Friday, September 13, 2019

@avargalUnmaigal
அடுத்த சாவை  அவலுடன் எதிர் நோக்கும் ஊடகங்களும் சமுக வலைத்தள போராளிகளும்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார்.

போலீசார் பேனர் வைத்தவரை கைது பண்ணாமல் அதை பிரிண்ட் செய்த அச்சகத்தாரையும் லாரி டிரைவரையும் கைது செய்து இருக்கிறார்கள். இது சமுக வலைத்தளங்களி
ல் வைரலாக பரவி  ஊடகங்களில் பேசும் நிகழ்வாக மாறி இருக்கிறது


இந்த சுபஸ்ரீயின் மரணம்  இந்திய பொருளாதார சிரழிவை கிண்டல் செய்து கொண்டு இருந்த சமுகவளைத்தள போராளிகளுக்கு அதில் இருந்து ரிலாக்ஸாகி வேறு பதிவு போட கிடைத்த கண்டென்ட்தான் மற்றபடி வேறு ஏதுமில்லை.


அது போலத்தான் ஊடகங்களும் எத்தனை நாள்தான் பொருளாதாரத்தை பற்றியே விவாதம் நடத்துவது அதில் இருந்து மாறுபட்ட விவாதம் நடத்த கிடைத்த கருப் பொருள்தான் இந்த மரணம்

அரசியல் தலைவர்களுக்கு ஸ்டண்ட் அடிக்க கிடைத்த ஒரு வாய்ப்பு.

போலிசாரின் காமெடி விசாரணைக்கான ஒரு வாய்ப்பு

 முக்கியமான அரசியல் வழக்குகளில்  அதிக கேள்விகள் கேட்க முடியாமல்  இருந்த நீதிபதிகளுக்கு வாய் திறந்து கேள்வி கேட்க கிடைத்த ஒரு வழக்கு

யாருக்கு எப்படியோ சுபஸ்ரீயின் பெற்றோர்களுக்கோ இது ஒரு ஈடுகட்ட முடியாத மாபெரும் இழப்பு

இறுதியாக  ஜெயலலிதா மரணத்திற்கே இன்னும் விசாரணை முடியலை இதுல சுபஸ்ரீ செத்தற்க்கா தீர்ப்பு சொல்லிடப் போறாங்க.....

அப்படியே சொன்னாலும்


சுபஸ்ரீ  செத்தற்கு யாரும் காரணமில்லை எமன் தன் பாசக் கயிற்றை வீசியதால்தான் இறந்தார்.. இப்படி ஒரு தீர்ப்பை தமிழக நீதிபதிகள் கொடுக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம்

சரி சரி அடுத்தாக எந்த கட்டிடம் இடிந்து விழும்.... ஸ்கூல் பஸ் ஆக்ஸிடென்ட் ஆகும் அரசு பஸ் பிரேக் பிடிக்காமல்  மோதும்.. குடித்துவிட்டு தலைவர்களின் பிள்ளைகள் இரவில் ரோட்டில் படுத்திருப்பவர்களின் மீது ஏறும் அல்லது ஆட்டோ மீது மோதும்.  அல்லது  சாலையில் நடக்கும் பைக் ரேஸில்  சாவு நிகழும் இப்படிபட்ட சாவுகள் நம் வீட்டில்  விழும் வரை .இப்படி
பட்ட சாவை  அவலுடன் எதிர் நோக்குவோம் . அதன் பின் வைரலாக்குவோம்

பாரத் மாதாகி ஜே


ஜெயலலிதா மர்ம மரண வழக்கை விசாரிக்க அமைத்த விசாரணை கமிஷன் இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறாதா அல்லது அதுவும் மர்மான முறையில் உயிரை விட்டுவிட்டதா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

the-death-of-a-young-woman-in-a-road-accident-in-the-fall-of-the-plugs-banner.

9 comments:

  1. மக்கள் மனதில் மாற்றம் வராதவரை அரசியல்வாதிகள் நல்லவர்களாக மாறப்போவதில்லை.

    ReplyDelete
  2. இதற்கு காரணமாக அரசியல்வாதியை கைது செய்யாமல் பேனரை அச்சடித்த அச்சகத்தை சீல் லவத்ததை என்னவென்று சொல்வது !

    ReplyDelete
  3. வேதனை. அனைத்திலும் அரசியலே பிரதானமாகிவிடுகிறது.

    ReplyDelete
  4. இந்த ரீதியில் போனால மருத்துவ மனயில் உயிர் இழப்பதற்கு மருத்துவரே காரணம் என்று சொல்லிஒரே விசாரணைகளாகவே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சார்... உங்க வீட்டுவழியாப் போறவங்க தலைல உங்க வீட்டு தென்னைமரம் விழுந்து இறந்தால், யாரைக் கைது செய்வார்கள்? யோசிங்க

      Delete
  5. துயரச் செய்தி தான்...
    அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
  6. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete
  7. எத்தனையோ மரணங்கள். அதில் இதுவும் ஒன்று என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது.

    இங்க, இதுதான் ப்ளெக்ஸ் போர்ட் கண்டெண்ட் என்று சொல்லி அந்த அச்சகத்துக்குக் கொடுத்துட்டாங்கன்னா, அவங்களே ப்ரிண்ட் பண்ணி, அதனை இன்ஸ்டால் செய்வதுவரை பார்த்துக்குவாங்க. அதுனால இதுல தவறு அந்த அச்சகத்தினோடதுதான். ஆர்டர் கொடுத்தவருடையது கிடையாது. பலரும் அதனைப் புரிந்துகொள்ளாமல் கமெண்ட் எழுதறாங்க.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.