Sunday, September 1, 2019

@avargal unmaigal
கவர்னர் பதவி தமிழிசைக்கு கிடைத்த  வெகுமதியா அல்லது தண்டனையா?


தமிழிசையின் தகுதிக்கும் திறமைக்கும் கடின உழைப்புக்கும்  பேசாற்றலுக்கும் கண்ணியமான பேச்சிற்கும் மற்றும் நேர்மை துணிச்சல் பு இவற்றிற்கு கிடைத்த வெற்றிதான்  இந்த கவர்னர் பதவி என்று பலரும் பாராட்டி வாழ்த்துகிறார்கள்



தமிழிசை தமிழர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறாரா அல்லது பிஜேபி கட்சியின் வளர்ச்சிக்காக குரல் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால் தமிழரின் நலன்களை தூக்கி போட்டுவிட்டு பிஜேபிக்காகத்தான் குரல் கொடுத்து இருக்கிறார் என்பது தெரியவரும்.. அப்படிப்பட்ட ஒருவருக்கு கிடைத்து இருக்கிறது இந்த கவர்னர் பதவி


இந்த கவர்னர் பதவி ஒரு வெகுமதி என்றால் அவர் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதற்காகவும்   பாஜகவின் கொள்கைகள் மற்றும் அதன் அரசியல் போன்றவற்றால் அவர் மேலிடத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டதற்கான வெகுமதியாகவே    இது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் தமிழர்களுக்கு நல்லது செய்தற்காக பாஜக கொடுத்து என்றால் அதை சின்ன புள்ளைங்க கூட நம்பாது என்பதுதான் உண்மை.. இப்படி வெகுமதி பெற்றவர் எப்படி நல்லவராகவு
ம் கண்ணியமானவராகவும் இருக்க முடியும்.


அவர் துணிச்சல் மிக்கவராம் அப்படி என்ன அவர் துணிச்சலாக பாஜக தலைமையை எதிர்த்து தமிழகர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் என்பது சுட்டிக்காட்டினால் அவர துணிச்சல் மிக்கவராக கருதலாம். தனது கட்சி ஆளும் கட்டிலில் இருக்கும் போது அதுவும் வலுவிழுந்து கிடக்கும் ஸ்டாலின் அன்புமணி மற்று
ம் சின்ன சிறிய தலைவர்களை எதிர்த்து குரல் கொடுப்பதில் என்ன துணிச்சல். ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அவருக்கு எதிராகவோ அல்லது கலைஞருக்கு எதிராகவோ குரல் கொடுத்து இருக்கிறாரா அல்லது இருப்பாரா?


அடுத்தாக அவர் மிக நேர்மையாளாராம்
அப்படியென்றால் சோபியா, அனிதா போன்ற மாணவிகளின் வாழ்க்கை குலைய, நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாகி விட்ட தமிழிசை எப்படி நேர்மையாளராக இருக்கமுடியும்

இல்லை இல்லை இந்த கவர்னர் பதவி ஒரு தண்டனை என்றால்  இது  அவருக்கு எதிராக செயல்படும் டி.ராகவன் எஸ்.வி சேகர்  ஹெச்.ராஜா அவர்கள் செய்த சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். அப்படி என்றால் தமிழிசைக்கு அனுதாபம் தெரிவிக்க வேண்டுமே தவிர வாழ்த்துகள் சொல்லக் கூடாது அப்படி வாழ்த்தினால் வாழ்த்துபவர்கள்  டி.ராகவன் எஸ்.வி சேகர்  ஹெச்.ராஜா  போன்றவர்களின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள்.


தமிழிசைக்கு ஆதரவு காட்டவேண்டுமானால்
அவர் மீது நிகழ்த்தப்படும் உருவ கேலி மற்றும் பெண் என்பதற்காக அவரைக் கூடுதலாக வசை பாடுவது ஆகியவற்றை  எதிர்த்து குரல் கொடுத்து அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமே அன்றி வேறு எதற்கும்  அவரைப் பாராட்டுவது தேவையில்லாத ஒரு விஷயம்.

