Sunday, September 8, 2019

@avargalUnmaigal
பிடித்தால் படியுங்க பிடிக்கலைன்னா படிச்சுட்டு போங்க அவ்வளவுதானே


காஷ்மீரில் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசையாய் பேசி வந்த பக்தால்ஸுக்கு மோடியின் பொருளாதார கொள்கை நல்லா ஆப்பு வைத்துவிட்டது..# அடேய் முதலில் வேலைக்கு வழி பாருங்க அதற்கு பின் உங்க சோற்றுக்கு வழி பாருங்க.... கூறை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை மாதிரிதான் பக்தால்ஸின் பேச்சுக்கள் இருக்கிறது



இஸ்லாமியர்களை காறி துப்புவதே பக்தால்ஸ்களின்  வழக்கமாகிபோச்சு

ஆனால் இஸ்லாமியர் மன்னர்களிடம் இருந்து அவார்ட் வாங்குவதே மோடிக்கு பெருமையாகி போச்சு



எனது அரசை மக்கள் தான் நடத்துகிறார்கள்!-  மோடி
நாட்டின் பொருளாதார சிரழிவீற்கு மக்கள்தான் காரணம் என்று நைஸ்காக பிளேட்டை மாற்றுகிறார். கில்லாடிய்யா நீ


திமுகவில் அறிவாளிகள் 10 பேர் வாருங்கள் உங்களோடு விவாவதம் செய்ய நான் தயார்-மாரிதாஸ்
முட்டாள் பயலோடு விவாவதம் செய்ய எந்த அறிவாளியாவது வருவானா என்ன?

ஐயப்பனுக்கு  மாலை போட்டு  போகும் போதும்  பழனி முருகனுக்கு காவடி எடுத்து போகும் போதும்  மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதும் அத்திவரதரை தரிசிக்க கோடி கணக்கில் பக்தர்கள் வரும் போது வராத மத கலவரம் புள்ளையார் சதுர்த்தி முடிந்து புள்ளையாரை ஆற்றில் கரைக்க முற்படும் போது மட்டும் வருகிறது என்றால் அது இந்துத்துவா திவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது சாமன்ய மக்களுக்கு தெரியாத என்ன?

இஸ்லாமியர்கக் கிறிஸ்துவர்கள் மத மாற்றம் செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார்கள் ஆனால் இந்துத்துவா ஆட்கள் அதை மிக எளிதாக செய்து கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு சிவக்குமார் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் உடனே அவரை இஸ்லாமியராக மாற்றிவிட்டார்கள் அவரின் மகன் சூர்யாவீற்கு சுன்னத் செய்து சம்சுதீன் என்றும் பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள்.. ஹீஹிஹீ


தமிழகத்தில் உள்ள பெண் தலைவர்கள் எல்லாம் யாரோ ஒருவரின் கைப்பாவையாகத்தான் இருக்கிறார்களே தவிர தனித்து நின்று ஜொலிக்க முடியவில்லை#ஜெயலலிதா, கனிமொழி, தமிழிசை மற்றும் பலர்
எனது பிறப்புக்கு காரணமே நேருதான் என்று தேசிய தலைவர் சொல்லாமல் இருக்க வேண்டும்


மோடி நீண்ட நாள் வாழனும்... அவரே தொடர்ந்து ஆட்சி செய்யனும். இப்ப மக்களுக்கு நல்லது செய்யகிற மாதிரி இன்னும் கொஞ்ச்ம  அதிகமாக செய்யனும்.. இதுதான் என்னுடைய பிள்ளையார் சதுர்த்தி பிரார்த்தனை...பிள்ளையார் என் பிரார்த்தனை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு மிக மிக அதிகம்

இந்திய பொருளாதாரம் விழ்ச்சி அடைந்தாலும் மோடியின் வளர்ச்சி மட்டும் வீழ்ச்சியடையவில்லை


இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மோடியை குறை கூறுகிறார்கள் அவரின் எதிரிகள் .அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்ன என்று கூட தெரியாது.. அப்படி இருக்க அந்த ஒன்றுதெரியாத நல்ல மனிதரை குறை கூறுவது சரிதானா? மனசாட்சி இல்லாமல் அவரை குறை சொல்லுவதை நிறுத்துங்கள்


@avargalUnmaigal

ரஷ்யாவின் வளர்ச்சிக்காக மோடி 1 பில்லியன் டாலர் கொடுத்து இருக்கிறாராம். அப்படியானால் ரஷ்யா நாட்டின் உயர்ந்த விருது அடுத்தது மோடிக்குதான் கிடைக்கும் என்பது கன்பார்ம்தான்

இத்தனை நாள் பாஜகவில் இருக்கும்  #சிபி #ராதாகிருஷ்ணனின் உண்மையான பெயர்  ராபர்ட் கிறிஸ்ட் என்று எத்தனை பேருக்கு தெரியும்


சுகி சிவம், சிவக்குமார் வரிசையில் அடுத்தாக மதம் மாறியவர் சிபி #ராதாகிருஷ்ணன் மாற்றியவர்கள் இந்துத்துவா ஆட்கள்


சீனா அருணாச்ச‌ல் பிர‌தேச‌த்திற்குள் ஊடுருவி ரோட்டும் போட்டு விட்ட‌து. சாட்டலைட் ஆதாரம்.
ச‌ங்கிக‌ள் இன்னும் பொங்கி எழ‌வில்லை

சந்திராயன் தோல்விக்கு பிறகு விஞ்ஞனிகளை தட்டிக் கொடுக்கும் இந்தியர்கள்  ஒரு வேளை அந்த முயற்சி வெற்றி பெற்று இருந்தால் வறுமையில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கும்போது விண்வெளி ஆய்வுக்கு ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி கேட்டு மோடியை கரித்து கொட்டி இருப்பார்கள்...


சின்ன வயசிலே நான் விஞ்ஞானியாக ஆகணும் என்று ஆசைப்பட்டேன்....மோடி சிவனை அணைத்து தட்டி கொடுப்பதை  பார்த்தபின் என் ஆசை நிறைவேறாதற்கு மிக சந்தோஷப்பட்டேன் கடவுளுக்கும் நன்றி சொன்னேன்

சோகத்தில் இருக்கும்  இந்தியர்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டுமென்றால் மோடி செல்லும் விமானத்தில் உள்ள தொடர்புகள் துண்டிக்கபட்டிருக்கிறது என்ற செய்தி மக்களுக்கு சென்று அடைய வேண்டும்



நிர்மலா சீதாரமனுக்கு இருக்கும் பயமெல்லாம்   விஞ்ஞானி சிவனை மோடி கட்டி பிடித்து ஆறுதல் சொன்னது போல பொருளாதார தோல்விக்கு நம்மை கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்வாறோ என்பதாகத்தான் இருக்கும்இஸ்ரோவின் தலைவர் சிவன் மட்டும்  நடிகர் சிவக்குமார் மாதிரி  இந்து மதத்தை பற்றி ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் இந்த பக்தால்ஸ் எல்லாம் உடனே  இந்த சிவன் அமெரிக்காவிடம் கைக்கூலி வாங்கிட்டுதான் இப்படி விக்ரமை செயலிலக்க செய்து இருக்கிறார் என்று நா கூசாமல் குற்றம் சாற்றுவார்கள்

@avargalUnmaigal

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் ஒரே குடும்பத்தில் இருந்து மட்டும் தலைவர்கள் பதவிக்கு வருவதை ஏன் எதிர்ப்பதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்


கட்டுபடுத்துவதும் அணைப்பதும்


https://avargal-unmaigal.blogspot.com/2019/09/teachers-day.html



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.