Sunday, March 1, 2020

@avargalunmigal
அட போங்கப்பபா ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உடன் பிறப்புக்கள் மிஸ் செய்துவிட்டார்கள்

ஸ்டாலினுக்கு பல பேர் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் போது இன்று போல என்று வாழ்க என்று வாழ்த்துவதை பார்க்கிறேன். அவர்கள் நிச்சயம் ஸ்டாலினை பிடிக்காதவர்களாவே இருக்கக் கூடும்.. இன்று போல என்று வாழ்க என்றால் அவர் என்றும் எதிர்கட்சி தலைவராகவே வாழ்வதா என்ன?



அது சரி, ஸ்டாலினை பிடிக்காதவர் இப்படி செய்தால் சரி .ஆனால் ஸ்டாலின் பணம் கொடுத்து  தனக்காக வேலை பார்க்க வைத்திருக்கும் பிரசாந்த கிஷோர் இந்நேரம் என்ன செய்து இருக்க வேண்டும். ஸ்டாலின் பிறந்த தினத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் உடன் பிறப்புகளை வைத்து அன்னதானம் செயவது ஸ்டாலின் நன்றாக இருக்க மொட்டை அடிப்பது தீயில் இறங்குவது இப்படி பல விதமாக செய்து இருக்க வேண்டாமா என்ன? இதற்கு ஸ்டாலின் என்ன மறுப்பா தெரிவிக்க போகிறார் அப்படி அவர் மறுப்பவராக இருந்தால் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு துர்கா ஸ்டாலின் அவரது கணவருக்காக பிரார்த்தனை செய்வதற்கு எதிர்ப்பு அல்லவா செய்திருப்பார்.


அட போங்கப்பபா ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உடன் பிறப்புக்கள் மிஸ் செய்துவிட்டார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நண்பரே இந்த சந்தர்ப்பம் எல்லா வருசமும் வருதே...

    ReplyDelete
  2. இப்போ புதுசா ஒரு பட்டம் கொடுத்து போஸ்டர் போட்டிருக்காங்க. செயல் முதல்வரே என்று. ஹா ஹா ஹா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.