Sunday, August 4, 2019

@avargal unmaigal
அறிவை விற்று குப்பை கழிவுகளை வாங்கும் இந்தியா Shocking! Over 1,21,000 mt plastic waste 'slyly' imported in India


அமெரிக்க போன்ற மேலை நாடுகள் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அறிவை இறக்குமதி செய்து கொள்கின்றன. அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் மேலை நாடுகளில் இருந்து கழிவுகளை (குப்பைகளை ) இறக்குமதி செய்து கொள்கின்றன..

Swachh Bharat Mission (Clean India Mission), அப்படி என்றால் இந்தியாவை சுத்தமாக வைத்து கொள்ள போட்ட திட்டம் என்று பலரும் கருதுகிறார்கள் ஆனால் உண்மையில் மேலை நாடுகளின் கழிவுகளை பெற்று சுத்தகரிப்பது என்பதுதான் இந்த திட்டம் போல இருக்கு...


 சீனா  மேலை நாடுகளில் இருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு முற்றிலும் தடை போட்டவிட்ட பின் மேலை நாடுகள் என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்த போது ஆபத்து பாண்டவர்கள் போல இந்தியா இலங்கை மலேசியா போன்ற ஆசிய நாடுகள் உதவ முன் வந்து இருக்கிறது அதிலும் இந்தியா முண்ணணியில் இருக்கிறது.


சீனா தடை போட்டதற்கு காரணம் ரீசைக்களிங்க் பாராஸஸிங்கிற்காக சீனா நாட்டு நிறுவனங்கள் மேலை நாட்டு கழிவுகளை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் பல மூலப் பொருட்களை தயாரித்து வந்ததது அதனால் உள்நாட்டு குப்பைகுளங்கள் தேங்கின அதனால் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்விட்டது... சீனர்களுக்கு இது புத்தியில் வர சிறிது காலம் ஆகியது..


ஆனால் நம்நாட்டு அரசுக்கு அடுத்தவரின் அனுபவத்தில் இருந்து பாடங்க கற்றுக் கொள்ளலாம் என்று அறிவு சிறிதும் இல்லாததால் இப்போது அது மேலை நாடுகளில் இருந்து குப்பை கழிவுகளை இறக்குமதி அதிகம் செய்து வருகிறது


முன்பு இந்திய குப்பை தொழிலாளர்கள்  ப்ளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கி 2 கிலோ 45 ரூபாய்க்கு விற்று பொழைப்பை நடத்தி வந்து இருக்கின்றனர்.... இப்போது மேலை நாட்டுகளில் இருந்து மிக குறைந்த விலைக்கு இப்படிப்பட்ட கழிவுகள் கிடைப்பதால் கழிவு பொருட்களை வாங்குபோர் உள்நாட்டில் இருந்து கிடைக்கும் கழிவுகளுக்கான விலைகளை குறைத்து விட்டனர். முன்பு 45 ரூபாய்க்கு விற்ற குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள் இப்போது அதை 25 ரூபாய்க்கு விற்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்


இப்படி குப்பை கழிவுகளில் இருந்து ப்ளாஸ்டிக் பொருட்களை மற்றும் ரீசைக்கிள்களுக்கு பயன்படும் பொருட்களை பொறுக்கி விற்று வரும் தொழிலில் இந்தியா முழுவது லட்சக்கணக்கான மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர் இப்படி செய்வதன் மூலம் பலர் தங்கள் குடும்பதிற்கான வருமானத்தை ஈட்டுகின்றனர்... இப்படி இருந்த நிலையில் வெளிஞ்சாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இப்படிப்பட்ட கழிவிகளை இறக்குமதி செய்வதால் இவர்களின் வருமானம் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது... பிரச்சனை இதோடு முடியவில்லை.. இப்படி விலை குறைந்ததால் இவர்கள் உள்நாட்டுக குப்பைகளை சேகரிக்கும் அளவும் குறைந்து வருவதால் அப்படிப்பட்ட பொருட்கள் மறுசுழற்ச்சிக்கு வராமல் எரிக்கப்படோ அல்லது அப்படியே பூமியில் புதைந்தோ வருவதால் நம் மண்ணின் தன்மை நீண்டகாலத்திற்கு பாதிக்கபடுவதோ சுற்றுபுற சூழ்னிலைக்கும் பெருத்த பாதுப்பு ஏற்பட்டுவருகிறது இதனை உணர்ந்த சில மாநிலங்கள் பளாஸ்டுக் பயன்பாட்டிற்கு தடைகள் கொண்டு வருகின்றன. ஆனால் அது போதுமான அளவிற்கு வெற்றியை தரவில்லை

இதை இப்போது ஆளும் மத்திய அரசு உடனடிகவனத்தில் எடுத்து அதற்கு தடை போடாவிட்டால் இந்தியாவில் உள்ள சுயநல முதலாளிகளால் இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்திய ஏழை தொழிலாளர்களுக்கும் பாதிப்புதான்



அன்புடன்
மதுரைத்தமிழன்.
 ‘We Are Swamped’: How a Global Trash Glut Hurt a $25 Billion Industry

India’s garbage business, from scrap pickers on the ground through layers of sorting middlemen to plastic pellet producers, is struggling with low prices after China restricted garbage imports


Shocking! Over 1,21,000 mt plastic waste 'slyly' imported in India

4 comments:

  1. கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு. இந்திய மண்ணின் மக்களின் எதிர்காலம் குறித்து கவலை தான் பிறக்கிறது.

    ReplyDelete
  2. ஆபத்தான நிலை.

    இந்தியாவிலேயே சில மாநிலங்கள் தங்கள் குப்பைகளை அடுத்து மாநில எல்லையில் கொட்டுகின்றன. கேரளா தனது மக்கா குப்பைகளை (பிளாஸ்டிக், மருத்துவக்கழிவுகள்) தமிழக எல்லையில் கொட்டி விட்டுச் சென்று விடுகின்றன.

    ReplyDelete
  3. சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இத்தகைய கழிவுகளுக்கு தடை விதித்துவிட்டது. ஆனாலும் பல தொழில் நிறுவனங்கள் இவற்றை இரகசியமாக (slyly) இறக்குமதி செய்கின்றன. இவனை அனைத்தும் LC என்ற எவ்வித ஏற்பாடும் இல்லாமல் இறக்குமதியாளர்களை நம்பி மேலை நாடுகளும் இந்த களவாணிகளுக்கு துணை போகின்றன. இந்தியாவிலேயே தமிழகம் போன்ற பல மாநிலங்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதித்துள்ளன என்பதுதான் உண்மை. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாடுகளில் இத்தகைய திருட்டுத்தனமான செயல்பாடுகள் நடக்கத்தான் செய்யும். என்ன செய்வது<
    ற்

    ReplyDelete
  4. மிக மிக மோசமான விஷயம். உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

    நம்மூரிலேயே கேரளா தமிழக எல்லையில் குறிப்பாக கோயம்புத்தூர் பாலக்காடு வழியில் மதுக்கரை அருகே பார்டரில் இங்கு கொட்டுகிறது. அதுவும் ஆபத்தான குப்பைகள். தமிழ்நாட்டை விருத்திகேடு என்று சொல்பவர்கள் அவர்கள்!!!!!!!!!!!

    ஏற்கனவே வெளிநாடுகள் நம்மூரை மருந்துகளின் கிடங்காக மாற்றிவிட்டதே. அங்கு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படும் மருந்துகள் இங்கு சகஜமாகக் கிடைக்கும் அளவு..இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.