இப்படி சந்தடி சாக்கில்

      Delete
  2. கருத்துக்களை கச்சிதமாகவும் ,உண்மையை உறைக்கும்படிக்கு உரக்கவும் சொல்லிவிட்டீர்கள் . எதுக்கும் கவனமாயிருங்க :))
    சோஷியல் மீடியா நல்ல விஷயங்களை கற்க கற்றுக்கொடுக்க பயன்படணும் .போலியாய் எல்லாத்தையும் பப்லிசிட்டிக்கு போட்டாபோட்டிக்கு போட்டுக்க பயன்படுத்தக்கூடாதது :)  

    எதுக்கு ட்ரூத் 5 வருஷத்துக்கொருமுறை புதுப்பிக்கணும் ? என்னைக்கேட்டா வருஷா வருஷம் கணவனும் மனைவியும் தங்கள் மண  நாளில் தனிமையில் அமர்ந்து நிறைகுறைகளை சேர்ந்து பேசி புதுப்பிக்கணும் என்றே சொல்வேன் ..அதே போல இஷ்டமில்லாம சேர்ந்து வாழ்ந்து நம்மையும் கஷ்டப்படுத்தி பிறரையும் கஷ்டப்படுத்தறதை விட சந்தோஷமான பிரிவே நல்லது 

    ReplyDelete
    Replies
    1. //எதுக்கு ட்ரூத் 5 வருஷத்துக்கொருமுறை புதுப்பிக்கணும் ? என்னைக்கேட்டா வருஷா வருஷம் கணவனும் மனைவியும் தங்கள் மண நாளில் தனிமையில் அமர்ந்து நிறைகுறைகளை சேர்ந்து பேசி புதுப்பிக்கணும் என்றே சொல்வேன் ..///

      அஸ்க்கு புஸ்க்கு ஆசையை பாருங்க ஆசையை

      Delete
    2. அவ்வ்வ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்  ட்ரூத் :)  நான் நினச்சேன் லவ்வை புதுப்பிக்க சொல்றீங்கன்னு அநியாயத்துக்கு புது லவ்வர்னு 12 மணிநேரங்கழிச்சி அதுவும் ஸ்ரீராம் ரிப்லை பார்த்தபிறகே மீக்கு புரிஞ்சது கர்ர்ர்ர்ர் 

      Delete
    3. ஹா ஹா ஹா பொல்லுக்கொடுத்தே அடி வாங்குறாவே என் செக்:)) சே..சே.. இதனை லைவ் ஆ பார்க்க தவறிட்டேனே:))

      Delete
    4. ஹ்லோ ஏஞ்சல் நீங்கள் எந்த ஸ்கூலில் படித்தீங்க? பார்த்தால் மழைக்கு கூட பள்ளிகூடப் பக்க ஒதுங்கினமாதிரி கூட தெரியலையே?..... இந்த பதிவை நான் பேஸ்புக்கில் பகிர்ந்த போது ஒருத்தர் வந்து தலைவரே 5 வருஷம் எல்லாம் அதிகம் கொஞ்சம் குறைக்க கூடாதா எங்களை பார்த்தால் உங்களுக்கு இரக்கமில்லையா என்று கேட்கிறார்... ஆனால் நீங்க என்னென்னா லவ்வை புதுப்பிக்கனும் என்று சொல்ல வரீங்க... இதுல வேற அதிராவிற்கு நீங்க ரொம்ப குளோஸ் ப்ரெண்ட் வேற என்று சொல்லுறீங்க


      உங்க குளோஸ் ப்ரெண்டை பாருங்க ட்ரெம்ப்பை கழட்டிவிட்டு விட்டு இப்ப ஜோபடன் பின்னால சுத்துறாங்க

      Delete
    5. ஒரு சிறு திருத்தம் ட்றுத்:)) கழட்டி எல்லாம் விடவில்லை:)) ட்றம்ப் அங்கிளுக்கு கிந்தி புரியாதெல்லோ:)) அதனால அவரிடம் சொல்லி இருக்கிறேன்ன் அம்பேரிக்கா பற்றிய மீற்றிங் ஒன்றுக்காக மோடி அங்கிள் அழைக்கிறார் ஒரு ஆறு மாசம் போயிட்டு வருகிறேன் என:))

      Delete
    6. குண்டு பூனை கர்ர்ர்ர் :)) சத்தியமா ஸ்ரீராம் கமெண்ட் பார்த்துதான் புரிஞ்சு .நான் பாருங்க இந்த மதுரை ட்ரூத்தா பேசறார்னு எவ்ளோ அப்பாவியா இருந்திருக்கேன் ..

