Tuesday, August 29, 2017

@avargalunmaigal
இதற்கெல்லாம்வா கவர்னரிடம் போவார்கள் (படிக்க தவறாதீர்கள் ஒரு பக்க கலாய்ப்பு நாளிதழை )


கவர்னரா அல்லது தரகரா?

சென்னை: கவர்னர் சட்டசபையில் பதவி ஏற்பவர்களுக்கு சட்டப்படியாக பதவி ஏற்க துணை செய்யவேண்டும் ஆனால் இந்த கவர்னர் ஒருபடி மேலே சென்று எடப்பாடியையும் பன்னீர் செல்வத்தையும் கையை பிடித்து இணைத்து வைத்தாராம். அதனை அறிந்த மக்கள் தங்களுக்கும் அது போல உதவ வேண்டும் என்று சொல்லி கவர்னா¢டம் மனு கொடுக்க செல்கிறார்களாம். அப்படி சென்ற இருவர்களை வழி மறித்து பேட்டி கண்டபோது அவர்கள் மனுக் கொடுக்க செல்லும் காரணத்தை மதுரைத்தமிழனிடம் சொன்னார்கள் அதன் உரையாடலதான் இது.

மதுரைத்தமிழன் : என்னது உங்க மகனுக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த சண்டையை தீர்த்து வைக்க கவர்னா¢டம் மனு கொடுக்கப் போறீங்களா?
மனு கொடுக்க செல்பவர் : ஆமாங்க அவர்தான் சண்டையை தீர்த்து வைத்து இருவரையும் கையைபிடித்து ஒன்றாக சேர்த்து வைப்பாராமே
மதுரைத்தமிழன் : ஙே.......

மதுரைத்தமிழன் : ஐயா நீங்கள் யாரு?
நான் திரைப்பட துறையை சார்ந்தவன்.
மதுரைத்தமிழன் : அப்படியா நீங்கள் எதற்க்காக கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப் போகிறீர்கள்?

அதுவாங்க அஜித்துக்கும் பளுசட்டைகாரருக்கும் நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க சொல்லி அவா¢டம் மணு கொடுக்க போகிறேன்.
மதுரைத்தமிழன் : ஙே.......


மதுரைத்தமிழன் : ஐயா நீங்கள் யாரு?
நான் திமுக கழக தொண்டன்.
மதுரைத்தமிழன் : அப்படியா நீங்கள் எதற்க்காக கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப் போகிறீர்கள்?
அதுவாங்க ஸ்டாலினுக்கும் அழகி¡¢க்கும் நடக்கும் சண்டைய தீர்த்து வைக்க சொல்லி அவா¢டம் மனு தரப் போகிறேன்.
மதுரைத்தமிழன் : ஙே.......


இப்படி நான் பேட்டி எடுத்து கொண்டிருக்கும் போது  எனக்கு போட்டியாக அதிரா என்பவர் வந்து அங்கிருக்கும் ஒருவா¢டம் நீங்கள் எதற்க்காக கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்?அதுவாங்க இந்த ம்துரைத்தமிழனுக்கும் அவர் வீட்டில் பக்கத்தில் இருக்கும் ஆளுக்கும் நடந்த சண்டையை தீர்த்து வைக்க மனு கொடுக்க போகிறேன் என்று சொன்னார்
அதனை கேட்ட அதிரா அவர்தான் பக்கத்துவீட்டார்களிடையே மதுரைத்தமிழன் ரொம்ப நல்லபடியாக பழகுவதாக்த்தான் சொன்னாரே அப்படி இருக்க அவர்களுக்குகிடையே எதற்க்காக சண்டை வந்தது தொ¢யலையே..
அதுவாங்க மதுரைத்தமிழன் பக்கத்துவீட்டுகாரர்களிடம் நல்லா பழகுவது உண்மைதான் ஆனால் பக்கத்து வீட்டுகாரர் மனைவியிடம் ரொம்ப அதிகமாகவே பழகிட்டாராம் அதுனலாதான் சண்டை வந்துடுச்சு அவர்களுக்கிடையே
அதிரா: ஙே!!!!!!!!!

-----------------------------------------
செய்தி : பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குர்மித் ராம் ரஹீம் சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோர்ட் தீர்ப்பு.. தீர்ப்பை கேட்டதும் பக்தர்கள் தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவ்தும் கலவரத்தை தூண்டி  வன்முறையில் இறங்கினார்கள்.

