Wednesday, December 21, 2016



கோமாளி ஆட்சியில் இந்தியா வல்லரசாக ?


பணம் அடிப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அடித்த பணத்தில் 75 சதவிகிதம்  VIP களுக்கு  ஷேர் செய்துவிட்டு மீதி உள்ளதை மட்டும் பொது மக்களுக்கு ஷேர் செய்வதால்தான் பணப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.கூடிய சிக்கிரம் VIP க்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு விடும் அதன் பின் மக்களின் பணப் பிரச்சனை கண்டிப்பாக கவனிக்கப்படும் அது வரை மக்கள் எல்லையில் இருக்க கூடிய இராணுவத்தினரை நினைத்து கஷ்டங்களை பொறுத்து கொள்ள வேண்டும்.


இந்தியா வல்லரசாக பொதுமக்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும் கஷ்டம் இல்லாமல் வல்லரசாக ஆக முடியாது ஜெய்ஹிந்த் பாரத மாதா கீ ஜே !


ஸ்மார்ட்  போனில் ரேஷன் கார்ட் வருவது எப்போ?

அன்புடன்
மதுரைத்தமிழன்


கொசுறு : என்னது சாகித்ய அகாதெமி விருதை சாரு நிவேதாவிற்கு கொடுக்கலையா? அநியாமா இருக்கே? இப்படியெல்லாம் செய்தால் அவ்ர் இனிமேல்  மலையாளத்தில்தான் எழுதப்போகிறார்.. ஐய்யகோ இனிமேல் தமிழ் எப்படி வளரும்



ஜெயலலிதா என்ற பெண்மணி தமிழக முதலமைச்சாராக இருந்தார் என்பது பற்றி யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? இருக்கிறது என்றால் கடைசியாக அவர் முதலமைச்சராக இருந்தது எந்த ஆண்டு என்பதை சரியாக சொல்லுபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தரப்ப்படும்





ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா நின்றால் தோற்று போவார் என்று சொல்பவர்களுக்கு சசிகலாவின் மதிப்பை வைத்து அல்ல பணத்தின் மதிப்பை வைத்து கணிக்க தெரியவில்லை


வாட்ஸ்ப்பில் படித்தது  இந்த போட்டோ தகவல்...கோமாளி ஆட்சியில் இப்படியும் நடக்கலாம்

21 Dec 2016

8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies

    1. என்ன உங்களை இந்த பக்கம் ரொம்ப நாளாக காணவில்லை பிஸியோ?

      Delete
  2. வாட்ஸப் செய்தி எங்களுக்கும் வந்துச்சு..உண்மையா?!

    கீதா: சகோ வாட்சப் செய்தி உண்மையாக இருந்தால் இதைப் போல ஒரு கோமாளித்தனம் வேறெதுவும் இல்லை. நொந்து நூடுல்ஸ். மட்டுமல்ல தொழில்நுட்பம் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை பயக்குமோ அத்தனைக்கு வாட்சப்பில் உடான்ஸ் செய்திகள் புலி வருது கதை போல் சுற்றி விபரீதம் விளைவிக்கும் செய்திகளாகவும் ஆகிறதோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies

    1. இது உண்மையல்ல ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடும் மத்திய அரசின் செயல்பாடுகளை கிண்டல் செய்து யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள்

      Delete
  3. whatsapp-ல் வந்ததை எல்லாம் உண்மைன்னு நம்பாதீங்க அண்ணே..

    ReplyDelete
    Replies
    1. இந்த வாட்ஸ்ப்பில் வந்த செய்தி உண்மை என்று கருதி நான் வெளியிடவில்லை இது மோடியின் நடவடிக்கையை நையாண்டி செய்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கருதிதான் வெளியிட்டு இருக்கிறேன் சகோதரரே

      Delete
  4. எத்தனையோ கோமாளிகளும் bloggers ஆக இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. கோமாளி blogers மட்டுமல்ல கோமாளி மக்களும்தான் இருக்கிறார்கள் அதனாலதான் கோமாளி பிரதமர் ஆட்சியில் இருக்கிறார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.