Thursday, November 7, 2019


@avargal unmaigal
கலைஞரின் மகளான திருமதி.கனிமொழியைக் காணவில்லை

எங்கே சென்றார் கனிமொழி????


திமுக கட்சியின் மகளிர் அணியின் தலைவியும்  பாராளுமன்ற உறுப்பினரும் கலைஞா¢ன் மகளான திருமதி.கனிமொழியைக் கடந்த சில மாதங்களாகக் காணவில்லை. அவர் கட்சியிலிருந்து ஒதுக்கப்படு இருக்கிறாரா? அல்லது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வாராமல் இருக்க ஊடகங்களை யாரும் மிரட்டி இருக்கிறார்களா? அல்லது உதயநிதியை புரோமோட் பண்ணுவதற்காக அவரை அடக்கி வாசிக்கும் படி திமுகவின் தலைமை உத்தரவு இட்டு இருக்கிறதா என்று யாருக்கும் தொ¢யாத மற்றும் பு¡¢யாத புதிராக இருக்கிறது


சில மாதங்களுக்கு முன்பு கனிமொழி அவர்களின் மாமியார் சிங்கப்பூரில் காலமானார். ஆனால் அதற்கு அவரின் சகோதரர்கள் சகோதரிகள் யாரும் செல்லவில்லை ஏன் ஒரு அறிக்கையும் இடவில்லை..கனிமொழிமட்டும் இறுதி சடங்களில் கலந்து கொண்டு திரும்பி இருக்கிறார்.

ஒருவேளை தன் குடும்பத்தார் தன்னை ஒதுக்கி இருக்கிறார்களோ என்று நினைத்து வருந்தி அதனால் தன்னை எதிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறாரோ என்னவோ?



அன்புடன்
மதுரைத்தமிழன்





@avargal unmaigal








செய்தி :டில்லியை தொடர்ந்து உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் காற்று மாசுபாடு அதிகமாகி இருக்கிறது . இந்த நிலையில் உ..பி.,யில் பக்தர்கள் சிலர், கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு முகமூடி அணிவித்துள்ளனர்.

பக்தாஸ் இப்படி முகமூடி அணிவிப்பதற்கு பதிலாக இந்த மாநிலம் முழுவது யாகங்கள் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்தானே




அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. துக்ளக்கின் ஒண்ணரைப் பக்க நாளேடு மாதிரி நன்றாய்த் தயாரித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. இவுகளை தேடுறதுதான் எனக்கு வேலையா ? நான் பிஸி.

    ReplyDelete
  3. கனிமொழிக்கு ஸ்டாலினைவிட வசீகரம் (மக்களை ஈர்க்கும்) அதிகம். கருணாநிதியை நினைவுபடுத்தும் தோற்றம். இது போதாதா அவர் ஒதுக்கிவைக்கப்பட. பரவாயில்லை..நீங்கள் ஒருத்தராவது கவலைப்படுகிறீர்களே.

    ReplyDelete
  4. //கட்சிக்கு வாய்ஸ் கொடுக்க விருது// - இது நியாயமில்லாத விமர்சனம் என்று தோன்றுகிறது. ரஜினி அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்.

    சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தது, கலாநிதிக்கு தயாநிதி அமைச்சராக இருந்தபோது கொடுத்த விருது, சினிமாக் காரர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த விருது என்று லிஸ்ட் எடுத்தா, எல்லாமே 'ஆதாயத்துக்குத்தான் கொடுத்த விருது' என்று தெரியும். இதில் பாஜக மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.