      Delete
    7. ஹா ஹா ஹா அஞ்சு ஒரு உண்மை சொல்லட்டோ.. ட்றுத் அரசியல் பேசினால் ஓகே:)), அரசியலை விட்டு வேறு போஸ்ட் போடுகிறார் எனில் நாங்க உசாராகிடோணுமாக்கும்:)) ஹா ஹா ஹா:))

      Delete
    8. ஆமாம் மியாவ் !!! அநியாயமா நானே வந்து வண்டியில் ஏறி வசமா மாட்டியிருக்கேன் :)) ட்ரூத் கராஜில் ஒளிச்சி வச்சிருக்கிற மீன் குழம்பு மேலே சத்தியம் பண்ணுங்க நீங்க என் கமெண்டுக்கு ட்ரூத் ரிப்லைஸ் பார்த்துதான் கண்டு புடிச்சீங்க :) நாம ரெண்டுபேருமே சேம் ப்ளட் ஆச்சே உங்களுக்கு புதுப்பித்தலுக்கு மீனிங் தெரிய  சான்ஸே இல்லை :)) உங்க நல்ல நேரம் நான் வசமா மாட்டிகிட்டேன் :) யூ எஸ்கிப்ட் 

      Delete
    9. ஹலோ இது குடும்ப அரசியலுங்க அது புரியாமல் மாட்டிக்கிட்டீங்க

      Delete
    10. மீன் மட்டும் காராஜ் ப்ரிஜ்ஜில் வைக்கப்படும் இப்ப நான்ங்க் கொஞ்சம் முன்னேறி மீன் குழம்பை கிச்சன் பரிஜ்ஜில் வைக்க ஆரம்பித்துவிட்டோம் ஹீஹீ

      Delete
  3. இப்போ எல்லாம் பொண்ணு கிடைக்கறதே கஷ்டமா இருக்கு...   ஒரு கல்யாணம் செய்துகொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது..

    ReplyDelete
    Replies

    1. அரேஞ்சுடு மேரேஜ்ஜுக்குதான் பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்

      Delete
    2. எல்லோருக்குமா லவ் வந்துடுது?!!

      Delete
    3. எல்லோருக்கும் லவ் வரும் அரேஞ் மேரேஜ்பண்ணுனவங்களுக்கு கல்யாணத்திற்கு அப்புறம் லவ் வரும்மாமில கட்டியவர்கள் மீது

      Delete
    4. எல்லோருக்குக் லவ் வரும்மா என்று எல்லாம் எனக்கு தெரியலை ஆனால் மாம்பழக் கலரில் சேலைக்கட்டி ரெட் கலர் பளவுஸ் போட்டு தலையில் மல்லிகை பூ வைத்து நெற்றியில் சந்தணத்தோடு குங்குமம் வைத்து ஒரு பெண் எதிரில் வந்தால் எனக்கு லவ் வந்திடும். இப்படித்தான் எங்க வீட்டு மாமி வந்து என்னை மயக்கி விட்டாள்.. இப்ப அவ அப்படி எல்லாம் வருவதே இல்லை ஹும்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
  4. //இந்த உண்மை கசக்கத்தான் செய்யும்//

    மறுக்கவே முடியாத உண்மை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே இன்றைய கால குடும்ப வாழ்க்கை இப்படித்தான் கசந்து கொண்டு இருக்கிறது

      Delete
  5. ஆஹா ட்றுத் நான் நினைக்கும் பல விசயங்களை புட்டுப் புட்டு[இது வேற புட்டு:)] சொல்லிட்டீங்கள். உண்மைதான் பாடலே இருக்கு தனுஸ் பாட்டு என நினைக்கிறேன்ன்.. வெளியே ஓவராக சீன் போடுவோரெல்லாம், உள்ளே எங்கே தாம் ஒற்றுமை இல்லை என்பதை, அடுத்தவர்கள் கண்டுபிடிச்சுவிடுவினமோ எனும் பயத்தினாலேதான்.. இது உங்கட 3 ஆவது பராவுக்குச் சொன்னேன்:))

