Thursday, September 19, 2019

பானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி

ஒரு தீவில் மகிழ்ச்சி, சோகம், அறிவு , அன்பு , வசதி  தற்பெருமை மற்றும் உணர்வு   ,உட்பட எல்லா உணர்வுகளும் வசித்து வந்தன.ஒரு நாள் உணர்வு சொன்னது இந்த தீவு சீக்கிரம் ம் முழ்கிவிடும் அதனால் அனைவரும் வெளியேற  வேண்டும் என்று சொன்னது

அதை கேட்ட உடன் அன்பை தவிர அனைத்து உணர்வுகளும் படகை கட்டி வெளியேற திட்டம் போட்டது, ஆனால் அன்பு மட்டும் கடைசி தருணம் வரை  வாழ முயற்சித்தது .

ஒரு நாள் தீவு மூழ்க தொடங்கியது போது எல்லா உணர்வுகளும் அவரவர்கள் தயாரித்த படகில் ஏறி தப்ப முயன்றன.  அப்போதுதான் தன் நிலைமையை உணர்ந்த அன்பு மற்றர்களிடம் உதவி கேட்க தொடங்கியது

செழுமை ஒரு பெரிய படகில் லவவை கடந்து செல்லும் போது   அன்பு, கேட்டது “செழுமை, என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல முடியுமா என்று?”


அதற்கு செழுமை “இல்லை, என்னால் முடியாது. எனது படகு முழுவதும் நிறைய தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. துளி கூட இடமில்லை என்று சொல்லி அனபை கடந்து சென்றது

ஒரு மிக  அழகான படகில் கடந்து வந்த தற்பெருமையிடம் கேட்க காதல் முடிவு செய்து. "தற்பெருமை , தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்று அன்பு கெஞ்சியது!"

“அதற்கு தற்பெருமை  நீங்கள் மிகவும் ஈரத்துடன்  இருக்கிறீர்கள்  உங்களை ஏற்றினால் என் அழகிய படகு அசுத்தம் ஆகிவிடும் அதனால் நான் உங்களுக்கு உதவ முடியாது, என்று சொல்லி அதுவும் கடந்து சென்றது

அடுத்ததாக் சோகம் இன்னொரு படகில் கடக்க  முயன்ற போது  அன்பு கேட்டது, "சோகம், நான் உங்களுடன்  சேர்ந்து கொள்ளட்டுமா என்று கேட்டது."

“ஓ. . . அன்பே, நான்  சோகமாக இருப்பதால் நான் தனித்தே செல்ல விரும்புகிறேன் என்று சொல்லி அது மிகவும் வருத்தத்துடன் சென்றது

அடுத்தாக மகிழ்ச்சி கடந்து செல்லும் போது அன்பு அதை அழைத்த போது அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அன்பு   அழைத்தபோது அதன் காதில் கூட விழவில்லை.

அப்போது திடீரென்று என்று ஒரு  வயதான  குரல் ஒன்று ஒலித்தது , “வா, அன்பே,  என் கூட வா நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று

தை கேட்ட அன்பு அந்த வய்தான குரலுக்குரியவரிடம்  எங்கே செல்கீறீர்கள் என்று கூட கேட்காமல் சென்றது, இறுதியாக அவர்கள் வறண்ட நிலத்திற்கு வந்தபோது, ​​அந்த வயதான பெரியவர் தனது சொந்த வழியில் சென்றார். அந்த  பெரியவருக்கு எவ்வளவு கடன்பட்டு இருக்கிறோம்ள் என்பதை உணர்ந்த அன்பு , இன்னொரு  வயது மூப்பரிடம், “எனக்கு யார் உதவி செய்தது யாரு” என்று கேட்டார்.

அதற்கு அறிவு சொன்னது உன்னை இங்கு வந்து சேர்த்தது  காலம் என்று  பதிலளித்தது.

எல்லோரும் மறுத்து செல்லும் போது காலம் மட்டும் ஏன் எனக்கு உதவியது" என்று அறிவிடம் அன்பு கேட்டது

உடனே அறிவு ஆழ்ந்த ஞானத்துடன் புன்னகைத்து, “அன்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்ள நேரம் மட்டுமே முடியும்” என்று சொல்லி சென்றது..

ஆமாம் சகோதரியே காலம் மட்டும்தான் நம்முடன் கூட வந்து நம் பிரச்சனைகளை தீர்க்கவல்லது.... அந்த காலம் வரும் வரை மன தைரியத்தை இழந்து விடாமல் இருங்கள் எல்லாம் நல்லபடியாக கடந்து செல்லும்


வாழ்க்கை துணை இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு.காலம் ஒன்றே எல்லாவற்றிற்கும் சிறப்பு மருந்து....

பானுமதி வெங்கேடேஸ்வரன்  அவர்களே உங்களால் முடியும் என்றால் உங்கள் கணவருடன் வாழ்ந்து இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று சில மாதங்கள்  தங்கி இருந்தால் மனத்திற்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு பழைய  நிலமைக்கு மீண்டு வரலாம்.....




அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : நான் ஒரு சில பதிவர்களை மட்டும் நேரில் பார்த்தோ அல்லது போனில் பேசியோ இருக்கிறேன்... ஆனால் பல பதிவர்களிடம் அப்படி பேசவில்லை பார்க்கவில்லை என்றாலும் அவர்களின் தரமான பதிவுகளின் மூலம் அவர்களும் எனது உறவுகளாகவே கருதுகிறேன்.. அப்படிப்பட்ட இரு உறவின் அடிப்படையில்தால் பானுமதி அவர்களும் எனதுபெரும் மதிப்பிற்குரிய ஒரு உறவாக இருப்பதால் இந்த பதிவின் மூலம் எனது ஆறுதலை சொல்ல விளைகிறேன்.


எல்லோரும் நலமாக வாழ நான் ஆசைப்படுகிறேன் ... வாழ்க வளமுடன்
19 Sep 2019

7 comments:

  1. இந்த பகிர்வு பானுமதி அம்மாவிற்கு நல்லதொரு ஆறுதலாக இருக்கும்....

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு. அவர்கள் விரைவில் ஆறுதல் பெற வேண்டும்.

    ReplyDelete
  3. மனப்புண்களை ஆற்ற காலம் மிகச்சிறந்த மருந்து.

    ReplyDelete
  4. மிக சரியாக சொன்னீர்கள்.

    காலம் தான் மனப் புண்ணை ஆற்றும்.

    தனிமையில் இருந்தால் நினைவுகள் மேலும் கவலை அளிக்கும்.

    ReplyDelete
  5. நண்பர்களின் ஆறுதல் என்றுமே நல்ல பலனளிக்கும். அவர் விரைவில் மன அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. வித்தியாசமான ஒரு கதையாக இருக்கே கேள்விப்பட்டதே இல்லை... உண்மைதான் காலம் தான் மனக்கவலையை ஆற்றும் மருந்து.. அதனால்தான் அங்கு எழுதினேன்.. “நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”..

    ReplyDelete
  7. இதுவும் கடந்து போகும் நாளாவட்டத்தில் மறதி ஆட்கொண்டுவிடும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.