Onion prices are rising because people prefer briyani ,salad over thayir sadam ,pickle: Nirmala Sitharaman
புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது, இடத்தைப் பொறுத்து விலை 60 முதல் 80 ரூ. உயர்ந்து இருக்கிறது விலைகள் குறித்த கவலைகளை நிதியமைச்சர் செல்வி நிர்மலா சீதாராமன் பேசும் போது இது ஒரு டிமாண்ட் சப்ளை பிரச்சினை என்றும், தேவை அதிகரிப்பதன் காரணமாக விலை உயர்வு நாடு முழுவதும் பிரச்சனையாகி இருக்கிறது.
nirmala_sitharaman டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி சீதாராமன், தயிர்சாதம் தோசை இட்லி ஊறுகாய் போன்ற பாரம்பரிய இந்திய உணவுகளிலிருந்து பிரியாணி மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை நோக்கி மக்கள் செல்கின்றனர் இதனால் சந்தையில் தேவை அதிகரிக்கிறது..
வெங்காயம் இந்திய சாலட்டில் மற்றுமல்ல பிரியாணியிலும் இன்றியமையாத பகுதியாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், தேவை அதிகரிப்பால் விலை உயர்வது அதிகமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்
மேலும் வெங்காய விலை உயர்வுக்கு இஸ்லாமியர்கள் தாங்கள் செய்யும் பிரியாணிக்கு அதிக அளவு வெங்காயம் போடுவதுமட்டுமல்ல அதற்கு செய்யும் ரைய்த்தாவிற்கும் அதிக அளவு உபயோகிப்பதுதான் காரணம்... இதை அவர்கள் முதலில் நிறுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஒடிப் போகவேண்டும்
அதுமட்டுமல்ல வெங்காய விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் கிறிஸ்துவர்கள் தோசை இட்லி என்று சாப்பிடுவதற்கு பதிலாக கிறிஸ்துவ நாட்டை பார்த்து சாலட் செய்து சாப்பிடுகிறார்கள் அதில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொள்கிறார்கள் இப்படி மேலை நாட்டு உணவு வகைகளை காப்பி அடித்து பின்பற்றுபவர்கள் ஆண்டி இண்டியன்ஸ் அதனால் இதை அவர்கள் நிறுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் அமெரிக்கா மற்றும் லண்டல் பக்கம் ஒடிப் போகவேண்டும்
அமைச்சரின் கருத்தைச் சேர்த்து, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களைமட்டும் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது பாஜகவீற்கு எடுத்தற்கு எல்லாம் முட்டு கொடுக்கும் பக்தால்ஸ் மாற்று கட்சியின் கூட்டத்திற்கு மாறுவேஷத்தில் சென்று அங்கு தரப்படும் பிரியாணி மற்றும் குவார்ட்டர்களை சாப்பிட்டு பழகிய காரணத்தால் பாஜக கட்சியினர் அரசு ஆதரவாக் போரட்டம் நடத்தும் போது இஸ்லாமியர்கள் நடத்தும் பிரியாணி கடைக்குள் நுழைந்து பிரியாணி குண்டாவை பிரியாணியுடன் சேர்த்து தூக்கி கொண்டு ஒடுவதால் வெறுப்படைந்த இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவுடன் மேலும் அதிக அளவு பிரியாணியை தாயாரிப்பதும் இந்த விலை உயர்விற்கு காரணம்.. இது எல்லாம் மாறும் வரை வெங்காய விலை உயர்வு என்பது தடுக்க முடியாதாக இருக்கும்
மேலும் அந்த அதிகாரி சொல்லும் போது ஊறுகாய் வெள்ளரி, கேரட் மற்றும் கீரை விலைகள் வெங்காயத்தின் விலையை விட கடுமையாக உயரவில்லை என்பதற்கு பொதுமக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கொசுறு :