    ReplyDelete
    Replies
    1. துள்ளும் இளமை நிலையில் இருக்கும் "உங்களை போல வயதானவர்கள்" என்ன நினைப்பாங்க என்பது மிக தெளிவாக தெரிவதால் நான் புட்டு புட்டு வைக்கின்றேன் ஹீஹீ

      Delete
    2. ட்றுத் கதவைப்பூட்டி லொக்கை இறுக்கிப் போட்டுக்கொண்டு கொமெண்ட் போட்டது போதும் கொஞ்சம் வெளில வாங்கோ:)).. பயப்பிடாதையுங்கோ ச்சும்மா பேசத்தான்:))

      Delete
    3. @அதிரா என் பெட் ரூம் கதவு எப்பவுமே திறந்து இருக்கும் ஆனால் என் மனைவி மற்றும் குழந்தையின் பெட் ரூம் கதவுகள் எப்பவுமே சாத்திதான் இருக்கும் மணி இங்கே காலை எட்டரை இரண்டு பேரும் இன்னும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க எப்படியும் அவங்க எழுந்திரிக்க 10 மணியாகிவிடும் எனக்க் இன்று விடுமுறை என்பதால் உங்கள் கருத்திற்கு எல்லாம் பதில்போட முடிந்தது இல்லையென்றால் காலி 6 மணிக்கு எல்லாம் வேலையில் இருப்பேன் அதுமட்டுமல்ல கூட வேலை பார்த்த இத்தாலி பெண்மணி மரணம் அடைந்து விட்டார் அதற்கு இன்ரு செல்லவேண்டும். மனம் மிகவும் வருத்ததில் இருந்தது... உங்களின் கருத்துக்கள் அதில் இருந்து வெளியே வர செய்து விட்டன

      Delete
  6. உண்மைதான்.. வாழ்ந்தால் நன்றாக வாழ வேண்டும் இல்லை எனில் போலியான வாழ்க்கை எதுக்கு எனத்தான் நானும் நினைப்பேன்.. இது கணவன் மனைவி உறவு மட்டும் என்றில்லை.. நட்பாயினும் சொந்த பந்தமாயினும் பொருந்தும்...

    என்னுடைய பொலிசி:).. “செய் அல்லது செத்துப்போ”:)) ஹா ஹா ஹா:))..

    ReplyDelete
    Replies
    1. /உண்மைதான்.. வாழ்ந்தால் நன்றாக வாழ வேண்டும் இல்லை எனில் போலியான வாழ்க்கை எதுக்கு எனத்தான் நானும் நினைப்பேன்.///

      இப்படித்தான் நினைப்போம் ஆனால் அப்படி எல்லாம் வாழமாட்டோம் என்னையும் சேர்த்துதான் சொல்லுறேன்

      Delete
  7. இப்போதைய குடும்ப வாழ்க்கை விரைவில கசப்பதற்குக் காரணம், வயசாகிட்டுது என நினைச்சு 35 இலேயே பெண்கள் மேக்கப் போடாமல், ஜிம் போகாமல் வயதானோர்போல ஒடுங்கிப்போவதனாலகூட இருக்கலாம்:)).. ஹையோ ஆண்டவா நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)).. மீ ஓடிடறேன்ன் எனக்க்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பூனை எனக்கு எந்த செயற்கையும் பிடிக்காது :) அதை போட்டாதான் எனக்கு அலர்ஜி வரும் மீ நேச்சுரல் பியூட்டியாக்கும் .yooooo மேக்கப் cat 

      Delete
    2. ///இப்போதைய குடும்ப வாழ்க்கை விரைவில கசப்பதற்குக் காரணம், வயசாகிட்டுது என நினைச்சு 35 இலேயே பெண்கள் மேக்கப் போடாமல், ஜிம் போகாமல் வயதானோர்போல ஒடுங்கிப்போவதனாலகூட இருக்கலாம்:)///