ஹலோ பக்தாஸ் இதை கேட்டு மனம் சோர்ந்துவிட வேண்டாம். 20 ஆண்டுகள் கழித்து வரும் சாமியார் ரேப் பண்ணுவதற்காக நீங்கள் பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து வாருங்கள். சாமியார் வந்து ரேப் பண்ணினால் உங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்,


என்னது சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையா?
அப்ப எங்க பெண் குழந்தைகளை யாரு ரேப் பண்ணுவா பக்தாஸ்க்கள் அதிர்ச்சி

ஒரே ஒரு சாமியார்க்கும் மட்டும்தான் தண்டனயா மற்ற சாமியார்களையும் விசா¡¢த்து தண்டனை அளிக்கப் போவதில்லையா? இது மாபெரும் வஞ்சகம்


என்னது உங்க மகனுக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த சண்டையை தீர்த்து வைக்க கவர்னா¢டம் மனு கொடுக்கப் போறீங்களா?

ஆமாங்க அவர்தான் சண்டையை தீர்த்து வைத்து இருவரையும் கையைபிடித்து ஒன்றாக சேர்த்து வைப்பாராமே


என்னது அஜீத்துக்கும் பளூ சட்டைகாரருக்கு இடையே உள்ள பிரச்சனையை கவர்னர்தான் தீர்த்து வைக்கனும்மா இது ரொம்பவே அநியாயமாக அல்லவா இருக்கிறது.

சாமியாருக்கு 20 ஆண்டுகள் தீர்ப்பு வழங்கிய இந்திய கோர்ட், கேரளா நடிகர் தீலீப்பிற்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை தரப் போகிற்து என்பதுதான் இப்போது நம் முன் எழும் அடுத்த கேள்வி


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

 1. துளசி: ஐயோ தாங்கலை உங்கள் நக்கல் நையாண்டி! சாமியரைப் போட்டுத் தள்ளாம..தீர்ப்பெல்லாம் வழங்கிட்டு...திலீப் நன்றாகவே மாட்டிக் கொண்டார். கேரளம் என்பதால் தப்பிக்க முடியாது என்றே தோன்றுகிறது...

  கீதா: ஹாஹாஹாஹா அதிரா எங்கே இன்னும் காணலை?? அதிரா நீங்க எப்போ மதுரையை பேட்டி எடுத்தீங்க சொலல்வே இல்லை!! ஹாஹாஹா...தேம்ஸ்ல போராட்டம் ஆரம்பிக்கலையா அதிரா...

  மதுரை சாமியார் நக்கல் செம சிரிச்சுட்டேன் மதுரை...ஆனா அந்த சாமியாருக்கு இந்தத் தண்டனை எல்லாம் போதாது...அறிவு கெட்ட பக்தர்கள்..நம்ம மக்கள் அறிவிலிகள்னு ரொம்பவே ப்ரூவ் ஆகுது..

  திலீப் செஞ்சதை நம்பவே முடியலை...ஆனா நல்லா மாட்டிக்கிட்டாரு.

  ReplyDelete
 2. ஜோக்ஸ் ரசித்தேன்...
  சாமியாருக்காக போராடுற காட்டுமிராண்டிகதான் நம்ம போராட்டங்களைக் கிண்டல் பண்ணியவர்கள்... சாட்டையடி.

  ReplyDelete
 3. கவர்னர் என்ன செய்வார் பாவம் ,மத்தியில் இருப்பவர்களின் சொல்படி சேர்த்து வைக்கிறார் :)

  இப்படிப்பட்ட முட்டாள் பக்தாஸ் இருக்கும்வரை, சாமியார்களுக்கு கொண்டாட்டம்தான் :)

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ இதுக்கு பேர்தான் 'மத்திய'ஸ்த'மோ' வெளங்கிருச்சீ ! வெளங்கிரும்.😆

   Delete
 4. சிண்டு முடியும் பணிக்கு உங்களை நியமிக்கலாம் என ஏகமனதார்ந்த தீர்மானம் நிறைவேற்றி முன் மொழிய அறிக்கை அனுப்பி விட்டேன். செம்ம நக்கல்

  ரேண்டே ரெண்டு பேரை கற்பழிச்சதுக்காக ரெண்டு இலட்சம் ச்ச்சே ரண்டு கோடி,, சே ரண்டு கோடித்துண்டு சாமியாருக்கு தண்டனைன்னு ஆரைக்கேட்டு தீர்ப்பு சொன்னிங்களாம்? போராடுவோம் போராடுவோம், எங்க சாமியாரை கிண்டல் செய்யும் மதுரைத்தமிழர் வீட்டின் முன் சுண்டல் கிடைக்கும் வரை போராடுவோம்.

  இது நல்லாருக்கிலையா?

  ReplyDelete
 5. ஒரே ஒரு சாமியாருக்கு மட்டும் தண்டனையா? சரியான கேள்வி.

  ReplyDelete
 6. கவர்னர் என்ன செய்வார் பாவம் அவர் ஒரு பொம்மைதானே மைய அரசு என்ன சொன்னாலும் கேட்கவேண்டும்

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.