இதற்கிடையில், ஒரு டெல்லி போக்குவரத்து போலீஸ்காரர் ஒரு போக்குவரத்து குற்றவாளியிடம் 1/2 கிலோ வெங்காயத்தை லஞ்சமாக பெரும் நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப் பட்டு சமுக வலைதளங்களில் மிக வைரலாக பரவி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்து இருக்கிறது... இந்த வீடியோவை தடை செய்ய வேண்டும் என்று சமுக வலைத்தள நிறுவனங்களின் CEO விற்கு சுப்பிரீம் கோர்ட் மூலம் மத்திய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி ;இது ஒரு நகைச்சுவை பதிவு படித்து சிரிக்க மட்டும்
தலைப்புகள்: # நிர்மலா சீதாராமன் #onion # விலை உயர்வு #BoycottMillennials
மண்ணியல், பூகோளம், வரலாறு, பொருளாதாரம், கணக்கு, இயற்பியல், வேதியியல் இது போன்ற பாடங்களில் நமக்கு தனிப்பட்ட ஆர்வம் அக்கறையிருந்தால் மட்டுமே இந்த துறை நமக்கு இனிக்கும் வசப்படும். இல்லாவிட்டால் கொடூர கொடுமையாக போய்விடும். இந்த அம்மா நிச்சயம் அடுத்த நான்கு வருடங்களும் கஷ்டப்படத்தான் போகின்றது. இவர் இந்த துறையில் ஜொலிக்கவே முடியாது. படுபயங்கர கிரிமினல் மனப்பான்மையுடன் இந்திய நிதித்துறையை கையாள வேண்டும். நரசிம்மராவ் அப்படித்தான் மன்மோகன் சிங் அவர்களை தேர்ந்தெடுத்தார். எத்தனை பிரச்சனைகள் வந்த போதிலும் எனக்குத் தெரியாது என்று நரசிம்மராவ் ஒதுங்கி விடுவார். மன்மோகன் தான் விடாமல் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸராக மாற்றிக் கொண்டு இருந்தார். காரணம் முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு. கடைசி வரைக்கும் பிரதமர் ஆன பின்பு கூட அவர்கள் கொள்கை மாறவில்லை. அருண் ஜெட்லி நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று வாழ்ந்தவர். ப சிதம்பரம் கடைசி வரைக்கும் பங்குச் சந்தையில் மட்டுமே கவனம் செலுத்தினார். காரணம் அங்கு தான் அவரின் வருமானம் அனைத்தும் இருந்தது. நாள் கணக்கில் பல பில்லியன் டாலர் மகனுக்கு கொடுத்துக் கொண்டு இருந்தது. இப்போது இந்த அம்மா. இப்போது சொல்லுங்க. இந்த ஆட்டத்தில் இவர் சரிப்பட்டு வரமாட்டார். இந்திய ஜிடிபி என்பது மாய்மாலம். காரணம் இந்தியாவில் முறைசாரா தொழில் என்பது அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தை விட அதிகமானது. அவை எதுவும் இந்திய நிதித்துறை கணக்கில் வரவே வராது. இந்த நாட்டை கையாள தனித்திறமை வேண்டும்.
ReplyDeleteமோடி மிகவும் புத்திசாலி தனது பொருளாதார தவறுகளை மறைக்க பலியாடாக நிதி அமைச்சராக களம் இறக்கப்பட்டவரே நிர்மலா சீதா ராமன்...அதுமட்டுமல்ல இவர் பிராமனாராக இருப்பதால் எல்லோரும் கரித்து கொட்ட ஆரம்பிப்பார்கள் அதன்காரணமாக தன்மீது விழு பார்வைகளை மோடி சாமர்த்தியமாக தவிர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்...
Deleteநீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் உள்ள வெங்காயத்தைப் பயன்படுத்தாவிடின், நீரிழிவை எப்படிக் கட்டுப்படுத்துவது?
ReplyDeleteஇந்தம்மாவுக்கு தமிழிசையே மேல் போல. தயிர் சாதத்த இவங்க வீட்லதான் சாப்டுவாங்க? ஒரே நாடு ஒரே சாப்பாடுன்னு சட்டம் வந்தாலும் வரும். யார் கண்டா?
ReplyDeleteஇதுதான் ஆரம்பம். இன்னும் நான் எதிர்கொள்ளவேண்டியன நிறையவே உள்ளன. வேறு வழி இல்லை. அனுபவிக்கத்தான் வேண்டும்போலுள்ளது.
ReplyDeleteஆஆஆ வெங்காயம் விலை ஏறிட்டுதோ?:).. அப்போ ட்றுத்துக்கு அனியன் பஜ்ஜி நஹி:))
ReplyDeleteகலாய்ச்சாலும் அவங்க சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு. நம்ம கன்சம்ப்ஷன் ரொம்பவே மாறிவிட்டது. அதுக்கு ஏற்றபடி விவசாயம் வளரலை. மைதா, வெங்காயம், உருளை, சீனி இவை மிக மிக அதிகமாக நாம் கன்ஸ்யூம் செய்கிறோம் (முந்தைய காலங்களைவிட) யோசித்துப் பாருங்கள்
ReplyDelete