      சரியாக சொன்னீங்க அது மட்டுமல்ல வாட்சப்பில் வரும் செய்திகளை உண்மை என நினைத்து அதன்படியே வாழனும் என்று நினைப்பத்தோடுமட்டுமல்லாமல் வாழ்க்கை துணைக்கும் அதை போதிக்கிறாங்க


      //35 இலேயே பெண்கள் மேக்கப் போடாமல்//

      ஆனால் 65 வயதானாலும் சிலர் மேக்கப் போட்டுகிட்டு பயமுறத்தான் செய்யுறாங்க... ச்சே சே நான் உங்களை சொல்லவில்லை அதிரா ஹீஹீ

      Delete
    3. போகிற போக்கில் உண்மையைஉறக்க சொல்லிட்டாங்க மோடி அங்கிள் செக் :) அது எனக்கு 35 வயசுன்னு ..என்ன இருந்தாலும் மூத்தோர் மூத்தோர்தான் தேங்க்ஸ் 85 வயசு பூனை 

      Delete

    4. நேச்சுரல் ப்யூட்டின்னு சொல்லிட்டு முகம் பூரா மஞ்சள் அரைச்சு பூசினால் பார்க்கிறவங்க பயப்பட போறாங்க.... நல்ல வேளை நான் தூரத்தில் இருக்கிறதனாலே தப்பிச்சேன்

      Delete
    5. ஹலோ ட்ரூத் உண்மையை தைரியமா அசொல்லணும் :)) எதுக்கு பயப்படறீங்க :)) நீங்கா மதுர வீரர் பயப்படக்கூடாதது .யாருக்கும் அசராத நீங்க இந்த மேக்கப்புக்கெல்லாம் அசரலாமோ :))

      மை மைண்ட் வாய்ஸ் /// யப்பப்பா  இப்போ ட்ரூத் fb ல ஒரு மேக்கப் போஸ்ட் போட நாலு பேர் நாப்பது பேரை கூட்டி வந்து அடிக்க ஹையோ ஹையோ நினைக்கும்போதே ஜாலியா இருக்கு //

      Delete
    6. குடும்ப வாழ்க்கை கசக்குதா? பாகக்காயும் கோவக்காயுமா சமைக்கறாங்களோ? கக்கரிக்காய் (கத்தரிக்காய் அல்ல) கேள்விப் பட்டிருக்கீங்களோ? செம கசப்பா இருக்கும்.

      Delete
    7. ஹாஹாஆ ட்ரூத் கண்டிப்பா  சொல்லணும் இதை கல்யாணமான புதிசில் மஞ்சள் தேச்சி முகத்தில் chalk effect வந்து ஜெர்மன் டாக்டரையே அலற வச்சேனாக்கும் .மஞ்சள் ஐரோப்பாவில் ஒத்து வராது நம்ம ஸ்கின்னுக்கு :) 

      Delete
    8. @ஏஞ்சல் பூரிக்கட்டையால் அடி வாங்கி உரம் பாய்ந்து உடம்பு இது நாலு பேர்கிட்ட அடிவாங்குவதெற்கெல்லாம் பயப்படாது?

      Delete
    9. @ஸ்ரீராம் குடும்ப வாழ்க்கை கசக்கவில்லை ஆனால் monotonous ஆக போகிறது.... அதனாலதான் இப்படி எல்லாம் யோசிச்சு பதிவு போடுறது... அப்புறம் கிச்சன் என்னுடையது ஹீஹீ

      Delete
    10. @ஏஞ்சல் என் பொண்னு அவ்வளவா மேக்கப் போட மாட்டால் பார்ட்டிக்கு போகும் போது மிகவும் லைட்டாக மஞ்சள் பூசி குளித்துவிட்டு லைட் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு போவாள் அவள் தோழிகள் எல்லாம் என் பொண் மிக அழகாக மேக்கப் போட்டு வந்திருப்பதாக சொல்லுவார் இவள் இந்த் அரகசியத்தை யாரிடமும் சொல்லியதில்லை

      Delete
    11. ஆஆஆவ்வ் கூகிள் அங்கிள் ஜதி செய்துவிட்டார்ர்ர்:)) மளமளவென ட்றுத்தை:) நன்கு திட்டி:)) மொபைல் கொமெண்ட்ஸ் போட்டேன்ன் ஆனா ஒன்றுகூட இங்கின வரவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      சிரிராம்:) அது கக்கரி அல்ல கெக்கரி ஆக்கும் ஹா ஹா ஹா:)) டமில்ல ஆரும் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு விட்டால் மீ பொயிங்கிடுவேனாக்கும்:))

