Thursday, September 5, 2019

டீச்சர்ஸ் டே குறும்புகள்

டீச்சருக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம்

பள்ளிக்கூடத்தில் டீச்சர் பாடம் சொல்லி கொடுத்துவிட்டு அதன் பின் கேள்வி கேட்பாங்க

ஆனால் வீட்டில் மனைவி கேள்வியை முதலில் கேட்டுவிட்டு அதன் பின் நமக்கு லெக்சர் கொடுப்பாங்க..



பள்ளிக்கூடத்தில் டீச்சர் ஸ்கேலால் அடிப்பாங்க

வீட்டில் மனைவி பூரிக்கட்டையால் அடிப்பாங்க


பள்ளிக் கூடத்தில் வருஷ வருஷம் புது டீச்சர் வருவாங்க

ஆனால் வீட்டில் அதே மனைவிதானுங்க 

பள்ளிக்கூடத்தில் படிக்கலைன்னாலும் அமைதியாக இருந்தால் டீச்சர் இரக்கப்பட்டு பாஸ் மார்க் போட்டு பாஸாக்கி விடுவாங்க

ஆனால் வீட்டில் மனைவி சொன்னதை கேட்டு அமைதியாக இருந்தாலும் இதெல்லாம் உருப்படாது என்பார்கள்

டீச்சர் தேவை

எல்லோரும் ஆசிரியர்களை பாராட்டி எழுதுகின்றார்கள் ஆனால் எனக்கு வாய்த்த ஆசிரியர்களை புகழ்ந்து எழுத ஒன்றுமே இல்லை... அடுத்த வருஷத்திலாவது ஆசிரியர் தினத்தன்று ஆசிரியரை பாராட்டி எழுத எனக்கு ஒரு அழகான ஆசிரியை தேவை #பிரார்த்தனை பண்ணுங்க பரஞ்ச்

எல்லோரும் ஆசிரியர் தினத்தன்று அவங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களை ஆஹா ஒகோன்னு புகழ்ந்து வாழ்த்தி எழுதுறாங்க. அப்படி எழுதுகிறவர்கள் இணையத்தில்  செயல்படுவதையும் எழுதுவதையும் வைத்து  பார்க்கும் போது அந்த்டீச்சர்கள் இவ்வளவு கேவலமாகவா  கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது# இப்படி எல்லாம் எனக்கு மட்டும் ஏன் தோன்றுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஆசிரியர் சொல்லிவிட்டு தேர்வு வைப்பார். மனைவி சொல்லாமல் திடீர் திடீரென்று தேர்வு வைப்பார். ஆசிரியர் வைக்கும் தேர்வில் பாசாக வாய்ப்பு உண்டு. மனைவ்யின் தேர்வு நீட் போன்றது. தேறுவது ரொம்பக் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. ''மனைவியின் தேர்வு நீட் போன்றது ... தேறுவது ரொம்பக் கஷ்டம்'' ... ஹ ஹஹா டி.என்.முரளிதரன் சாருக்கு ரொம்பதான் குசும்பு...!!!
      https://www.scientificjudgment.com/

      Delete
  2. ஹாஹா.... இதை எழுதுவதற்கு முன் பூரிக்கட்டையை ஒளித்து வைத்து விட்டீர்கள் தானே?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.