Sunday, March 8, 2020

@avargal unmaigal



எல்லோரும் கொண்டாடுவோம். மகளிர்களின் பெயரைச் சொல்லி


என்னங்க இன்று மகளிர் தினமாமமே?

ஆமாண்டி இன்று மகளிர்தினம்தான் அதனால்தான் நண்பர்களை எல்லாம்   நம் வீட்டிற்கு விருந்திற்குக் கூப்பிட்டு இருக்கிறேன்... நீ மசமசவென்று இப்படிப் பேசிக் கொண்டிருக்காமல் சீக்கிரம் வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரித்து வைத்துவிட்டு அப்படியே கடைக்குச் சென்று விருந்திற்குத் தேவையான சாமன்களை  வாங்கி வந்துவிட்டு சீக்கரம் மளமளவென்று அவர்கள் வருவதற்கு முன்னால் சமைத்து வைத்துவிட்டுக் குளித்து அலங்கரித்துக் கொள்.....



நான்  அப்படியே கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துவிட்டு நண்பர்கள் வந்ததும் அவர்களை நான் வரவேற்று உபசரித்துக் கொள்கிறேன்... ஒகேவா

மாலை 6 மணியளவில் அடியே நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் வந்து விட்டார்கள் நீ அவர்களுடன் உட்கார்ந்து  பேசிக் கொண்டிரு...
நான் போய் சமையலறையிலிருந்து எல்லோருக்கும் வேண்டியதை எடுத்துப் பரிமாறுகிறேன்..

சரிங்க....


வீட்டிற்கு வந்தவர்கள் என்ன கீதா நீங்க நிறையக் கொடுத்து வைச்சவங்க..... உங்களை உட்கார வைத்துவிட்டு உங்கள் கணவர் எப்படி உபசரிக்கிறார் பாருங்கள்.... உங்களைப் பார்த்தாலே எங்களுக்குப் பொறாமையாக இருக்கிறது....



இரவு 11 மணி

சரிங் அப்ப நாங்கள் போய் வருகிறோம் உங்களின் உபசரிப்புக்கு மிகவும் நன்றிகள்..... உங்களின் கணவருக்குச் சிறப்பு தாங்கஸ்ங்க  உட்காரம்மாமல் இவ்வளவு நேரம் ஓடியாடி உபசரித்தற்கு..


ஹேய என்ன அப்படியே பேய் அரைந்தால் போல நின்று கொண்டிருக்க  மசமசவென்று நிற்காமல் உணவு வகைகளை எடுத்து ஒழித்து ப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு வீட்டையும் சுத்தம் செய்துவிட்டுப் படு...

எனக்கு மிகவும் டையர்டாக இருக்கிறது நான் தூங்கப் போகிறேன் முடிந்தால் இரவே என் துணிகளை அயர்ன் செய்து வைத்துவிடு இல்லையென்றால் காலையில் சீக்கிரம் எழுந்திருந்து அயர்ன் செய்து ப்ரேக் பாஸ்ட் ரெட்டி செய்துவிடு ஒகேவா


சரிங்... என்னங்க இன்று மகளிர்தினமாம் உங்களுக்கு ஞாபகமே இல்லையா...

ஏய் அதுக்குதானே நண்பர்களைக் கூப்பிட்டுக் கொண்டாடினோம் உனக்கு எப்படிக் கொண்டாடினாலும் திருப்த்தியே இல்லையா... ஹும் உன்னைப் போய் குறை சொல்லுவதற்குப் பதில் உன்னை வளர்த்தவர்களைக் குறை சொல்லனும்..

என்னத்த சொல்ல உன்னைக் கட்டிய என்னை  என்னவென்று சொல்லுகிறது ஹும்ம்....

அன்புடன்
மதுரைத்தமிழன்

இன்று மகளிர் தினமாம் இன்றாவது என் மனைவி என்னிடம் உதவி ஏதும் கேட்காமல் தானாகவே ஏதாவது சமைத்துத் தருவாளா என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.



மனைவியிடம் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் ஆண்கள் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லலாமா கூடாதா?



முந்தைய  மகளிர் தின பதிவுகள் :

 2012 பெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள் 

4 comments:

  1. இப்படித்தான் பல வீடுகளில் மதுரைத் தமிழன்.

    ஒரு நாள் மட்டும் கொண்டாடாமல் எல்லா நாட்களிலும் கொண்டாடுவோம்.

    ReplyDelete
  2. இதிலெல்லாம் என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கு. மகளிர் தினம்னா, அது நமக்கு அவங்களோட முக்கியத்துவத்தையும் தியாகத்தையும் நினைவுபடுத்தும் தினமாக இருக்கணும்.

    மனைவி செய்கின்ற வேலைகளை (கடமைகளை என்று சொல்லலை. பசங்களை, அவங்களோட குறிப்பறிந்து நடந்துகொள்வதில் ஆண் என்ன முயன்றாலும் பெண்ணின் 50% கூட எட்ட முடியாது) பகிர்ந்துகொள்வதே அதற்கான முதல் படி என்று நான் நினைக்கறேன்.

    ReplyDelete
  3. செம...ஜோக். நன்கு எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  4. இன்னும் இப்படியான மனைவிமார்கள் இருக்கிறார்களா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.