      Delete
  8. என்ன இரண்டு வாலும் நம்ம பக்கம் வந்திருக்கின்றது ஒரு வேளை அவங்க வூட்டுக்காரர் இருவரு ஆண்டு இறுதி என்பதால் பார்ர்டிக்கு இவங்களை விட்டுவிட்டு போய்விட்டாங்களோ என்னவோ

    சரி சரி இரண்டு வால்களுக்கும் என் நன்றிகள் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ட்ரூத் :)) அது அப்பப்போ டைம் டேபிள் போட்டு எல்லாறையும் கலாய்ப்போம் இன்னிக்கு நீங்களும் கீதாக்கவும் எங்க லிஸ்டில் :))

      Delete
    2. @ஏஞ்சல் உங்க டைம் டேபில் படி இன்று என் பெயர் வந்திருக்கிறது இது முன்பே தெரிஞ்சிருந்தால் மோடியை வம்பு இழுத்து ஒரு பதிவு போட்டு இருப்பேன்ல் ஹும்ம்ம் தப்பிச்சுட்டாங்க

      Delete
    3. அஞ்சு உங்கட மேசையில ஓங்கி அடியுங்கோ மீயும் என் மேசையில் ஓங்கி அடிக்கிறேன்ன்:)) கொரோனா காண்ட் சேக் பண்ணுறோமாக்கும்:)) ஹா ஹா ஹா... இருந்தாலும் கொஞ்சம் பிசியாகி ஓடிட்டேன் இல்லை எனில் ட்றுத்தை ஒரு கை பார்த்திருக்கலாம்.. சே..சே ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. நீங்க மேசையில் அடிக்கனும் என்பதை வேகமாக படிக்கும் போது மீசையில் என படித்துவிட்டு திடுக்கிட்டுவிட்டேன் அதன் பின் தான் புரிந்தது அது மீசை அல்ல மேசை என்று ....

      Delete
    5. ட்றுத்.. அது மீசை இருப்போர் தானே படிச்சுத் திடுக்கிடோணும்:)) நீங்க எதுக்கு?:)).. ஹையோ அஞ்சுவை இங்கின காணமே.. மீ டனியா மாட்டீஈஈஈஈஈஈஈ:) எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

      Delete
  9. Replies
    1. ஆண்களுக்கு இதில் உள்ள உண்மை புரிந்திருக்கிறது ஆனால் பெண்கள் அது புரியாமல் லவ்வை புதுப்பித்து கொள்ளனும் என்று சொல்லுறாங்க

      Delete
  10. தலைவரே... உங்களின் தள விளக்கத்திற்கு இதுவே தல...! பின்னூட்டங்கள் இன்னும் இருந்திருக்க வேண்டும்; ஆமாம் எங்கே நம் நண்பர்கள்...? (paradesiatnewyork & vishcornelius)

    ReplyDelete
    Replies

    1. இருவரும் ஹாலிடே என்பதால் மிகவும் பிஸியாக இருப்பார்கள் என நினைக்கின்றேன்

      Delete
  11. இப்போதான் இந்த இடுகையைப் படித்தேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, கடைசி பாராவைத் தவிர.

    வாங்கிட்டோம், சரியில்லை என்று தூக்கிப்போட திருமணம் என்பது பைக், கார் அல்லது காய்கறி இல்லையே. ரொம்ப ஆலோசனை செய்துதான் திருமணம் செய்யணும். அறியாத பெரிய பிரச்சனைகள் இருந்தாலொழிய (ஒருவருக்கு மனநிலை பாதிப்பு, மறைத்துவைத்த கடுமையான நோய் போன்று..) முடிந்தவரை அனுசரித்து முடிந்த அளவு சந்தோஷமாகத்தான் வாழ்க்கையை ஓட்டணும் என்பது என் எண்ணம்.

    பிறருக்காக நடிப்பதால் யாருக்கு என்ன பிரயோசனம்? சிறிய பிரச்சனைகளை பிறரிடம் விவாதிப்பதே அநாகரீகம் என நினைக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.