ஹேய் அந்த பாடியை எடுத்து பெரிய பெட்டியில் வை. யாரவது பார்த்தால் வம்பு... நான் சீக்கிரம் குளிச்சிட்டுவந்துடுறேன் என்று சொல்லிவிட்டு குளிக்க போய்விட்டேன். சிறிது நேரம் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தால் ரூமிற்குள் போலீஸ் அவர்கள் ரூமை சோதனைக்கு உடபடுத்தி கொண்டிருந்தார்கள் மனைவியோ மூச்சு பேச்சு இல்லாமல் ஒரு மூளையில் வெலவெலத்து நின்று கொண்டிருந்தார்.
நான் என்ன பெட்டி எந்த பாடி என்று கேட்ட போது சார் எங்கிட்ட மறைக்காதீங்க நீங்க சொல்லவில்லை என்றாலும் நாங்க கண்டுபிடித்துவிடுவோம் என்று நிப்பாட்டாமல் பேசிக் கொண்டே சென்றார்.
நான் மீண்டும் சார் நீங்க என்ன சொல்லுறீங்க கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நான் எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல இயலும் என்று சொன்னேன்
உடனே அவர் இந்த ஹோட்டலை க்ளீன் செய்யும் நபர் எங்களுக்கு போன் பண்ணி நீங்கள் எதோ ஒரு பாடியை பெரிய பெட்டியில் எடுத்து மறைக்க வைக்க சொன்னதை கேட்டு அவள் எங்களுக்கு போன் பண்ணினார். அதை கேட்ட நாங்கள் இங்கே உடனடியாக இங்கே சோதனை செய்ய வந்திருக்கிறோம் என்று கூறியதும் நானும் என் மனைவியும் சிரிக்க ஆர்ம்பித்தோம்
உடனே போலீஸ் ஆமாம் சீரியஸாக சொன்னதை கேட்டு நீங்கள் எதற்கு சிரிக்கிறீங்க என்றார்
அதற்கு நாங்க இதற்கு சிரிக்காமல் வேறு எதற்கு சிரிப்பதாம்... நான் என் மனைவியிடம் சொன்ன பாடி என்பது அவள் அணியும் பிராவைத்தான் அதைத்தான் பெட்டியில் எடுத்து வை யாராவது வந்து பார்த்தால் அசிங்கமாக அதாவது வம்பாக இருக்கும் என்று சொன்னேன்.
அதை அந்த க்ளீனிங்க லேடி தப்பாக புரிந்து உங்களுக்கு போன் பண்ணி இருக்கிறார். இப்ப சொல்லுங்க இதற்கு சிரிக்காமல் வேறு எதற்கு சிரிப்பதாம்...
போலீஸும் தலையில் அடித்து சிரித்து கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள்.
இந்த சம்பவம கடந்த வாரம் நான் என் குடும்பத்தாருடன் வெகேஷன் சென்ற போது ஹோட்டலில் நடை பெற்றது.... சம்பவம் உண்மை ஆனால் போலீஸ் வந்ததது மட்டும் கற்பனை.. அதாவது என் மனையிடம் பாத்ரூமில் இருந்த பாடியை எடுத்து பெட்டியில் போடு என்று சொன்னது மட்டும் உண்மை அதன் பின் சொன்னது எல்லாம் நாங்கள் இருவரும் பேசி சிரித்தது...
அம்புட்டுதான் விஷயம்
மதுரைத்தமிழன்
சினிமாவில் நகைச்சுவைக் காட்சியாய் வைக்கலாம்.
ReplyDeleteஎன்ன சார் ஆச்சு உங்களுக்கு? ...
ReplyDelete