Thursday, March 19, 2020

@avargal unmaigal
மோடியின் பேச்சுக்கு பிறகு தமிழக மற்றும் கேரளா மக்களை நினைத்தால்தான் திக் திக்கென்று இருக்கு...




மார்ச்-22 ம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம்:மோடி வேண்டுகோள் விடுவித்து இருக்கிறார்.... வழக்கமாக மோடி ஏதும் சொன்னால் அதற்கு எதிராக செயல்படுவதுதான் தமிழக மற்றும் கேரளா மக்களின் வழக்கம்.... அதனால் மோடியின் பேச்சை நாம் எத்ற்கு கேட்க வேண்டும் என்று கூறி அதற்கு எதிராக எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி கும்பல்  கும்பலாக கூடிவிடுவார்களோ என்று நினைத்து என் மனம் திக் திக்கென்று  அடித்து கொண்டு இருக்கிறது. கடவுளே இப்படி ஏதும் மக்கள் செய்திடாதபடிக்கு நீங்கள்தான் அவர்களை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர்த்து வேறு ஏதும் என்னால் செய்ய முடியாது



பிரதமர் மோடிஜி இந்தியாவின் எல்லைபுறப் பகுதிகளில் ஒரு எலக்ட்ரானிக் டிவைஸில் ஒரு சிப் ஒன்றை பொருத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிற்குள் க்ரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.. இந்தியாவை காப்பாற்ற இவரைப் போல ஒரு தலைவரும் இந்தியாவில் இது வரை இருந்ததில்லை. ஜெய் ஸ்ரீராம்
@avargal unmaigal

இன்னும் எந்த ஒரு இந்துத்துவா பாஜக அமைச்சர் எவரும் பெண்கள் தீச்சட்டி ஏந்தி நிர்வாணமா இந்தியாவை  சுற்றி வந்தால் கரோனோ நம்மை ஒன்றும் செய்யாது என்று அறிக்கைவிடாமல் இருப்பது எனக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது


Crude Oil வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியை அடைந்துள்ளது.  ஆனாலும் நாட்டு மக்களின்(அம்பானியை வாழவைக்க) நலன் கருதி அதன் விலையை குறைக்காமல் (அதுவும் இந்த கரோனா வைரஸ் பரவும் நேரத்தில்) இருக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது.. இதைவிட மோடி அரசு நாட்டுக் மக்களுக்கு அப்படி என்னதான் நல்லது செய்திட முடியும்..


ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிராதிபதி மட்டும் தண்டிக்கப்படக் கூடது என்பது அந்த காலம்.

ஆனால் இப்போ ஆயிரம் நிராதிபதிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு குற்றவாளி மட்டும் தண்டிக்கப்படக் கூடாது மோடியின் காலம்




என் கம்பெனியில் இன்று காலை எல்லோரையும் கூப்பிட்டு மீட்டிங்க போட்டு  எங்க மேனேஜர் சொல்லுறான் நாப்பது ஐம்பது பேர் சந்திக்கிற  பார்ட்டியில் கலந்து கொண்டவர் கட்டாயம்  HR மேனேஜரிடம் தகவல் சொல்லுனும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று கூறினார்... இந்த மீட்டிங்கில் சுமார் 60 பேருக்கு மேல் கலந்து கொண்டோம்.. ஒருவேளை பார்ட்டியில் கலந்து கொண்டால் மட்டும் வைரஸ் பரவும் மீட்டிங்கில் கலந்து கொண்டால் வைரஸ் பரவாதுன்னு இந்த லூசு பசங்க நினைக்கிறாங்க # என்னத்த சொல்லுறது

https://youtu.be/t1Ps0tqcb2A




அன்புடன்
மதுரைத்தமிழன்

19 Mar 2020

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.