உருவத்தை வைத்து கேலி செய்வது தவறு என்றாலும் அதை வைத்து கேலி செய்வது அரசியலிலும்  சினிமாவிலும் மட்டுமல்ல கருத்துகள் சொல்லும் அளவிலும் வளர்ந்துவிட்டது. அதற்கு காரணம்  நமது தலைவர்ளும் சினிமா துறையினரும்தான்.. செந்தில் யோகிபாபு மற்றும் பலரின் உடல் அமைப்பை வைத்துதான் நகைச்சுவை காட்சிகள் கட்டமைக்கப்ப்டு வருகின்றன. மேலும் பல அரசியல் தலைவர்களின் உடல் அமைப்பு மற்றும் ஊனத்தை வைத்தும் கேலிகள் செய்யப்பட்டுவருகின்றன. இது தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இப்படித்தான் நடக்கிறது டிரெம்பின் உருவ அமைப்பை முகத்தை வைத்து எத்தனை எத்தனை கேலிகள் செய்யப்படுகின்றன.

இப்படி தமிழிசையின் உருவ அமைப்பை கேலி செய்வதை பார்த்த்து கண்டிக்கும் பல நவநாகரிக  அமெரிக்க தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் டிரெம்பின் உருவ அமைப்பை வைத்து கேலி செய்து மகிழ்கிறார்கள்

இப்படி உருவ அமைப்பை வைத்துகேலி செய்வது கேன்சர் வியாதி போல சமுகத்தில் பரவி கிடக்கிறது அதை அவ்வளவு எளிதில் தீர்க்க முடியாது

ஒன்றுமட்டும் உறுதி தமிழ்சையால் நேரடியாக தமிழகத்திற்கு மிகப் பெரிய கெடுதல் ஏதும் நடக்கவில்லை ஆனால் இனி வரப் போகும் தமிழக பாஜக் தலைவரால் நிச்சயம் தமிழகதிற்கு கெடுதல் நேரடியாக வர வாய்ப்புக்கள் மிக அதிகம் என்பது மட்டும் உறுதி


எது எப்படியோ தமிழக் பக்தால்ஸ் ஒன்று சேர்ந்து தமிழிசையின் அரசியல் வாழ்விற்கு  நிரந்தர ஒய்வு கொடுத்துவிட்டார்கள்  இனிமேல் தமிழிசை அவர்கள் தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தலாம்,


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :



#ஹிந்தி தெரியாததால்தான் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லைஎன்று கூறிய தமிழிசைக்கு

கவர்னர் பதவிக்கு கையெழுத்து போடமட்டும் தெரிந்தால் போதும்  ஹிந்தி கூட  தெரிய வேண்டாம் என்று இன்று ஒரு மாநிலத்தின் ஆளுநராக தமிழிசையை ஆக்கிவிட்டார் அமித்ஷா

01 Sep 2019

5 comments:

  1. எச்.ராஜா எஸ்வி.சேகர் போன்றவர்களுக்கு பொறாமை கூட ஏற்படலாம். தமிழகத்தில் பிஜேபி தராக இருந்து சாதிக்க முடியாது. கவர்னர் பதவியில் பொறுப்பும்,இல்லை கவலையும் இல்லை. வசதிகள் சலுகைகளுடன் கால்நதள்ளி விட்டு பென்ஷனும் பெற்றுக் கொள்ளலாம். ஜெகன் மோகன் ரெட்டியும் பிஜேபியின் தீவிர எதிர்ப்பாளராக இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வர்.

      Delete
  2. நீங்க சொன்ன அனைத்து விஷயங்களோடயும் நான் ஒத்துப் போகிறேன் . இது தன்னுடைய கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருந்தால் தான் இது போன்ற வெகுமதிகள் பிற்காலத்தில் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை முன்கூட்டியே கணித்து சுயநலத்துடன் செயல்பட்டதால் கிடைத்த பதவி. ஒரு பெருந்தன்மை மிக்க ஆளுநராக செயல்பட முடியாது என்பதே என்னுடைய கருத்து.

    ReplyDelete
  3. சோபியா வின் வாழ்க்கை குலைய காரணமாக இருந்தாரா?... எதை வைத்து சொல்கிறீர்கள்? 'தவளையும் தன்வாயால் கெடும்' என்பதுபோல சோபியா வாயைகொடுத்து வாங்கிகட்டிக்கொண்டார் என்றால் அதற்கு இவர் என்ன செய்வார்... இவரா விமானத்தில் கோஷம் போட சொன்னார்?....
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.