தமிழ் இலக்கியத்தை படித்து முடித்தவுடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்க கூடாது என்ன நான் சொல்லுவது சரிதானே |
தமிழ் எழுதப் படிக்க தெரிந்தாலும் தமிழ் இலக்கியம்மட்டும் பலருக்கும் புரிவதில்லை ஏன் தெரியுமா?
சில பேர் மிக அழகாக எழுதுறாங்க... ஆனால் என்ன அவங்க என்ன எழுதியிருக்காங்க அல்லது சொல்ல வாராங்க என்பது மட்டும் நமக்கு சத்தியமா புரியாது. ஆனால் அது தமிழ்ல அவங்க எழுதி இருக்கிறதனால நம்மால் அதை படிக்க முடிகிறது என்பதை தவிர ஒன்றும் நமக்கு புரியாது. இதுல வேற இந்த காலத்து குழந்தைகள் தமிழ்ல பேசினாலும் அவங்களால் எழுதப்படிக்க தெரியமாட்டேங்கிறது என்பதை பெரிய குறையாக சொல்லுவாங்க. அடேய் நீங்க எழுதுவதை தமிழ்படிக்க எழுத தெரிந்த எங்களாலே படித்து புரிந்து கொள்ள முடியாத போது அவங்களுக்கு எழுதப் படிக்க தெரியாமல் இருப்பதே நல்லது.... சரி அப்படி என்ன அவங்க எழுதி நமக்கு புரியலைன்னு கேட்கிறீங்களா? அது ஒன்றும் இல்லைங்க... இந்த இலக்கியவாதிகள் என்று சொல்லக் கூடியவர்கள் எழுதுவதைபற்றித்தான் நான் பேசுகிறேன்... இவங்க போதும் தமிழை ஒழிக்க.....
அடேய் இலக்கியவாதிகளே உண்மையாகத்தான் கேட்கிறேன் நாம் எழுதுவதை அடுத்தவன் படிப்பதற்காகத்தானே எழுதுகிறோம்.... அப்படி அடுத்தவர்கள் படிப்பதற்காக எழுதுகிறோம் என்றால் அவர்களுக்கு புரியும்படியாக எழுதினால்தானே நல்லது.. ஒருவேளை உங்களின் எண்ணங்களை அடுதவர்கள் படிக்கணும் ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளமுடியாதபடி இருக்கணும் என்று நினைத்துதான் நீங்கள் எழுதுகிறீர்களோ என்னவோ?
அட போங்கப்பா உங்க எழுத்துகளை படிப்பதற்கு பதிலாக மீம்ஸ் படைப்பாளிகள் நச் என்று போடும் மீம்ஸ்களை பார்த்தே அன்றையகால கருத்துகளை அறிந்து கொள்கிறோம்..
நீங்க பேசாமல் இலக்கியம் எழுதி புத்தகங்கள் போட்டு உங்கள் நண்பர்களுக்கு பரிசாக கொடுத்து மகிழுங்கள் எங்களை ஆளை விடுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

யாருங்க அது...?
ReplyDeleteநீங்க சரியான டாபிக்கைத் தொட்டிருக்கீங்க.
ReplyDeleteஇலக்கியம்னா அது, தன்னைப்போல சில சக எழுத்தாளர்கள் மட்டும் படிக்கணும்னு நினைத்து பலர் எழுதறாங்க. பரவலாகச் சென்றடையணும்னு அவங்க நினைக்கறதே இல்லை.
எழுத்து அனைவருக்கும் புரியணும், அவங்களைச் சிறிது உயர்த்துவதாக இருக்கணும். நான் சில மொழிபெயர்ப்பு நூல்களை (தமிழ் எழுத்தாளர்) வாங்கி, என் பணத்தையும் நேரத்தையும் வீணடித்திருக்கிறேன். ஒரு வாக்கியம் எப்படி இருக்கணும்னே இப்படிப்பட்டவங்களுக்குத் தெரிவதில்லை. இத்தனைக்கும் அதில் ஒருவர், முன்னாள் எம்.பி.